thunivu https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 12:55:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 நெட்ஃப்ளிக்ஸில் டாப் 10ல் மூன்று இடங்களைப் பிடித்த ‘துணிவு’ https://www.91mobiles.com/tamil/thunivu-movie-update/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=thunivu-movie-update Wed, 15 Feb 2023 12:39:48 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5865 இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி […]

The post நெட்ஃப்ளிக்ஸில் டாப் 10ல் மூன்று இடங்களைப் பிடித்த ‘துணிவு’ first appeared on .

]]>

Highlights

  • அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’திரைப்படம் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது.
  • நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் 10 இடத்தில் இருக்கும் படங்கள் பட்டியலில் ‘துணிவு’ திரைப்படம் மூன்று இடங்களை பிடித்துள்ளது.

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் 10 இடத்தில் இருக்கும் படங்கள் பட்டியலில் ‘துணிவு’ திரைப்படம் மூன்று இடங்களை பிடித்துள்ளது. அதாவது, ‘துணிவு’ திரைப்படத்தின் ஹிந்தி வெர்ஷன் முதலிடத்தையும் தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷன் இரண்டாவது மற்றும் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. இதனை ஓடிடி தளம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், நான் இங்கிலீஸ் (non english) பிரிவில் முதல் ஐந்து இடத்தில் இரண்டு இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் ‘காந்தாரா’. இப்படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை குவித்தது. நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது. கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர்.

இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில், ‘காந்தாரா’ படம் குறித்து புதிய செய்தி பரவி வருகிறது. அதன்படி, இப்படத்தை ஆங்கிலத்தில் டப்பிங் செய்து வெளிநாடுகளில் திரையிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post நெட்ஃப்ளிக்ஸில் டாப் 10ல் மூன்று இடங்களைப் பிடித்த ‘துணிவு’ first appeared on .

]]>
வாரிசு, துணிவு படத்துக்கு சிறப்பு காட்சிகள் கிடையாது. கட்-அவுட்டையும் தூக்கு – அரசு அதிரடி https://www.91mobiles.com/tamil/tamil-nadu-government-ordered-no-special-shows-for-varisu-and-thunivu-on-these-dates/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tamil-nadu-government-ordered-no-special-shows-for-varisu-and-thunivu-on-these-dates Tue, 10 Jan 2023 08:46:07 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4848 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தியேட்டரில் கட் அவுட் வைக்கவும், பால் அபிஷேகம் செய்யவும் தடை விதித்துள்ளது. அதிக டிக்கெட் விலை தொடர்பான புகார்கள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெஷல் ஷோ நடிகர் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் நாளை வெளியாக உள்ளன. அஜித்தின் துணிவு […]

The post வாரிசு, துணிவு படத்துக்கு சிறப்பு காட்சிகள் கிடையாது. கட்-அவுட்டையும் தூக்கு – அரசு அதிரடி first appeared on .

]]>

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தியேட்டரில் கட் அவுட் வைக்கவும், பால் அபிஷேகம் செய்யவும் தடை விதித்துள்ளது.

அதிக டிக்கெட் விலை தொடர்பான புகார்கள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்பெஷல் ஷோ

நடிகர் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் நாளை வெளியாக உள்ளன. அஜித்தின் துணிவு படம் அதிகாலை 1 மணிக்கு வெளியாகிறது. விஜய்யின் வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு வெளியாகிறது. ஜனவரி 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை சிறப்பு காட்சிகளை வெளியிட இரண்டு படக்குழுவும் முடிவு செய்திருந்தது.

அனுமதி இல்லை

இந்நிலையில், விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13, 14, 15 மற்றும் 16ம் தேதி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பேனர் கூடாது

மேலும், திரையரங்குகளில் உள்ள விஜய், அஜித் படங்களின் பேனர்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் பேனர்கள் வைத்து பாலாபிஷேகம் செய்யக் கூடாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் காட்சியில் பாலாபிஷேகம் செய்வதற்காக பால் வண்டிகளில் இருந்து பால் திருடும் நிலை உருவாகலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிக டிக்கெட் விலை

