tips and tricks https://www.91mobiles.com/tamil Tue, 07 May 2024 06:30:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Earphones வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? https://www.91mobiles.com/tamil/things-to-consider-before-buy-earphones/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=things-to-consider-before-buy-earphones Tue, 07 May 2024 06:30:35 +0000 https://www.91mobiles.com/tamil/?p=15190 1. தேவை: பயன்பாடு: இசை கேட்பது, கேமிங், உரையாடல் போன்ற எதற்காக பயன்படுத்துவீர்கள் என்பதை தீர்மானிக்கவும். இசை கேட்பது முதன்மை எனில் அதிலும் நல்ல Bass உடன் கேட்பது பிடிக்கும் என்றால் அந்த வசதியோடு earphones வருகின்றன. அவற்றை வாங்கலாம். சூழல்: சத்தமான சூழலில் பயன்படுத்துவீர்களா அல்லது அமைதியான இடத்தில் பயன்படுத்துவீர்களா என்பதை யோசிக்கவும். 2. வகை: In-ear: காதுக்குள் அணியும் வகை. சிறியது, ஸ்டைலானது, நல்ல ஒலி தனிமைப்படுத்தல். On-ear: காதுகளின் மேல் அணியும் வகை. […]

The post Earphones வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? first appeared on .

]]>

1. தேவை:

  • பயன்பாடு: இசை கேட்பது, கேமிங், உரையாடல் போன்ற எதற்காக பயன்படுத்துவீர்கள் என்பதை தீர்மானிக்கவும். இசை கேட்பது முதன்மை எனில் அதிலும் நல்ல Bass உடன் கேட்பது பிடிக்கும் என்றால் அந்த வசதியோடு earphones வருகின்றன. அவற்றை வாங்கலாம்.
  • சூழல்: சத்தமான சூழலில் பயன்படுத்துவீர்களா அல்லது அமைதியான இடத்தில் பயன்படுத்துவீர்களா என்பதை யோசிக்கவும்.

2. வகை:

  • In-ear: காதுக்குள் அணியும் வகை. சிறியது, ஸ்டைலானது, நல்ல ஒலி தனிமைப்படுத்தல்.
  • On-ear: காதுகளின் மேல் அணியும் வகை. வசதியானது, நல்ல ஒலி தரம்.
  • Over-ear: காதுகளை முழுவதுமாக மூடும் வகை. சிறந்த ஒலி தரம், அதிக வசதி.

3. ஒலி தரம்:

  • Frequency Response: 20Hz – 20kHz வரையிலான அதிர்வெண் வரம்பு கொண்ட earphones தேர்ந்தெடுக்கவும்.
  • Sensitivity: அதிக Sensitivity கொண்ட earphones சத்தமாக ஒலிக்கும்.
  • Impedance: உங்கள் சாதனத்துடன் பொருந்தக்கூடிய Impedance கொண்ட earphones தேர்ந்தெடுக்கவும்.

4. வசதி:

  • Earbuds: சிலிகான், ஃபோம் போன்ற பல்வேறு பொருட்களில் கிடைக்கும். நீண்ட நேரம் அணிந்திருக்க வசதியான Earbuds தேர்ந்தெடுக்கவும்.
  • Cable: wired அல்லது wireless earphoneல் உங்கள் தேவைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கவும்.
  • Port: Wired என்றால் உங்களது மொபைலுக்குத் தகுந்தபடி Type-C அல்லது 3.5mm Jack earphoneஐ தேர்ந்தெடுக்கவும்.

5. கூடுதல் அம்சங்கள்:

  • Microphone: கூடுதல் Mic இருக்கும் earphoneகள் தெளிவான உரையாடல்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
  • Noise Cancelling: சத்தத்தை தடுத்து ஒலி தனிமைப்படுத்தலை மேம்படுத்தும். இந்த வசதி இருக்கும் earphoneஐ தேர்ந்தெடுப்பது சத்தமான இடத்திலும் தெளிவான உரையாடலுக்கு வழிவகுக்கும்.
  • Remote Control: பாடல்களை மாற்றவும், அழைப்புகளை ஏற்கவும் Remote Control உதவும்.

6. விலை:

  • பட்ஜெட்: உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற earphones தேர்ந்தெடுக்கவும்.
  • மதிப்பு: விலைக்கு ஏற்றவாறு தரம் மற்றும் அம்சங்கள் அதிகமாக இருக்கும்.

7. பிராண்ட்:

  • நம்பகமான பிராண்ட்: நல்ல வாடிக்கையாளர் சேவை மற்றும் உத்தரவாதத்துடன் கூடிய பிராண்ட் தேர்ந்தெடுக்கவும்.
  • பயனர் மதிப்புரைகள்: Earphones வாங்குவதற்கு முன் பிற பயனர்களின் மதிப்புரைகளை படிக்கவும்.

