spark Go 2023 https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 04:53:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ரூ.15,000 போன்ல இருக்கிற வசதிகள் ரூ.6,999 போன்ல! டெக்னோ அதிரடி! https://www.91mobiles.com/tamil/rs-6-999-priced-smartphone-launched-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=rs-6-999-priced-smartphone-launched-in-india Tue, 24 Jan 2023 11:01:36 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5313 சீன டிரான்ஷன் ஹோல்டிங் நிறுவனத்துக்கு சொந்தமான டெக்னோ மலிவு விலை ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அது Tecno Spark Go (2023) ஸ்மார்ட்போன் ஆகும்.. ரூ.10,000  முதல் ரூ.15,000 வரையிலான விலைப்பிரிவு ஸ்மார்ட்போன்களில் இருக்கும் அம்சங்கள் Tecno Spark Go (2023) மொபைலில் இருக்கிறது.   வேரியண்ட் ரூ.7,000க்கு கீழ் அறிமுகமான ஸ்மார்ட்போன் டெக்னோ ஸ்பார்க் கோ 2023 ஸ்மார்ட்போனானது மூன்று வேரியண்ட்களில் அறிமுகமாகி இருக்கிறது. அது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி […]

The post ரூ.15,000 போன்ல இருக்கிற வசதிகள் ரூ.6,999 போன்ல! டெக்னோ அதிரடி! first appeared on .

]]>

Highlights

  • Tecno Spark Go (2023) என்ற ஸ்மார்ட்போன் ரூ.6,999 என்ற விலையில் அறிமுகம் ஆகி இருக்கிறது.
  • இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி, டூயல் ரியர் கேமராக்கள், ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் என பல மேம்பட்ட அம்சங்கள் இருக்கிறது.

சீன டிரான்ஷன் ஹோல்டிங் நிறுவனத்துக்கு சொந்தமான டெக்னோ மலிவு விலை ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அது Tecno Spark Go (2023) ஸ்மார்ட்போன் ஆகும்.. ரூ.10,000  முதல் ரூ.15,000 வரையிலான விலைப்பிரிவு ஸ்மார்ட்போன்களில் இருக்கும் அம்சங்கள் Tecno Spark Go (2023) மொபைலில் இருக்கிறது.

 

வேரியண்ட்

ரூ.7,000க்கு கீழ் அறிமுகமான ஸ்மார்ட்போன் டெக்னோ ஸ்பார்க் கோ 2023 ஸ்மார்ட்போனானது மூன்று வேரியண்ட்களில் அறிமுகமாகி இருக்கிறது. அது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 4 ஜிபி மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகும். இதில் உள்ள 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை தான் ரூ.6,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிற வேரியண்ட்களான 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 4 ஜிபி மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

நிறங்கள்

புதிய டெக்னோ ஸ்மார்ட்போனானது பிளாக், நெபூலா பர்ப்பிள் மற்றும் உயுனி ப்ளூ ஆகிய நிறங்களில் வெளியாகி இருக்கிறது. இதன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி வேரியண்ட் தற்போதே விற்பனைக்கு கிடைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

டிஸ்ப்ளே

Tecno Spark Go (2023) ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான HiOS 12.0 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. 6.56 அங்குல எச்டி+ ஐபிஎஸ் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 720×1,612 பிக்சல் அடர்த்தியைக் கொண்டுள்ளது. அதேபோல் 480 நிட்ஸ் உச்ச பிரகாச நிலை மற்றும் 90 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி விகிதமாக இதில் இருக்கிறது.

 

சிப்செட்

Tecno Spark Go (2023) ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஏ22 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. முன்னதாகவே குறிப்பிட்டது போல் 4 ஜிபி ரேம் ஆதரவு இதில் உள்ளது.

 

கேமரா

இந்த புதிய டெக்னோ ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமராக்கள் இருக்கிறது. அதாவது 13 எம்பி பிரைமரி சென்சார் மற்றும் ஏஐ லென்ஸ் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என இதன் முன்புறத்தில் 5 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

மெமரி விரிவாக்கம்

Tecno Spark Go (2023) ஸ்மார்ட்போனில் விர்ச்சுவல் ரேம் நீட்டிப்பு வசதி வழங்கப்பட்டிருக்கிறது. அதுபோல், 64 ஜிபி வரையிலான சேமிப்பக ஆதரவு இதில் வழங்கப்பட்டிருந்தாலும் பிரத்யேகமாக மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதியும் உள்ளது. இதன்மூலம் 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

 

பேட்டரி

இதில் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. சார்ஜ் செய்வதற்கு 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. 32 மணிநேர காத்திருப்பு நேரம், 12 மணிநேர கேமிங், 124 மணிநேரத்துக்கும் மேல் இசை மற்றும் 25 மணிநேர வீடியோ ப்ளேபேக் டைம் அணுகலை இந்த பேட்டரி மூலம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கனெக்டிவிட்டி

இந்த டெக்னோ ஸ்மார்ட்போனில் டூயல் சிம் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0, ஓடிஜி மற்றும் யூஎஸ்பி டைப்-சி இணைப்பு ஆதரவுகள் உள்ளது. பாதுகாப்பு வசதிக்கு என ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் வழங்கப்பட்டிருக்கிறது.

The post ரூ.15,000 போன்ல இருக்கிற வசதிகள் ரூ.6,999 போன்ல! டெக்னோ அதிரடி! first appeared on .