இதுமட்டுமின்றி அதிக விலையில் டிக்கெட் விற்பனை செய்வதாக புகார் எழுந்தால் வாரிசு மற்றும் துணிவு படக்குழுக்கள் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேர்கொண்ட பார்வை படத்துக்கு அதிக டிக்கெட் விற்ற நிலையில், அதற்கான அபராதம் விதிக்கப்பட்டது. அதுபோல் இப்போதும் அதிக டிக்கெட் விலை தொடர்பாக புகார் வெளியானால் தியேட்டர் நிர்வாகங்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில் குடியரசு தினத்தன்று ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி டிரெண்டிங் ஆகி வருகிறது. தீபிகா படுகோன் ஷாருக்கானுக்கு இணையாக சண்டை போடும் காட்சிகள் மற்றும் ஜான் ஆபிரகாமின் வில்லத்தனம் பார்வையாளர்க்ளை கவருகிறது.

ட்விட்டரில் பகிர்ந்த விஜய்

நடிகர் விஜய் வழக்கமாக தனது படங்களின் போஸ்டர்கள் மற்றும் டீசர், ட்ரெய்லர்களை மட்டுமே ட்விட்டரில் ட்வீட் போட்டு வந்த நிலையில், தற்போது ஷாருக்கானின் பதான் படத்தின் தமிழ் ட்ரெய்லரை விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே ஷாருக்கானின் அடுத்த ஜவான் படத்தில் விஜய்யின் கேமியோ இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் விஜய் ட்ரெயிலரை பகிர்ந்து இருக்கிறார்.

விஜயைப் போல் தெலுங்கில் ராம்சரணும் இந்த படத்தின் ட்ரெயிலரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். தென்னிந்தியாவில் ப்ரமோஷன் செய்ய ஷாருக்கான் இன்னும் வரவில்லையே என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பான் இந்தியா அளவில் பிரபலமான நடிகர்களை வைத்து பதான் ட்ரெய்லர் வெளியீட்டு இருக்கிறார் ஷாருக்கான்.

The post வாரிசு, துணிவு படத்துக்கு சிறப்பு காட்சிகள் கிடையாது. கட்-அவுட்டையும் தூக்கு – அரசு அதிரடி first appeared on .

]]>
துணிவு படத்தின் நீளம் இதுதான்! 17 இடங்களில் ‘மியூட்’, U/A சர்டிபிகேட்! https://www.91mobiles.com/tamil/ajith-kumar-s-thunivu-running-time-and-censor-board-certified-details/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ajith-kumar-s-thunivu-running-time-and-censor-board-certified-details Tue, 03 Jan 2023 07:35:25 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4649 எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ‘துணிவு’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் ‘துணிவு’ படத்தின் ‘சில்லா சில்லா’, காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல […]

The post துணிவு படத்தின் நீளம் இதுதான்! 17 இடங்களில் ‘மியூட்’, U/A சர்டிபிகேட்! first appeared on .

]]>

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

‘துணிவு’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் ‘துணிவு’ படத்தின் ‘சில்லா சில்லா’, காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி 36 மில்லியன் முறை பார்க்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில், துணிவு படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதில் துணிவு படத்திற்கு யு/ஏ சான்றிதழை தணிக்கைக்குழு கொடுத்துள்ளதாகவும், படம் 2 மணிநேரம் 25 நிமிடங்கள் 48 நொடிகள் ஓடக்கூடிய வகையில் ரன்னிங் டைம் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இப்படத்தில் வரும் வடக்கன்ஸ் என்கிற வார்த்தைக்கு பீப் போட்டதாகவும், காசேதான் கடவுளடா பாடலில் வரும் காந்தி என்கிற வார்த்தைக்கு பீப் போடப்பட்டதாகவும், ஒரு சில காட்சிகளில் வந்த கெட்ட வார்த்தை என மொத்தம் 17 இடங்களில் மியூட் போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விஜய்யின் வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால், இரண்டு படங்களுக்கும் சரி சமமாக தியேட்டர்கள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் துணிவு படத்தின்  தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த லவ் டுடே திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல்கள் பரவின. இதற்கு போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். அதில், லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை நான் வாங்கவில்லை. இது தொடர்பாக வெளியான செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் பொய்யானவை என தெரிவித்துள்ளார் . தேவையில்லாத வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு துவங்கியதாக மனோபாலா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் தான் கலந்து கொள்வதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அதில்,  “லோகேஷ் மற்றும் எங்கள் தளபதியை சந்தித்தேன்… அதே ஆற்றல் முழு வீச்சில்.. முதல் நாளே தூள்..” என்று நடிகர் மனோபாலா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வைரலாக்கினர்.