8. சோதனை:

  • சாத்தியமானால், வாங்குவதற்கு முன் earphones ஐ முயற்சி செய்து பார்க்கவும்.

கூடுதல் குறிப்புகள்:

  • Earphones ஐ சரியான முறையில் பயன்படுத்துங்கள் மற்றும் பராமரிக்கவும்.
  • அதிக ஒலியில் நீண்ட நேரம் கேட்பதை தவிர்க்கவும்.

The post Earphones வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? first appeared on .

]]>
புதிய லேப்டாப் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்.. https://www.91mobiles.com/tamil/important-things-to-consider-before-buying-a-new-laptop/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=important-things-to-consider-before-buying-a-new-laptop Wed, 01 May 2024 08:51:50 +0000 https://www.91mobiles.com/tamil/?p=15107 வேலை, படிப்பு, தொழில் இப்படி ஏறத்தாழ எல்லா இடங்களிலும் லேப்டாப்பின் (மடிக்கணினி) தேவை இருக்கிறது. புதிய லேப்டாப் வாங்கும் போது நமக்கான லேப்டாப்பை எப்படி சரியாக தேர்ந்தெடுப்பது? புதிய லேப்டாப் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது போன்றவற்றை விரிவாகப் பார்க்கலாம். 1. தேவைகளை தீர்மானித்தல்: லேப்டாப்பை எதற்காக பயன்படுத்துவீர்கள்? (வேலை, படிப்பு, விளையாட்டுகள், வீடியோ எடிட்டிங் போன்றவை) எவ்வளவு அடிக்கடி பயணம் செய்வீர்கள்? எவ்வளவு சேமிப்பு இடம் தேவை? எவ்வளவு பேட்டரி ஆயுள் […]

The post புதிய லேப்டாப் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்.. first appeared on .

]]>

வேலை, படிப்பு, தொழில் இப்படி ஏறத்தாழ எல்லா இடங்களிலும் லேப்டாப்பின் (மடிக்கணினி) தேவை இருக்கிறது. புதிய லேப்டாப் வாங்கும் போது நமக்கான லேப்டாப்பை எப்படி சரியாக தேர்ந்தெடுப்பது? புதிய லேப்டாப் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது போன்றவற்றை விரிவாகப் பார்க்கலாம்.

1. தேவைகளை தீர்மானித்தல்:

  • லேப்டாப்பை எதற்காக பயன்படுத்துவீர்கள்? (வேலை, படிப்பு, விளையாட்டுகள், வீடியோ எடிட்டிங் போன்றவை)
  • எவ்வளவு அடிக்கடி பயணம் செய்வீர்கள்?
  • எவ்வளவு சேமிப்பு இடம் தேவை?
  • எவ்வளவு பேட்டரி ஆயுள் தேவை?
  • உங்கள் பட்ஜெட் என்ன?

2. முக்கிய அம்சங்கள்:

  • பிராசசர்: லேப்டாப்பிற்கான ப்ராசசரை Intel, AMD என இரண்டு பெரிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.  Intel எனில் Core i3, i5, அல்லது i7 ப்ராசசரில் ஒன்றையோ, AMD எனில் Ryzen சீரிஸை தேர்ந்தெடுக்கவும்.
  • RAM: லேப்டாப் தடை இன்றி இயங்க குறைந்தபட்சம் 8GB RAM தேவை. 16GB அல்லது அதற்கு மேல் ஹெவி டாஸ்க்கிங் அல்லது கேமிங் செய்பவர்களுக்கு சிறந்தது.
  • ஸ்டோரேஜ்: SSD கார்டு, ஹார்ட் டிஸ்க்கை விட வேகமானது மற்றும் அதிக செயல்திறனை வழங்குகிறது. விலையும் சற்று அதிகமாக இருக்கும். சாதாரண பயன்பாட்டுக்கு 512GB SSD போதுமான ஸ்டோரேஜாக இருக்கும்.
  • டிஸ்ப்ளே: 13-17 அங்குல திரை அளவுகள் பொதுவானவை. முழு HD (1920×1080) அல்லது அதற்கு மேற்பட்ட தெளிவுத்திறனை தேர்ந்தெடுக்கவும்.
  • கிராபிக்ஸ் கார்டு: கேமிங் அல்லது வீடியோ எடிட்டிங் போன்ற கிராபிக்ஸ் தீவிர பணிகளுக்கு, ஒரு நல்ல திறன் கொண்ட கிராபிக்ஸ் கார்டு தேவை. சாதாரண பயன்பாட்டுக்கு மதர்போர்டுடன் வரும் இண்டர்னல் கிராபிக்ஸே போதுமானது.
  • பேட்டரி ஆயுள்: குறைந்தபட்சம் 6 மணிநேர பேட்டரி ஆயுள் கொண்ட லேப்டாப்பை தேர்ந்தெடுக்கவும்.
  • இணைப்புகள்: USB-C, HDMI, மற்றும் Wi-Fi 6 போன்ற முக்கிய இணைப்புகளை உறுதிசெய்யவும்.

