trisha https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 16:20:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 தளபதி 67 அப்டேட்டில் அசந்து போன விஜய் ரசிகர்கள்! https://www.91mobiles.com/tamil/actors-of-thalapathy-67-movie-updated-by-the-team/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=actors-of-thalapathy-67-movie-updated-by-the-team Tue, 31 Jan 2023 15:44:32 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5417 வசூல்மழையில் வாரிசு வாரிசு படத்தையும் தாண்டி தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே காணப்பட்ட நிலையில், தற்போது அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தருணம் வந்துள்ளது. நடிகர் விஜய்யின் வாரிசு படம் ரிலீசாகி சில தினங்களே ஆகியுள்ள நிலையில், படம் சர்வதேச அளவில் 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. இன்னும் சில தினங்களில் 300 கோடி ரூபாய் வசூலை படம் தாண்டும் என்று சினிமா ட்ராக்கர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் கொண்டாட்டம் முடிவதற்கு முன்னதாகவே ரசிகர்கள் […]

The post தளபதி 67 அப்டேட்டில் அசந்து போன விஜய் ரசிகர்கள்! first appeared on .

]]>

Highlights

  • தளபதி 67 படத்தின் தயாரிப்பு தரப்பு மற்றும் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து படத்தின் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.
  • நடிகர் விஜய்யின் தளபதி 67 அறிவிப்பு வந்தது முதல் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சிக்கடலில் திளைத்து வருகின்றனர்.

வசூல்மழையில் வாரிசு

வாரிசு படத்தையும் தாண்டி தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே காணப்பட்ட நிலையில், தற்போது அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தருணம் வந்துள்ளது. நடிகர் விஜய்யின் வாரிசு படம் ரிலீசாகி சில தினங்களே ஆகியுள்ள நிலையில், படம் சர்வதேச அளவில் 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. இன்னும் சில தினங்களில் 300 கோடி ரூபாய் வசூலை படம் தாண்டும் என்று சினிமா ட்ராக்கர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் கொண்டாட்டம் முடிவதற்கு முன்னதாகவே ரசிகர்கள் அடுத்த கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டனர்.

 

தளபதி 67 படம்

வாரிசு படத்தின் சூட்டிங்கின்போதே தளபதி 67 படத்தின் தகவல்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தது. இதற்கேற்றாற்போல லோகேஷ் கனகராஜ் போகுமிடமெல்லாம் அவரை ரசிகர்கள் தொடர்ந்து தளபதி 67 அப்டேட் கேட்டு மொய்த்தவண்ணம் இருந்தனர். படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன் தான் அப்டேட் கொடுப்பதாக அவர் நழுவினாலும் அவரை ரசிகர்கள் விட்டபாடில்லை.

அடுத்தடுத்த அப்டேட்கள்

இந்நிலையில் விஜய்யின் 67வது படமான தளபதி 67ல் அவர் 50 வயது கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக த்ரிஷா பல ஆண்டுகள் கழித்து இணையவுள்ளதாகவும், விஜய்க்கு சஞ்சய் தத் உள்ளிட்ட 6 வில்லன்கள் நெருக்கடி கொடுக்கவுள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் ஆக்கிரமிப்பு செய்தன.

 

தளபதி 67 குறித்த அறிவிப்பு

இந்நிலையில் வாரிசு படம் ரிலீசாகி படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இதையடுத்து நேற்று மாலை தளபதி 67 படம் குறித்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது. தயாரிப்பாளர் லலித்குமார் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து தளபதி 67 படம் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டனர்.

 

இசை, நடனம், சண்டை

நேற்றைய தினம் படத்தின் அறிவிப்புடன் படத்தின் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், சண்டை, நடனம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவுள்ளவர்கள் குறித்த அறிவிப்புகளும் காணப்பட்டது. படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த கூட்டணி நியூக்ளியர் பாமாக ரசிகர்களை தாக்கும் என்று அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

நடிகர்கள் அப்டேட்

இந்நிலையில் இன்று மாலையிலிருந்து படத்தின் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. முதலில் படத்தில் இணையவுள்ள சஞ்சய் தத், தமிழில் தன்னுடைய முதல் படமான தளபதி 67 குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அடுத்த ஒரு மணிநேரத்தில் படத்தில் இணைந்துள்ள பிரியா ஆனந்த் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ப்ரியா ஆனந்த்

இந்த வலிமையான டீமுடன் இணைந்து பணியாற்றுவது த்ரில்லிங்காக உள்ளதாக பிரியா ஆனந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்னும் 4 மணிநேரத்திற்கு அடுத்தடுத்து நடிகர்கள், நடிகைகள் குறித்து அறிவிப்பு வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் காஷ்மீரின் ஸ்ரீநகரில் நாளைய தினம் துவங்கவுள்ளதாகவும் அதற்காக த்ரிஷா உள்ளிட்டவர்கள் தனி விமானத்தில் தங்களது பயணத்தை துவங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post தளபதி 67 அப்டேட்டில் அசந்து போன விஜய் ரசிகர்கள்! first appeared on .

