varisu https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 13:02:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 OTT இந்தவார ரிலீஸ் https://www.91mobiles.com/tamil/vaarisu-nanpakal-nerathu-mayakkam-thankam-movie-this-week-ott-release-movie/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vaarisu-nanpakal-nerathu-mayakkam-thankam-movie-this-week-ott-release-movie Tue, 21 Feb 2023 12:03:47 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5981 இந்த வாரம் ஓடிடியில் விஜய்யின் நடிப்பில் மிகவும் பேசப்பட்ட படங்களில் ஒன்றான வாரிசு இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளது.   வாரிசு தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் வாரிசு. இப்படத்தில் ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷியாம், ஜெயசுதா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வாரசுடு என்கிற பெயரில் ரிலீஸ் ஆனது. இருமொழிகளிலும் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்தது. இப்படம் பிப்ரவரி […]

The post OTT இந்தவார ரிலீஸ் first appeared on .

]]>

இந்த வாரம் ஓடிடியில்

விஜய்யின் நடிப்பில் மிகவும் பேசப்பட்ட படங்களில் ஒன்றான வாரிசு இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

 

வாரிசு

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் வாரிசு. இப்படத்தில் ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷியாம், ஜெயசுதா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வாரசுடு என்கிற பெயரில் ரிலீஸ் ஆனது. இருமொழிகளிலும் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்தது. இப்படம் பிப்ரவரி 22ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும், இந்தியா தவிர்த்து வெளிநாடுகளில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இப்படம் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

 

இருதுருவம் 2

2019ம் ஆண்டு வெளியான வலைத் தொடர் இருதுருவம். ஒன்பது அத்தியாயங்களைக் கொண்ட இத்தொடர் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. முதல்பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இருதுருவம் 2 புதிய தொடர் பிப்ரவரி 24 முதல் Sony LIV வெளியாக உள்ளது.

வீரசிம்ஹா ரெட்டி

கோபிசந்த் மலினினி இயக்கத்தில், தமன் இசையில், புஷ்பா தயாரிப்பாளர் மித்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளியான திரைப்படம் வீரசிம்ஹா ரெட்டி. பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், ஸ்ருதிஹாசன், வரலட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வீரசிம்ஹா ரெட்டி படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. இதில், வீரசிம்ஹா ரெட்டி டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் பிப்ரவரி 23ந் தேதி வெளியாக உள்ளது.

தங்கம்

இந்தியாவின் தங்கத் தலைநகரான திருச்சூரில் தங்க வர்த்தகத்தில் பணிபுரியும் மூன்று நண்பர்களை மையமாக வைத்து உருவானத் திரைப்படம் தங்கம். பிஜு மேனன், வினீத் ஸ்ரீனிவாசன், மற்றும் வினீத் தட்டில் டேவிட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜனவரி 25ந் தேதி திரையரங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் பிப்ரவரி 22ந் தேதி பிரைம் வீடியோவில் வெளியானது.

நண்பகல் நேரத்து மயக்கம்

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மெகா சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில் கடந்த மாதம் 19ந் தேதி வெளியானத் திரைப்படம் நண்பகல் நேரத்து மயக்கம். இப்படத்தில் ரம்யா பாண்டியன், மறைந்த நடிகர் பூ ராமு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம் என இருமொழிகளில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் நெட்ஃபிளிக்ஸில் பிப்ரவரி 23ந் தேதி வெளியானது

We Have a Ghost

வீ ஹேவ் எ கோஸ்ட் பிப்ரவரி 24ந் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸில் பார்க்கலாம். இதில், ஜெனிஃபர் கூலிட்ஜ் மற்றும் அந்தோனி மேக்கி ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு பேய் வீட்டை ஆக்கிரமித்து வேட்டையாடுகிறது. இதில் இருந்த அந்த குடும்பம் எப்படி தப்பித்தது என்ற திகிலுடன் இந்த படம் நகர்கிறது.

The post OTT இந்தவார ரிலீஸ் first appeared on .

]]>
வாரிசு 150 கோடி வசூல்! குஷ்பு காட்சிகளை வெளியிட முடிவு! https://www.91mobiles.com/tamil/varisu-director-vamshi-paidipalli-says-that-kushbhu-portion-in-the-movie-to-be-released-soon/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=varisu-director-vamshi-paidipalli-says-that-kushbhu-portion-in-the-movie-to-be-released-soon Tue, 17 Jan 2023 11:44:09 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5085 நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஜெயசுதா, ஷாம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களுடன் உருவாகி கடந்த 11ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசான படம் வாரிசு. பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து இந்தப் படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கியுள்ளார். குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து படம் உருவாகியிருந்தாலும் படத்தில் விஜய் படத்திற்கேயுரிய ஆக்ஷன், காமெடி உள்ளிட்ட அம்சங்களும் வெகு சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் படத்தின் பாடல்களும் […]

The post வாரிசு 150 கோடி வசூல்! குஷ்பு காட்சிகளை வெளியிட முடிவு! first appeared on .

]]>

Highlights

  • விஜய்யின் வாரிசு படம் கடந்த 11ம் தேதி ரிலீசாகி 5 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது.
  • குஷ்புவின் காட்சிகள் விரைவில் வெளியிடப்படும் என இயக்குனர் அறிவிப்பு
  • இதையொட்டி படக்குழு சென்னை ஈசிஆரில் சக்சஸ் மீட்டை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஜெயசுதா, ஷாம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களுடன் உருவாகி கடந்த 11ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசான படம் வாரிசு. பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து இந்தப் படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கியுள்ளார்.