3. பிராண்ட் மற்றும் வாடிக்கையாளர் சேவை:

  • நம்பகமான நிறுவனத்தின் லேப்டாப்பை தேர்ந்தெடுக்கவும்.
  • நல்ல வாடிக்கையாளர் சேவை மற்றும் உத்தரவாதத்தை வழங்கும் ஒரு விற்பனையாளரிடம் இருந்து வாங்குங்கள்.

4. ஆராய்ச்சி மற்றும் ஒப்பீடு:

  • வெவ்வேறு மாடல்களை ஆன்லைனில் ஆராய்ச்சி செய்யவும் மற்றும் விலைகளை ஒப்பிடவும். நமது 91mobilesல் லேப்டாப்பிற்கென தனி பிரிவே உள்ளது. அவற்றை பார்வையிடவும்.
  • ஏற்கனவே உபயோகப்படுத்தி வரும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து பரிந்துரைகளைப் பெறவும்.
  • உங்கள் தேவைக்கேற்ற Portகள் வசதிகள் உள்ளனவா என்று சரிபார்க்கவும்.
  • கூடுமானவரை லேட்டஸ்ட் மாடலைத் தேர்ந்தெடுக்கவும்.
  • முடிந்தால், லேப்டாப்பை வாங்குவதற்கு முன் ஒரு கடையில் சென்று சோதிக்கவும்.
  • உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு அம்சங்களை சமநிலைப்படுத்தவும்.
  • விலை மட்டும் ஒரு காரணியாக இருக்கக்கூடாது.

புதிய லேப்டாப் வாங்குவது ஒரு முக்கியமான முடிவு. மேலே உள்ள உதவிக்குறிப்புகள் சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.

The post புதிய லேப்டாப் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்.. first appeared on .

]]>
உங்கள் ஆதார் அட்டையும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா? ஆதார் ஹிஸ்டரியை சரிபார்ப்பது எப்படி? https://www.91mobiles.com/tamil/how-to-check-your-aadhaar-card-history/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=how-to-check-your-aadhaar-card-history Thu, 18 May 2023 07:11:59 +0000 https://www.91mobiles.com/tamil/?p=8239 ஆதார் அட்டை வரலாற்றைச் சரிபார்க்கவும்: இன்றைய காலகட்டத்தில், ஏதேனும் ஆவணம் தேவை என்று தோன்றினால், அது ஆதார் அட்டையாக மட்டுமே இருக்கும். அதாவது ஒவ்வொரு வேலைக்கும் இது தேவை. சிம் கார்டு பெற, வங்கிக் கணக்கு தொடங்க, அரசு அல்லது அரசு சாரா திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள. இதுபோன்ற பல வேலைகளுக்கு ஆதார் அட்டை அவசியம். அதனால்தான் ஆதார் அட்டை பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது, இது அட்டைதாரருக்கு கூட நினைவில் இருக்காது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்பட்டதா என்பதை நீங்கள் […]

The post உங்கள் ஆதார் அட்டையும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா? ஆதார் ஹிஸ்டரியை சரிபார்ப்பது எப்படி? first appeared on .

]]>
ஆதார் அட்டை வரலாற்றைச் சரிபார்க்கவும்:

இன்றைய காலகட்டத்தில், ஏதேனும் ஆவணம் தேவை என்று தோன்றினால், அது ஆதார் அட்டையாக மட்டுமே இருக்கும். அதாவது ஒவ்வொரு வேலைக்கும் இது தேவை. சிம் கார்டு பெற, வங்கிக் கணக்கு தொடங்க, அரசு அல்லது அரசு சாரா திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள. இதுபோன்ற பல வேலைகளுக்கு ஆதார் அட்டை அவசியம். அதனால்தான் ஆதார் அட்டை பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது, இது அட்டைதாரருக்கு கூட நினைவில் இருக்காது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்பட்டதா என்பதை நீங்கள் அறிந்து கொள்வது இன்னும் முக்கியமானதாகிறது. எனவே உங்கள் ஆதார் அட்டை வரலாற்றை நீங்கள் சரிபார்க்கலாம்.

ஆதார் அட்டையின் வரலாற்றை பார்ப்பது எப்படி?