]]>
விஜய்-லோகேஷ் இணையும் தளபதி 67 படத்தின் பூஜை இன்று போடப்பட்டது! https://www.91mobiles.com/tamil/vijay-s-thalapathy-67-movie-pooja-starts-today/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vijay-s-thalapathy-67-movie-pooja-starts-today Mon, 05 Dec 2022 14:04:43 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4091 நீண்ட காலமாக ரசிகர்கள் காத்திருந்த தளபதி 67 படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் மிகவும் எளிமையான வகையில் நடத்தப்பட்டுள்ளது. ஏவிஎம் ஸ்டூடியோ பிள்ளையார் கோயிலில் இந்த பூஜை தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டில்களுக்காக விஜய் ரசிகர்கள் தற்போது காத்திருக்கின்றனர். வீடியோ முன்னதாக லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி கவனம் பெற்ற நிலையில், அதேபோல தளபதி 67 படத்திற்கும் வீடியோ வெளியாகும் என்றும் இதன் வீடியோ சூட்டிங் வரும் 7ம் […]

The post விஜய்-லோகேஷ் இணையும் தளபதி 67 படத்தின் பூஜை இன்று போடப்பட்டது! first appeared on .

]]>

நீண்ட காலமாக ரசிகர்கள் காத்திருந்த தளபதி 67 படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் மிகவும் எளிமையான வகையில் நடத்தப்பட்டுள்ளது. ஏவிஎம் ஸ்டூடியோ பிள்ளையார் கோயிலில் இந்த பூஜை தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டில்களுக்காக விஜய் ரசிகர்கள் தற்போது காத்திருக்கின்றனர்.

வீடியோ முன்னதாக லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி கவனம் பெற்ற நிலையில், அதேபோல தளபதி 67 படத்திற்கும் வீடியோ வெளியாகும் என்றும் இதன் வீடியோ சூட்டிங் வரும் 7ம் தேதி துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் பணிகளுக்காக சமூக வலைதளங்களில் இருந்து விலகிய லோகேஷ் மீண்டும் இணைவார் என்று எதிர்பார்க்கலாம்.

இதேபோல இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானவுடன் இந்தப் படம் லோகேஷ் யூனிவர்சில் இணையுமா என்பது குறித்து அப்டேட் கொடுக்கவுள்ளதாக முன்னதாக லோகேஷ் தெரிவித்த நிலையில், விரைவில் அதுகுறித்து அவர் அப்டேட் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் த்ரிஷா, கௌதம் மேனன் என அடுத்தடுத்த நடிகர்கள் குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கலாம்.

இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் சென்னையில் துவங்கவுள்ள நிலையில், அடுத்ததாக காஷ்மீருக்கு படக்குழு சூட்டிங்கிற்காக செல்லவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்திற்காக 4 மாதங்கள் விஜய் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அவர் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் முன்னதாக லோகேஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படம் இன்று மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் சூட்டிங்கிற்காக இந்தப் படத்தின் சூட்டிங் ஒரு மாத காலம் தள்ளி வைக்கப்பட்டது. முந்தைய பாகத்தில் சந்த்ரு மற்றும் சேனாபதி என இரண்டு கேரக்டர்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் கமல். இந்நிலையில் 21 ஆண்டுகள் கழித்து இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கி 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு காரணமாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இந்தப் படத்தை இயக்கிவரும் இயக்குநர் ஷங்கர், ஒரே நேரத்தில் கமல் மற்றும் ராம்சரண் படங்களை இயக்கி வருகிறார். மாதத்தில் 20 நாட்கள் என அடுத்தடுத்து இந்தப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த சில தினங்களாக ராம்சரணின் சூட்டிங்கிற்காக நியூசிலாந்து சென்றிருந்த ஷங்கர் கடந்த 3ம் தேதி நாடு திரும்பிய நிலையில், இன்றைய தினம் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. சென்னை ஏர்போர்ட்டில் இந்தப் படத்தின் ஷூட்டிங் துவங்கிய நிலையில் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். படத்தில் வில்லன் கேரக்டருக்காக சத்யராஜிடம் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துவரும் நிலையில், பாடல்கள் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நிறைவடைந்து 2023 தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

The post விஜய்-லோகேஷ் இணையும் தளபதி 67 படத்தின் பூஜை இன்று போடப்பட்டது! first appeared on .

]]>