இந்நிலையில் அந்த ட்வீட்டை மனோபாலா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கி விட்டார். அதற்கு பதில் இன்னொரு ட்வீட்டை பதிவிட்டு இருக்கிறார். அதில், எனது ட்வீட்டை நீக்கிவிட்டேன்… என்னை மன்னியுங்கள்.. என்று குறிப்பிட்டுள்ளார். மனோபாலாவின் புதிய பதிவு ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மனோபாலா தரப்பில் இதற்கு எந்த வித விளக்கமும் கொடுக்கவில்லை.

 

The post துணிவு படத்தின் நீளம் இதுதான்! 17 இடங்களில் ‘மியூட்’, U/A சர்டிபிகேட்! first appeared on .

]]>
மீண்டும் வரும் பொன்னியின் செல்வன்! https://www.91mobiles.com/tamil/ponniyin-selvan-movie-update/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ponniyin-selvan-movie-update Tue, 27 Dec 2022 11:32:41 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4587 மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘அடிவானத்தில் ஏதோ விசேஷம் இருக்கிறது. என்னவென்று […]

The post மீண்டும் வரும் பொன்னியின் செல்வன்! first appeared on .

]]>

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘அடிவானத்தில் ஏதோ விசேஷம் இருக்கிறது. என்னவென்று உங்களால் யூகிக்க முடிகிறதா..? ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் புதிய அறிவிப்பு நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய் சேதுபதியும் பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்பும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே இந்தியில் வெற்றி பெற்ற ‘அந்தாதூன்’ படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தாதூன் படம் தற்போது தமிழில் ‘ரீமேக்’ செய்யப்பட்டுள்ளது. ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை படக்குழுவினர் மறுத்தனர். பிறகு கிறிஸ்துமஸ் பண்டிகையில் தியேட்டரில் வெளியாகும் என்றும் அறிவித்தனர். ஆனால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் தொழில்நுட்ப பணிகள் இன்னும் முடியாததால் தள்ளிவைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

‘துணிவு’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் துணிவு படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. தற்போது துணிவு பட விளம்பர பேனரை விமானத்தில் இருந்து குதித்து பறக்கவிட்ட நிகழ்வு துபாயில் நடத்துள்ளது. இதுதொடர்பான வீடியோவை படக்குழு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் அஜித் வழியில்… (Going A.K. way) 31 டிசம்பர் 22 அன்று ஒரு அற்புதமான புதிய அறிவிபுடன் வருகிறோம்! என பதிவிட்டு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘வாரிசு’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சில நாட்களுக்கு முன் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்த பல ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், ரசிகர்கள் பலர் உற்சாக மிகுதியால் அதிகப்படியான இருக்கைகளை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து சேதம் குறித்த கணக்கெடுப்பு நடத்திய பின் ‘வாரிசு’ பட தயாரிப்பு நிறுவனத்திடம் உரிய அபராதம் வசூலிக்கப்படும் என்று நேரு உள் விளையாட்டரங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post மீண்டும் வரும் பொன்னியின் செல்வன்! first appeared on .

]]>
துணிவு படத்தை ரூ.70 கோடிக்கு நெட்பிளிட்ஸ் வாங்கியதா? https://www.91mobiles.com/tamil/netflix-bags-thunivu-ott-release-rights/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=netflix-bags-thunivu-ott-release-rights Mon, 26 Dec 2022 11:50:52 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4560 நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு திரைப்படத்தை அதிக தொகைக்கு நெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வாங்கி உள்ளது. வரும் பொங்கல் பண்டிகைக்கு இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் வங்கி கொள்ளை படமாக நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது. இதனிடையே இந்த படத்தை நெட்பிளிக்ஸ் இந்த படத்தை வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மீண்டும் போனி கபூர், ஹெச். வினோத் மற்றும் அஜித் […]

The post துணிவு படத்தை ரூ.70 கோடிக்கு நெட்பிளிட்ஸ் வாங்கியதா? first appeared on .

]]>

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு திரைப்படத்தை அதிக தொகைக்கு நெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வாங்கி உள்ளது.