 


படி 1
  • உங்களுக்குத் தெரியாமல் உங்கள் ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க விரும்பினால், நீங்கள் இதைச் செய்யலாம்
  • வரலாற்றைச் (Aadhaar History) சரிபார்க்க, முதலில் நீங்கள் UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான uidai.gov.in ஐப் பார்வையிட வேண்டும்.
  • இணையதளத்திற்கு சென்றதும் My Aadhaar என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
படி 2
  • இப்போது, ‘Aadhaar Authentication History’ என்ற விருப்பத்தைப் பெறுவீர்கள்.
  • அதை கிளிக் செய்யவும்
  • பின்னர் நீங்கள் யாருடைய வரலாற்றை சரிபார்க்க விரும்புகிறீர்களோ அவரின் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
ஆதார் அட்டை விழிப்பூட்டல்: உங்கள் ஆதார் அட்டை வரலாற்றை எவ்வாறு சரிபார்ப்பது இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்
படி 3
  • இப்போது நீங்கள் திரையில் காட்டப்பட்டுள்ள கேப்ட்சா குறியீட்டை நிரப்ப வேண்டும்
  • பின்னர் OTP சரிபார்ப்பு விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்
  • அதன் பிறகு உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
  • பெறப்பட்ட OTP ஐ அதில் உள்ளிடவும்
படி 4
  • அப்போது உங்கள் முன் ஒரு டேப் திறக்கும்
  • உங்கள் ஆதார் அட்டை வரலாற்றை சரிபார்க்க விரும்பும் தேதியை இங்கே உள்ளிட வேண்டும்.
  • இதற்குப் பிறகு, உங்கள் ஆதார் அட்டை எங்கெங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பதுபற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

The post உங்கள் ஆதார் அட்டையும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா? ஆதார் ஹிஸ்டரியை சரிபார்ப்பது எப்படி? first appeared on .

]]>
மொபைல் ஃபோன் சூடாவதற்கான காரணங்கள் மற்றும் அதை தடுப்பதற்கான தீர்வுகள் https://www.91mobiles.com/tamil/reasons-and-solutions-for-mobile-heating/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=reasons-and-solutions-for-mobile-heating Sun, 14 May 2023 05:30:06 +0000 https://www.91mobiles.com/tamil/?p=8026 மொபைல் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த மொபைலானது ஆண்ட்ராய்டின் வருகைக்குப் பிறகு பலவிதங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீடியோ பார்ப்பது, கேமிங் விளையாடுவது, புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது, அவற்றை பகிர்ந்து கொள்வது, பலவிதமான செயலிகளைப் பயன்படுத்துவது, இணையத்தைப் பயன்படுத்துவது என நாளுக்கு நாள் மொபைலின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படி பயன்பாடு அதிகரிப்பதால் மொபைலுக்கான பேட்டரியின் அளவும் அதிகரித்து இருக்கிறது. தொடர்ந்த பயன்பாடு காரணமாக ஒருநாளிலேயே இரு முறைகூட […]

The post மொபைல் ஃபோன் சூடாவதற்கான காரணங்கள் மற்றும் அதை தடுப்பதற்கான தீர்வுகள் first appeared on .

]]>

மொபைல் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த மொபைலானது ஆண்ட்ராய்டின் வருகைக்குப் பிறகு பலவிதங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீடியோ பார்ப்பது, கேமிங் விளையாடுவது, புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது, அவற்றை பகிர்ந்து கொள்வது, பலவிதமான செயலிகளைப் பயன்படுத்துவது, இணையத்தைப் பயன்படுத்துவது என நாளுக்கு நாள் மொபைலின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படி பயன்பாடு அதிகரிப்பதால் மொபைலுக்கான பேட்டரியின் அளவும் அதிகரித்து இருக்கிறது. தொடர்ந்த பயன்பாடு காரணமாக ஒருநாளிலேயே இரு முறைகூட மொபைலை சார்ஜ் செய்ய வேண்டிய தேவையும் இருக்கிறது.

மொபைலின் தொடர்ந்த இயக்கம் காரணமாகவும், அதிகப்படியான, பெரிய செயலிகளை இயக்குவதாலும் மொபைல் சூடாக ஆரம்பிக்கிறது. அதே போல் ஒரே நேரத்தில் மொபைலில் பல வேலைகளைச் செய்வதாலும் (multi tasking) மொபைல் சுடாகிறது. இப்படி உங்கள் மொபைல் ஃபோன் சூடாவதற்கு பல காரணங்கள் உள்ளன. மிகவும் பொதுவான சில காரணங்களாக கீழ்காண்பனவற்றைக் கூறலாம்.