]]>
ரூ.6999க்கு அறிமுகமாகிறதா டெக்னோ ஸ்பார்க் கோ 2023 மொபைல்? – லீக் தகவல் https://www.91mobiles.com/tamil/tecno-spark-go-2023-price-and-specification-details-revealed/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tecno-spark-go-2023-price-and-specification-details-revealed Thu, 19 Jan 2023 05:34:23 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5178   டெக்னோ ஸ்பார்க் கோ 2023 ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடலாகும். இந்த போனின் வெளியீட்டு தேதியை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2023 மொபைலின் அம்சங்கள், தோற்றம் போன்ற விவரக்குறிப்புகள் கசிந்துள்ளன. PassionateGeekz  என்ற டிப்ஸ்டர் இவற்றை தன் பக்கத்தில் வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த போன் POCO C50 மற்றும் Redmi A1 போன்றவற்றுக்கு எதிராகப் போட்டியிடும். இது தவிர சமீபத்தில் வெளியான இந்த போனின் பாக்ஸ் விபரங்களையும் டிப்ஸ்டர் […]

The post ரூ.6999க்கு அறிமுகமாகிறதா டெக்னோ ஸ்பார்க் கோ 2023 மொபைல்? – லீக் தகவல் first appeared on .

]]>
 

Highlights

  • Tecno நிறுவனம் இந்தியாவில் ‘டெக்னோ ஸ்பார்க் கோ 2023’ (Tecno Spark Go 2023) என்ற புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த இருக்கிறது.
  • வரவிருக்கும் டெக்னோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும்.

டெக்னோ ஸ்பார்க் கோ 2023 ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடலாகும். இந்த போனின் வெளியீட்டு தேதியை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2023 மொபைலின் அம்சங்கள், தோற்றம் போன்ற விவரக்குறிப்புகள் கசிந்துள்ளன. PassionateGeekz  என்ற டிப்ஸ்டர் இவற்றை தன் பக்கத்தில் வெளிப்படுத்தி இருக்கிறது.

இந்த போன் POCO C50 மற்றும் Redmi A1 போன்றவற்றுக்கு எதிராகப் போட்டியிடும். இது தவிர சமீபத்தில் வெளியான இந்த போனின் பாக்ஸ் விபரங்களையும் டிப்ஸ்டர் லீக் செய்துள்ளார். இதன் படி, இந்த ஸ்மார்ட்போனின் மோனிக்கரை காட்டுகிறது. இது தவிர, போனின் லைவ் படம் மற்றும் போனின் அனைத்து முக்கிய விவரக்குறிப்புகளையும் இந்த லீக் பட்டியலிடுகிறது.

 

மெமரி

Tecno Spark Go 2023 விரைவில் ஆஃப்லைன் சந்தையில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த போன் இந்தியாவில் 3ஜிபி ரேம் உடன் 32ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வெறும் ரூ.6,999 விலைக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது ஒரு சிறப்பு விற்பனை விலை என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல், இதில் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் இருக்கவும் வாய்ப்புள்ளது.

 

தோற்றம்

வெளியான லைவ் புகைப்படங்களின் படி, Tecno Spark Go 2023 போன் 16.66 cm டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது தோராயமாக 6.55 அங்குல அளவு ஆகும். இந்த டிஸ்ப்ளே ஒரு HD+ தெளிவுத்திறனைக் கொண்டிருக்கும் டிஸ்பிளே ஆகும். இதன் மேல் முன் பக்க கேமராவிற்கான ஒரு வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனின் உள்ளே 5000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டிருக்கும். இது வாட்ஸ் சார்ஜிங் வசதியைக் கொண்டு இருக்கும் என்பது தெரியவில்லை.

கேமரா

Tecno Spark Go 2023 மொபைல் USB Type-C போர்ட்டையும் கொண்டிருக்கும். இது தவிர, இந்த மொபைல் 13MP பிரைமரி கேமராவுடன் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பை கொண்டிருக்கும், இது VGA சென்சார் அல்லது 2MP டெப்த் சென்சார் உடன் வரும் என்று எதிர்பார்க்கலாம். இந்த போனின் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் மற்றும் LED பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இது AI ஃபேஸ் அன்லாக் அம்சத்தையும் ஆதரிக்கும் எனத் தெரிகிறது. இந்த போனின் முன்பக்கத்தில் 5MP செல்ஃபி கேமரா ஒன்றும் இருக்கிறது.

 

நிறம்

டெக்னோ ஸ்பார்க் கோ 2023 ஒரு தட்டையான பிரேம் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. எண்ட்லெஸ் பிளாக், யுயுனி ப்ளூ மற்றும் நெபுலா பர்பில் என  இது மூன்று நிறங்களில் வெளிவரும்.

 

சிப்செட்

இது MediaTek Helio A22 சிப்செட் உடன் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. எந்த  ஆண்ட்ராய்டின் எந்த இயங்குதளம் வழங்கப்பட்டு இருக்கும் என்பது வெளியாகவில்லை. இந்தியாவில் இந்த மொபைலை கடைகளைத் தவிர, அமேசான் தளத்தின் வழியாகவும் வாங்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த Tecno Spark Go 2023 மொபைல்  ரூ.6000 – ரூ.7000 ரூபாய் விலை பிரிவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

2022ஆம் ஆண்டின் சிறந்த மொபைலைத் தேர்ந்தெடுக்க இங்கே க்ளிக் செய்யவும்!

https://www.indiangadgetawards.com/

The post ரூ.6999க்கு அறிமுகமாகிறதா டெக்னோ ஸ்பார்க் கோ 2023 மொபைல்? – லீக் தகவல் first appeared on .

]]>