வரும் பொங்கல் பண்டிகைக்கு இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் வங்கி கொள்ளை படமாக நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது. இதனிடையே இந்த படத்தை நெட்பிளிக்ஸ் இந்த படத்தை வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மீண்டும் போனி கபூர், ஹெச். வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகி உள்ள படம் துணிவு. இந்த முறை மிஸ்ஸே ஆகாது என்பது போல படத்தை ஸ்ட்ராங்காக உருவாக்கி உள்ளாராம் இயக்குநர் ஹெச். வினோத். மங்காத்தா படத்திற்கு பிறகு நடிகர் அஜித் வெறித்தனமான நெகட்டிவ் ரோலில் இந்த படத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அவர் இசையில் உருவான சில்லா சில்லா மற்றும் காசேதான் கடவுளடா பாடல்கள் வெளியாகி டிரெண்டாகி வரும் நிலையில், 3வது சிங்கிளாக இன்று “கேங்ஸ்டா” பாடல் மாலை 7 மணிக்கு வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான அந்த பாடலின் பாடல் வரிகளே அனல் தெறித்த நிலையில், பாடலும் பட்டையைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ள துணிவு திரைப்படம் பிப்ரவரி மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அதிக தொகை கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் அஜித், மஞ்சு வாரியர் நடித்துள்ள துணிவு படத்தை வாங்கி உள்ளது.

நெட்பிளிக்ஸில் தான் சர்வதேச அளவில் ஹிட்டான ஹெய்ஸ்ட் படமான மணி ஹெய்ஸ்ட், ஸ்குவிட் கேம் உள்ளிட்ட வெப்சீரிஸ்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், பேங்க் ஹெய்ஸ்ட் படமான துணிவு படத்தையும் நெட்பிளிக்ஸ் ரொம்பவே விரும்பி வாங்கி உள்ளது. இந்த ஆண்டு நெட்பிளிக்ஸில் வெளியான பல தமிழ் படங்கள் சொதப்பிய நிலையில், ரசிகர்களை மீண்டும் கவர வேண்டும் என அஜித்தின் துணிவு படத்தை வாங்கி உள்ளது நெட்பிளிக்ஸ்.

சுமார் 70 கோடிக்கும் அதிகமான தொகைக்கு அஜித்தின் துணிவு படத்தின் போஸ்ட் ரிலீஸ் உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனவரி 12ம் தேதி துணிவு படம் வெளியாகும் நிலையில், காதலர் தினக் கொண்டாட்டமாக நெட்பிளிக்ஸில் பிப்ரவரி மாதம் துணிவு ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ச்சியாக அஜித்தின் படங்கள் தோல்வியை தழுவினாலும், துணிவு பிஸினஸ் தாறுமாறாக நடந்துள்ளதாம். அஜித் சம்பளம் 70 கோடி உட்பட படத்தின் மொத்த பட்ஜெட் 160 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு தியேட்டர் உரிமை 60 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாம்.

அதேபோல் கேரளா தியேட்டர் ரைட்ஸ் 2.50 கோடி ரூபாய், கர்நாடகா தியேட்டர் உரிமை 3.50 கோடி ஆந்திரா, தெலங்கனா உரிமை 1.50 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தி டப்பிங் ரைட்ஸ் 25 கோடி ரூபாய் வரை விலை போயுள்ளதாம்.

அதேபோல், வெளிநாட்டு தியேட்டர் உரிமை 14 கோடி ரூபாய்க்கும், ஆடியோ ரைட்ஸ் 2 கோடிக்கும் விற்பனையாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் 70 கோடி ரூபாய்க்கும், சாட்டிலைட் ரைட்ஸை கலைஞர் டிவி 20 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளதாம். இதனால் துணிவு திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே மொத்தம் 200 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post துணிவு படத்தை ரூ.70 கோடிக்கு நெட்பிளிட்ஸ் வாங்கியதா? first appeared on .