அதிகப்படியான பயன்பாடு

உங்கள் மொபைலை அதிக நேரம் பயன்படுத்தினால், பேட்டரி மற்றும் செயலி அதிக நேரம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டி இருக்கும் இதனால் அது சூடாகலாம்.

 

பின்னணி பயன்பாடுகள்

பின்புலத்தில் (Background) இயங்கும் செயலிகள் உங்கள் ஃபோனின் பேட்டரி மற்றும் செயலாக்க சக்தியைப் பயன்படுத்துவதால், அவை வெப்பமடையலாம்.

சார்ஜிங்

உங்கள் மொபைலை நீண்ட நேரம் சார்ஜ் செய்வது, முழுவதும் சார்ஜ் ஆன பிறகும் தொடர்ந்து போன் சார்ஜிலேயே இருப்பதும் மொபைலை சூடாக்கும். அதுபோல் பழுதடைந்த அல்லது தவறான சார்ஜரைப் பயன்படுத்தி மொபைலை சார்ஜ் செய்வதலாலும் மொபைல் சூடாகலாம். இது சில சமயங்களில் மொபைல் வெடிப்பது போன்ற விபத்தில் கூட முடியலாம். அதுபோல் சார்ஜ் செய்துகொண்டே மொபைலை பயன்படுத்துவதும் மொபைலை அதிக அளவில் சுடாக்கும். சமீபத்த்ல் நடந்த சில மொபைல் வெடிப்பு விபத்துகள் இந்த வகையைச் சேர்ந்தவையே.

 

மென்பொருள் புதுப்பிப்புகள்

சில நேரங்களில் மென்பொருள் புதுப்பிப்புகளை செய்யும் போது உங்கள் மொபைலுக்கு அதிக செயலாக்க சக்தி தேவைப்படும். இதனால் அவை சூடாகலாம்.

மோசமான காற்றோட்டம்

உங்கள் ஃபோன் பெட்டி, கவர், துணி போன்றவற்றால் மூடப்பட்டிருந்தால் அல்லது காற்றோட்டம்  தடுக்கப்பட்டால் அது மொபைலை வெப்பமடையச் செய்யலாம். சிலர் தலையணைக்கு அடியில், புத்தகங்களுக்கு இடையில் என மொபைலை காற்று இல்லாத இடத்தில் வைத்துவிடுவார்கள். இதனால் சுடாவது மட்டுமின்றி சில நேரங்களில் வெடிப்பது போன்ற விபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடையின் பாக்கெட்டில் வைப்பது கூட மொபைலை சூடாக்கும்.

 

வன்பொருள் சிக்கல்கள்

சில நேரங்களில் சேதமடைந்த பேட்டரி அல்லது சிப்செட் போன்ற ஹார்டுவேர் சிக்கல்கள் உங்கள் மொபைலை சூடாக்கலாம்.

 

சுற்றுச்சூழல் காரணிகள்

உங்கள் மொபைலை வெப்பமான சூழலில் அல்லது நேரடி சூரிய ஒளியில் பயன்படுத்தினால், அது வெப்பமடையச் செய்யலாம்.

மால்வேர்

உங்கள் மொபைலில் ஏதேனும் மால்வேர் அல்லது வைரஸ்கள் புகுந்தால், அவையும் அதிக செயலாக்க சக்தியைப் பயன்படுத்தும் இதனாலும் மொபைல் சூடாகலாம்.

 

நீங்கள் உங்கள் மொபைல் அதிக வெப்பத்தை வெளிபடுத்துவதாக உணர்ந்தால், உங்கள் மொபைலை சம்பந்தப்பட்ட சர்வீஸ் செண்டருக்கோ அல்லது சிறந்த நிபுணரிடமோ எடுத்துச் சென்று சரிபார்ப்பது நல்லது. பிரச்சனையின் மூல காரணத்தை கண்டறிந்து, அதற்கான தீர்வுகளை பரிந்துரைக்க அவை உங்களுக்கு உதவும்.

The post மொபைல் ஃபோன் சூடாவதற்கான காரணங்கள் மற்றும் அதை தடுப்பதற்கான தீர்வுகள் first appeared on .

]]>
உங்கள் Wi-Fi கனெக்‌ஷனின் வேகத்தை அதிகரிப்பது எப்படி? https://www.91mobiles.com/tamil/tips-to-improve-your-wifi-connection-speed-and-strength/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tips-to-improve-your-wifi-connection-speed-and-strength Fri, 03 Feb 2023 13:59:37 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5552 கொரோனா கால கட்டத்திற்குப் பிறகு இணையம் என்பது அனைத்து வீடுகளிலும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஆன்லைன் வகுப்புகள் மற்றும் வொர்க் ப்ரம் ஹோம் (Work From Home), OTT பயன்பாடு போன்ற காரணங்களால் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதேபோல இப்போது வைஃபை ரவுட்டர் (Wi-Fi Router) சாதனங்களையும் மக்கள் அதிகளவில் வாங்கி பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். வயர் (Wire) மூலம் இணைக்கப்படும் LAN கனெக்சனை தாண்டி, வயர்லெஸ் (Wireless) முறையில் வரும் வைஃபை இன்டர்நெட் வசதிக்கு அதிகப்படியான […]

The post உங்கள் Wi-Fi கனெக்‌ஷனின் வேகத்தை அதிகரிப்பது எப்படி? first appeared on .

]]>

கொரோனா கால கட்டத்திற்குப் பிறகு இணையம் என்பது அனைத்து வீடுகளிலும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஆன்லைன் வகுப்புகள் மற்றும் வொர்க் ப்ரம் ஹோம் (Work From Home), OTT பயன்பாடு போன்ற காரணங்களால் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதேபோல இப்போது வைஃபை ரவுட்டர் (Wi-Fi Router) சாதனங்களையும் மக்கள் அதிகளவில் வாங்கி பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.

வயர் (Wire) மூலம் இணைக்கப்படும் LAN கனெக்சனை தாண்டி, வயர்லெஸ் (Wireless) முறையில் வரும் வைஃபை இன்டர்நெட் வசதிக்கு அதிகப்படியான வரவேற்பு கிடைப்பதற்குக் காரணம், வீட்டில் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் இன்டர்நெட் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள இந்த வைஃபை சாதனங்கள் அனுமதிக்கின்றன. இந்த சவுகரியம் காரணமாகவே பலர் வயர்லெஸ் வைஃபை கனெக்ஷனை விரும்புகின்றனர்.

ஆனால், வாங்கிய புதிதில் இருக்கும் வைஃபையின் வேகம் போகப்-போக பாதிக்கப்படுவது வழக்கம். இதற்கு, முறையான பராமரிப்பு இன்மையே ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம். உங்கள் வைஃபை சிறப்பான கனெக்டிவிட்டியை கொடுப்பதற்கான சில டிப்ஸ்களை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

வைஃபை இன்ஸ்டால் செய்வதில் மிகவும் முக்கியமானது சரியான இடத்தில் அதைப் பொருத்தி வைப்பது. வைஃபையானது வயர்லெஸ் கனெக்ஷன் என்பதால், சிக்னல் பயணிக்கும் வழியில் ஏதேனும் பொருள் இடையூறாக இருக்கும் பொழுது சிக்னலின் வேகம் பாதிக்கப்படும். இதனைத் தவிர்க்க, எந்த-எந்த அறைகளில் வைஃபை பயன்படுத்துவீர்களோ, அதற்கு பொதுவான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ரூட்டரை இன்ஸ்டால் செய்வது சிறப்பானது.

WiFi ரூட்டரை ஒரு சமதளமான இடத்தில், பொருட்கள் இடையூறாக இல்லாத வகையில் பொருத்தி வைப்பது அவசியம். வைஃபை இதிலிருந்து வரும் வயர்லெஸ் சிக்னல்கள் அக்கம் பக்கத்து வீட்டிலிருந்து வரும் சிக்னல்களால் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே உங்களது வைஃபையிற்கு தனியாக வயர்லெஸ் சேனலை அமைத்துக்கொள்வது நல்லது.

பொதுவாக, வைஃபையில் வரும் சிறிய ஆம்னி டைரக்சனல் (Omni-directional) ஆன்டனாக்கள் அனைத்து திசைகளிலும் சிக்னலை பரப்பும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். உங்கள் வீட்டில் அனைத்து பகுதிகளிலிருந்தும் வைஃபையை நீங்கள் பயன்படுத்துவீர்களானால், இந்த ஆம்னி டைரக்சனல் ஆன்டனாக்கள் பயன்படலாம். ஆனால் குறிப்பிட்ட இடங்களிலிருந்து மட்டும் வைஃபை நீங்கள் பயன்படுத்தினால் டைரக்ஷனல் ஆன்டனாக்களை உபயோகிப்பது நல்லது. இந்த டைரக்ஷனல் ஆன்டனாக்கள் குறிப்பிட்ட திசையை நோக்கி வைஃபை சிக்னலை ஃபோகஸ் (Focus) செய்ய உதவும். இதன் மூலம் சாதாரண ஆம்னி டைரக்ஷனல் ஆன்டனாக்களினால் கிடைக்கும் வேகத்தை விட அதிக வேகத்தில் வைஃபை கனெக்ஷன் கிடைக்கும். இவற்றை ஹை கெயின் (High gain) என்று கூறுவர்.