]]>
ஜிகர்தண்டா 2 படத்தில் எஸ் ஜே சூர்யாவோடு இணையும் நடிகர்! https://www.91mobiles.com/tamil/jigarthanda-2-movie-update/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=jigarthanda-2-movie-update Thu, 08 Dec 2022 13:50:50 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4189 கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். பலரின் பாராட்டுக்களையும்,நல்ல வரவேற்பையும் பெற்ற ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி 8 வருடங்களை நிறைவு செய்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு இதனை நினைவு கூர்ந்து ஜிகர்தண்டா படத்தின் […]

The post ஜிகர்தண்டா 2 படத்தில் எஸ் ஜே சூர்யாவோடு இணையும் நடிகர்! first appeared on .

]]>

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.

பலரின் பாராட்டுக்களையும்,நல்ல வரவேற்பையும் பெற்ற ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி 8 வருடங்களை நிறைவு செய்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு இதனை நினைவு கூர்ந்து ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டிருந்தார். அதன்படி இப்படம் விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜிகர்தண்டா-2 படத்தில் நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் ராகவா லாரன்ஸ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியானது. மேலும், இப்படத்தின் பூஜை மதுரையில் வருகிற டிசம்பர் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வர உள்ளது. இதில் மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்று உள்ளன. துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா சில்லா’ என்று தொடங்கும் பாடல் நாளை (9-ந் தேதி) வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். அனிருத் பாடி இருந்த இந்த பாடலை ரசிகர்கள் கேட்க ஆர்வமாக இருந்தனர்.

இந்நிலையில் ‘சில்லா சில்லா’ பாடல் இணையதளத்தில் திருட்டுத்தனமாக கசிந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாடலை வெளியிட்டவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க விசாரணை நடந்து வருகிறது. மக்கள் சில்லா சில்லா பாடலை பகிரவேண்டாம் என்று படக்குழுவினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழின் முன்னனி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன், தற்போது ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ளார். இதனிடையே பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், வெற்றிமாறன் இயக்கவுள்ள புதிய வெப் தொடரில் பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வெற்றிமாறன் அடுத்ததாக ஒரு வெப் தொடரை எழுதி, அதனை தயாரிக்க உள்ளார். அதில், நான் பணியாற்ற உள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே வெற்றிமாறன் தயாரித்த பேட்டைக்காளி வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஜிகர்தண்டா 2 படத்தில் எஸ் ஜே சூர்யாவோடு இணையும் நடிகர்! first appeared on .

]]>
லண்டனில் வாரிசு ஜன. 12ம் தேதி ரிஸீஸ்! https://www.91mobiles.com/tamil/it-is-reported-that-vijay-s-varisu-will-release-on-january-12/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=it-is-reported-that-vijay-s-varisu-will-release-on-january-12 Thu, 01 Dec 2022 06:50:45 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4018 விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகிறது. வாரிசு பொங்கல் ரிலீஸை முன்னிட்டு சென்னையில் உள்ள முக்கியமான திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் பேனர் வைக்கத் தொடங்கி விட்டனர். இந்நிலையில், விஜய் ரசிகர்களை அலர்ட் செய்யும் விதமாக லண்டனில் வாரிசு படத்தை வெளியிடும் பட நிறுவனம் ஒரு அப்டேட் கொடுத்துள்ளது. பொங்கல் ரிலீஸ் விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது. தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சில கட்டுப்பாடுகளால், வாரிசு ரிலீஸாவதில் சிக்கல்கள் […]

The post லண்டனில் வாரிசு ஜன. 12ம் தேதி ரிஸீஸ்! first appeared on .

]]>

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகிறது. வாரிசு பொங்கல் ரிலீஸை முன்னிட்டு சென்னையில் உள்ள முக்கியமான திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் பேனர் வைக்கத் தொடங்கி விட்டனர். இந்நிலையில், விஜய் ரசிகர்களை அலர்ட் செய்யும் விதமாக லண்டனில் வாரிசு படத்தை வெளியிடும் பட நிறுவனம் ஒரு அப்டேட் கொடுத்துள்ளது.

பொங்கல் ரிலீஸ்

விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது. தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சில கட்டுப்பாடுகளால், வாரிசு ரிலீஸாவதில் சிக்கல்கள் இருந்தன. ஆனால், அதன் பின்னர் வாரிசு ரிலீஸுக்கு இருந்த பிரச்சினைகள் பேசி முடிக்கப்பட்டன. இதனையடுத்து பொங்கல் ரிலீஸை கன்ஃபார்ம் செய்யும் விதமாக படக்குழு சார்பில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனால் உற்சாகமான விஜய் ரசிகர்கள், வாரிசு செலிப்ரேஷனை இப்போதே தொடங்கிவிட்டனர்.

பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு படத்துடன் அஜித்தின் துணிவும் மோதவுள்ளது. இதனால், யார் வெயிட் என்ற போட்டியை இருதரப்பு ரசிகர்களும் இப்போதே தொடங்கிவிட்டனர். குறிப்பாக சென்னையில் உள்ள முக்கியமான திரையரங்குகளில் வாரிசு படத்திற்கான பிரம்மாண்டமான பேனர்களை வைத்து தெறிக்கவிடுகின்றனர் விஜய் ரசிகர்கள். சென்னை தவிர்த்து மற்ற ஊர்களிலும் விஜய் ரசிகர்கள் வாரிசு ப்ரோமோஷன் வேலைகளை காட்டத் தொடங்கிவிட்டனர்.

FDFS

இந்நிலையில், வாரிசு, துணிவு படங்களுக்கு சமமான திரையரங்குகள் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், FDFS எனப்படும் முதல் நாள் முதல் காட்சி பார்க்கவும் ரசிகர்கள் ரெடியாகி வருகின்றனர். வழக்கமாக அதிகாலை 4 மணிக்கு FDFS காட்சிகள் திரையிடப்படும் நிலையில், வாரிசு படத்துக்கு அதற்கும் முன்னதாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது. வாரிசு திரைப்படத்தை இங்கிலாந்தில் வெளியிடும் அஹிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், ஜனவரி 12ம் தேதி வாரிசு FDFS கன்ஃபார்ம் என போஸ்டர் வெளியிட்டுள்ளது. இதனால், லண்டனில் உள்ள விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். முக்கியமான விஜய்யின் வாரிசு ஜனவரி 12ம் தேதி ரிலீஸாவதும் இப்போது உறுதியாகியுள்ளது.

தெலுங்கு வெர்ஷன்

இதனிடையே, ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலின் தெலுங்கு வெர்ஷன் நேற்று வெளியானது. இந்தப் பாடல் வெளியானது முதல் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழில் விஜய் குரலில் வெளியான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலை, தெலுங்கில் அனுராக் குல்கர்னி பாடியுள்ளார். தெலுங்கில் விஜய்யின் குரலில் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலை கேட்க நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், சாங் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அதேபோல், விரைவில் வாரிசு செகண்ட் சிங்கிள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வைரல்

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது வாரிசு பதாகையை ரசிகர் ஒருவர் கேமராவுக்கு முன்பாக காட்டிய போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி உள்ளன. இந்நிலையில், சென்னையின் பல முன்னணி தியேட்டர்களில் வாரிசு டீம் படத்தின் கட் அவுட்களை வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த டிசம்பர் மாதம் விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 24ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரிசு படம் கடைசி நேரத்தில் சந்தித்த சிக்கல்கள் குறித்தும் படம் குறித்தும் விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post லண்டனில் வாரிசு ஜன. 12ம் தேதி ரிஸீஸ்! first appeared on .

]]>
துணிவு படத்தின் கதை இதுதானா? https://www.91mobiles.com/tamil/ajithkumars-thunivu-movie-latest-updates/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ajithkumars-thunivu-movie-latest-updates Fri, 23 Sep 2022 13:19:27 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2576 `அஜித்-61′ படத்தின் டைட்டில் (துணிவு) மற்றும் முதல் மற்றும் இரண்டு ‘லுக்’ போஸ்டர்களும் வெளியாகி இருப்பதால், அஜித்தின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்தப் படம் மணி ஹெய்ஸ்ட் த்ரில்லர் என வினோத்தே அறிவித்துவிட்டதால், `வங்கிக் கொள்ளை’ தான் படத்தின் சாராம்சம் என ஆரம்பத்திலேயே தெளிவு படுத்திவிட்டனர். இந்நிலையில், 35 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் லூதியானவில் வங்கி ஒன்றில் மிகப்பெரிய வங்கிக் கொள்ளை நடந்தது. இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்த அந்த வங்கிக் கொள்ளைதான் `துணிவு’ படத்தின் கதை […]

The post துணிவு படத்தின் கதை இதுதானா? first appeared on .