Wi-Fi சிக்னலை அதிகரிக்க மற்றொரு சிறந்த வழி ரிப்பீட்டரை (Repeater) பயன்படுத்துவது. இந்த ரிப்பீட்டர்கள் புதிதாக சிக்னலை உருவாக்காமல், ஏற்கனவே இருக்கும் உங்கள் வைஃபை சிக்னலை மீண்டும்-மீண்டும் வெளிப்படுத்தும். இதன் மூலம் சிக்னல் பூஸ்ட் (Boost) ஆகும். ஒரு ரிப்பீட்டரை இன்ஸ்டால் செய்வதற்கு புதிய கனெக்சன், கூடுதல் வயர்கள் தேவையில்லை. வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட ரிப்பீட்டர்களை வைப்பதன் மூலம் அதிவேக வைஃபை கனெக்ஷனை பெற்று சிறப்பாக பணியாற்றலாம்.

கடைசியாக உங்கள் WiFi Firmware-ஐ எப்போது அப்டேட் செய்தீர்கள்? ரூட்டர் உற்பத்தியாளர்கள் அவ்வப்போது ஃபார்ம்வேர் (Firmware) அப்டேட்களை வெளியிடுவர். அவற்றைப் பயன்படுத்தி உங்கள் ரூட்டரை அடிக்கடி அப்கிரேட் (Upgrade) செய்வது அவசியம். இவை உங்கள் வைஃபையின் சிக்னலை பூஸ்ட் செய்வது மட்டுமின்றி புதிய அம்சங்களைப் பயன்படுத்தவும் உதவும். இதற்கு தேர்ட் பார்ட்டி ஃபார்ம்வேர்களையும் (Third Party Firmware) உபயோகப்படுத்தியும் பயனடையலாம். பாதுகாப்பான ஃபார்ம்வேர்கள் இலவசமாக பிளே ஸ்டோரில் நிறைய இருக்கின்றன. அவற்றில் குறிப்பாக ஒன் ப்ராஜெக்ட் (One Project), DD-WRT ஆகியவற்றைக் கூறலாம்.

இந்த டிப்ஸ்களை பயன்படுத்தினால் உங்களால் சிறந்த வைஃபை அனுபவத்தை பெற முடியும்.

 

The post உங்கள் Wi-Fi கனெக்‌ஷனின் வேகத்தை அதிகரிப்பது எப்படி? first appeared on .

]]>
வாட்ஸப்ல ஒவ்வொரு ‘சாட்’டையும் இப்போ பாஸ்வேர்டு போட்டு மறைக்கலாம்! https://www.91mobiles.com/tamil/is-it-possible-to-lock-every-whatsapp-chat-with-a-password/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=is-it-possible-to-lock-every-whatsapp-chat-with-a-password Wed, 11 Jan 2023 11:54:53 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4908 ஸ்மார்ட்போன் நமது கைகளுக்கு வந்த உடன், நம்முடைய வேலைகள் சுலபமாக ஆனதோ இல்லையோ.. நமது தனிப்பட்ட தகவல்கள் உள்ள பைல்களையும், சாட்டுகளையும் (chat) பத்திரப்படுத்தி வைப்பது மிகவும் அவசியமாக உள்ளது. முந்தைய காலங்களில் மொத்த போனையும் பாஸ்வேர்ட் போட்டு லாக் (password lock) செய்து வைக்கும் வசதி மட்டுமே இருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகக், குறிப்பிட்ட ஆப்ஸ்களை மட்டும் லாக் (password lock apps) செய்து கொள்வது போன்ற அம்சம் கொண்டுவரப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக, குறிப்பிட்ட […]

The post வாட்ஸப்ல ஒவ்வொரு ‘சாட்’டையும் இப்போ பாஸ்வேர்டு போட்டு மறைக்கலாம்! first appeared on .

]]>

ஸ்மார்ட்போன் நமது கைகளுக்கு வந்த உடன், நம்முடைய வேலைகள் சுலபமாக ஆனதோ இல்லையோ.. நமது தனிப்பட்ட தகவல்கள் உள்ள பைல்களையும், சாட்டுகளையும் (chat) பத்திரப்படுத்தி வைப்பது மிகவும் அவசியமாக உள்ளது.

முந்தைய காலங்களில் மொத்த போனையும் பாஸ்வேர்ட் போட்டு லாக் (password lock) செய்து வைக்கும் வசதி மட்டுமே இருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகக், குறிப்பிட்ட ஆப்ஸ்களை மட்டும் லாக் (password lock apps) செய்து கொள்வது போன்ற அம்சம் கொண்டுவரப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக, குறிப்பிட்ட சாட்களை மட்டும் லாக் (chat password lock apps) செய்து வைத்துக் கொள்ளும் அம்சம் செயலிகளில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

நாம் அனைவரும் பயன்படுத்தும் ஒரு முக்கியமான தகவல் தொழில்நுட்ப செயலி என்றால் அது வாட்ஸ் ஆப் (WhatsApp) தான். குடும்பத்தார், நண்பர்களுடன் உரையாடுவது தாண்டி தொழில் ரீதியான உரையாடல்களும் இப்போது வாட்ஸ்அப்பில் நிகழ ஆரம்பித்து விட்டது. உங்கள் தனிப்பட்ட சாட்களையோ, தொழில் ரீதியான உரையாடல்களையோ மற்றவர்கள் பார்க்காமல் இருக்க இனி வாட்ஸ்அப் மொத்தத்தையும் லாக் போட்டு (WhatsApp lock) வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

நீங்கள் பாதுகாத்து வைக்க வேண்டும் என்று நினைக்கும் வாட்ஸ்அப் சாட்களை (WhatsApp chat) மட்டும் தனியாக லாக் செய்து கொள்வதற்கு ஏதுவாக பல தர்ட் பார்டி (Third Party) செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) தற்போது செயல்பாட்டில் உள்ளது. அவற்றில் ஒன்றுதான் “சேட்லாக்கர் ஃபார் வாட்ஸ் சாட் (Chat Locker for Whats Chat)” என்ற ஆப்ஸ் ஆகும். இந்தத் தர்ட் பாட்டி ஆப்ஸ், கூகுள் பிளே ஸ்டோரிலேயே டவுன்லோட் செய்து கொள்ள கிடைக்கிறது. இதைப் பயன்படுத்துவதும் மிகவும் எளிது.

ஒவ்வொரு WhatsApp சாட்-ஆ பாஸ்வோர்ட் போட்டு லாக் பண்ண முடியுமா? முடியும்

  • உங்கள் போனில் கூகுள் பிளே ஸ்டோரை ஓபன் செய்து அதில் ‘சாட் லாக்கர் ஃபார் வாட்ச் சாட்’ என்று டைப் செய்யவும்.
  • அந்த செயலியை ஓபன் செய்து டவுன்லோட் (download) கொடுத்து இன்ஸ்டால் செய்யவும்.
  • பிறகு அந்த ஆப்பை ஓப்பன் செய்து நான்கு இலக்க எண் கொண்ட பாஸ்வேர்டை (Password) என்டர் செய்யவும்.
  • இதுதான் நீங்கள் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று நினைக்கும் சாட்களை பாஸ்வோர்ட் போட்டு வைக்க உதவும் ஆப்ஸ் ஆகும்.
  • அதன் பிறகு நீங்க எந்தெந்த கான்டாக்ட்ஸ்களின் (Contacts) சாட்களை பாஸ்வோர்ட் லாக் போட வேண்டும் என்று தேர்வு செய்யுங்கள்.
  • எந்த சாட்டை லாக் செய்ய நினைக்கிறீர்களோ அவற்றைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • அவ்வளவுதான்.. அந்த சாட் லாக் செய்யப்பட்டுவிடும்.
  • இனி நீங்கள் whatsapp-ஐ ஓப்பன் செய்து நீங்கள் பாஸ்வேர்ட் ப்ரொடெக்ட் (Password Protect) செய்து வைத்த காண்டாக்டின் சாட்டை ஓபன் செய்யும் போது உங்களிடம் பாஸ்வேர்ட் கேட்கப்படும்.
  • நீங்கள் சரியான பாஸ்வோர்டை கொடுத்தால் மட்டுமே உங்களால் அந்த சேட்டை ஓபன் செய்து அதில் இருக்கும் செய்திகளைப் பார்க்க முடியும்.
  • இனி நீங்கள் தைரியமாக உங்கள் போனை நண்பர்களிடமும் உங்கள் குடும்பத்தாரிடமும் கொடுக்கலாம்.

முக்கிய குறிப்பு

  • இது வாட்ஸ் அப் நிறுவனத்திற்குச் சொந்தமானது இல்லை.
  • இது ஒரு தர்ட் பார்ட் செயலி என்பதால் இதை இன்ஸ்டால் செய்து யூஸ் செய்வது உங்கள் தனிப்பட்ட விருப்பமே.
  • தர்ட் பார்ட்டி ஆப்ஸ்களை எப்போதும் சற்று கவனத்துடன் எச்சரிக்கையாகப் பயன்படுத்துவது நல்லது.

The post வாட்ஸப்ல ஒவ்வொரு ‘சாட்’டையும் இப்போ பாஸ்வேர்டு போட்டு மறைக்கலாம்! first appeared on .

]]>