]]>

`அஜித்-61′ படத்தின் டைட்டில் (துணிவு) மற்றும் முதல் மற்றும் இரண்டு ‘லுக்’ போஸ்டர்களும் வெளியாகி இருப்பதால், அஜித்தின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்தப் படம் மணி ஹெய்ஸ்ட் த்ரில்லர் என வினோத்தே அறிவித்துவிட்டதால், `வங்கிக் கொள்ளை’ தான் படத்தின் சாராம்சம் என ஆரம்பத்திலேயே தெளிவு படுத்திவிட்டனர். இந்நிலையில், 35 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் லூதியானவில் வங்கி ஒன்றில் மிகப்பெரிய வங்கிக் கொள்ளை நடந்தது. இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்த அந்த வங்கிக் கொள்ளைதான் `துணிவு’ படத்தின் கதை என்ற பேச்சு, கோடம்பாக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.

`வலிமை’க்குப் பிறகு மூன்றாவது முறையாக வினோத்தின் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். `சதுரங்க வேட்டை’, `தீரன் அதிகாரம் ஒன்று’ என படங்களின் மூலம் தனித்தன்மையை நிரூபித்த வினோத்தின் மீது ‘வலிமை’யில் எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால், பலரது தலையீடு மற்றும் கொரோனா சூழலால் எதிர்பார்த்தபடி படம் அமையவில்லை (`நேர் கொண்ட பார்வை’ ரீமேக் என்பதால் அதை விட்டு விடலாம்) அடர்த்தியான கதை, புருவம் உயர்த்தும் சம்பவம், போலீஸ் ஸ்டோரி இதெல்லாம் ஹெச். வினோத்தின் அசைக்க முடியாத பலம் என ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் அவர் நிரூபித்தார். ஆகையால், இம்முறை தன்னை மீண்டும் நிரூபிக்கவே உண்மை சம்பவம் ஒன்றை கையிலெடுத்திருக்கிறார் என்ற பேச்சு எழுந்துள்ளது.

அதனால்தான் வங்கிக் கொள்ளை பற்றிய கதையை எடுக்கிறார் என்றார்கள். `துணிவு’ கதையாக சொல்லப்படும் லூதியானா வங்கிக் கொள்ளை குறித்து பார்க்கலாம். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 1987ல் நடந்த உண்மை சம்பவம் இது. சண்டிகரில், இந்தியா – சீக்கிய துப்பாக்கிகளுடன் போலீஸ் அதிகாரிகள் போல் உடையணிந்து வந்து வங்கியைக் கொள்ளையடித்துள்ளனர். அங்கே 4.5 மில்லியன் டாலர்களுடன் தப்பினார்கள். இது இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வங்கிக் கொள்ளை அப்போது இந்தியாவே அதிர்ச்சியடைந்தது. இந்த சம்பவத்தை தழுவிதான் `துணிவு’ எடுக்கபட்டு வருகிறது என்றும், கொள்ளையடித்தவர்கள் பாங்காக்கிற்குத் தப்பிச் செல்வது போலவும் அங்கே அஜித் அவர்களை வேட்டையாடுவதாகவும் கதை நீள்கிறது. வில்லன், ஹீரோ என அஜித் இரண்டு ரோலில் நடித்து வருகிறார். ஹீரோ போலீஸ் அதிகாரி என்றும் சமுத்திரக்கனி சக போலீஸ் ஆக நடிப்பதாகவும் சொல்கிறார்கள்.

அஜித் நெகட்டிவ் ரோலில் நடிப்பதை அவர் உறுதிப்படுத்தியிருந்தாலும், கதையின் திருப்புமுனை கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடிக்க இருப்பதாகச் சொல்கிறார்கள். `கே.ஜி.ஃப் 2’வில் வில்லனாக அவர் மிரட்டியதைத் தொடர்ந்தும், இந்தி மார்க்கெட்டைக் கருத்தில் கொண்டும் சஞ்சய்தத்தைக் கமிட் செய்ய தென்னிந்திய இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். விஜய்- லோகேஷின் `விஜய்67′ படத்திலும் அவர் இருக்கிறார் என்றாலும், அஜித்தின் `துணிவு’ தான் அவருக்கு தமிழில் முதல் படமாக இருக்கும் என்கிறார்கள்.

The post துணிவு படத்தின் கதை இதுதானா? first appeared on .

]]>