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி

பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து படம் உருவாகியிருந்தாலும் படத்தில் விஜய் படத்திற்கேயுரிய ஆக்ஷன், காமெடி உள்ளிட்ட அம்சங்களும் வெகு சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகு சிறப்பாக ரசிகர்களை கவர்ந்துள்ளன.

படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள நிலையில், ரஞ்சிதமே, தீ தளபதி உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து யூடியூவில் அதிகமான வியூஸ்கள் மற்றும் லைக்ஸ்களை பெற்றுள்ளன. படத்தில் நடிகர் விஜய் பாடல் காட்சிகளில் நடனத்தில் தெறிக்க விட்டுள்ளார். அவருக்கு ஈடுகொடுத்து ராஷ்மிகாவும் நடனமாடியுள்ளார்.

ரூ.150 கோடி வசூல்

படம் இத்தகைய பல சிறப்பம்சங்களுடன் வெளியான நிலையிலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆயினும் வசூல்மழையில் தெறிக்க விட்டுள்ளது. அஜித்தின் துணிவு படத்துடன் மோதிய நிலையிலும் 5 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலை எட்டி சாதித்துள்ளது. இதை படத்தின் தயாரிப்பு தரப்பு பெருமையுடன் பகிர்ந்துள்ளது. இதையொட்டி படக்குழு சென்னை ஈசிஆரில் சக்சஸ் மீட்டை நடத்தியுள்ளனர்.

வாரிசு படத்தில் குஷ்பூ

இந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என்று ஆரம்பத்தில் குஷ்பூ பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். ஆனால் ட்ரெயிலரில் அவரை காண முடிந்தது. இந்நிலையில் படம் தற்போது வெளியான நிலையில் அவரது போர்ஷன் அதிகமாக இல்லாத நிலையில், ரசிகர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விரைவில் குஷ்பூ காட்சிகள் வெளியீடு

இந்நிலையில் படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய படத்தின் இயக்குநர் வம்சி படிப்பள்ளி, படத்தின் முதல் பாதியில் குஷ்பூவின் போர்ஷன் 17 நிமிடங்கள் இருந்ததாகவும் மிகவும் அழகான காட்சிகளாக அமைந்திருந்த அவை, படத்தின் நீளம் கருதி அவை நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் டெலிட்டட் காட்சிகளாக அவை வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

 

The post வாரிசு 150 கோடி வசூல்! குஷ்பு காட்சிகளை வெளியிட முடிவு! first appeared on .

]]>
வாரிசு படத்தில் குஷ்புவின் காட்சிகள் இல்லை! ரசிகர்கள் கிண்டல்! https://www.91mobiles.com/tamil/fans-are-trolling-that-kushboo-is-missing-in-vijay-s-varisu/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=fans-are-trolling-that-kushboo-is-missing-in-vijay-s-varisu Thu, 12 Jan 2023 12:46:06 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4951 விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் முக்கியமான கேரக்டர்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் விஜய்யுடன் குஷ்புவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாக முதலில் படக்குழு தெரிவித்திருந்தது. ஆனால், வாரிசு படத்தை தியேட்டரில் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி தான் காத்துள்ளது. குஷ்பு 1999ம் ஆண்டு வெளியான மின்சார கண்ணா படத்தில் விஜய்யும் குஷ்புவும் இணைந்து நடித்திருந்தனர். அதன்பின்னர் தற்போது வாரிசு படத்தில் நடித்துள்ளதாக சொல்லப்பட்டது. தமிழ், […]

The post வாரிசு படத்தில் குஷ்புவின் காட்சிகள் இல்லை! ரசிகர்கள் கிண்டல்! first appeared on .

]]>

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் முக்கியமான கேரக்டர்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் விஜய்யுடன் குஷ்புவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாக முதலில் படக்குழு தெரிவித்திருந்தது. ஆனால், வாரிசு படத்தை தியேட்டரில் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி தான் காத்துள்ளது.

குஷ்பு

1999ம் ஆண்டு வெளியான மின்சார கண்ணா படத்தில் விஜய்யும் குஷ்புவும் இணைந்து நடித்திருந்தனர். அதன்பின்னர் தற்போது வாரிசு படத்தில் நடித்துள்ளதாக சொல்லப்பட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் குஷ்புவுக்கு முக்கியமான கேரக்டர் என்றும், ஆனால் சிறிதுநேரமே திரையில் வரும் எனவும் சொல்லப்பட்டது. வாரிசு படப்பிடிப்பு தொடங்கிய போது இதுபற்றி எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. ஆனால், அதன்பின்னர் வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை டிவிட்டர் ஷேர் செய்திருந்தார் குஷ்பு.

ஆடியோ ரிலீஸில் குஷ்பு

விஜய்யும் குஷ்புவும் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோ வெளியான பின்னரே அவரும் வாரிசும் படத்தில் நடித்துள்ள உறுதியானது. ஆனால் அவரது கேரக்டர் பற்றி படக்குழு எதுவும் அறிவிக்காமல் இருந்தது. இதனால் தியேட்டரில் குஷ்புவின் கேரக்டர் என்னவென்பதை தெரிந்துகொள்ளலாம் என்ற சர்ப்ரைஸுடன் ரசிகர்கள் காத்திருந்தனர். முன்னதாக வாரிசு படத்துக்காக குஷ்பு 40 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கியதாகவும் செய்திகள் வெளியாகிருந்தன. அதேபோல் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவிலும் குஷ்பு கலந்துகொண்டார்.

ரசிகர்கள் ஏமாற்றம்

மேலும் வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தது குறித்த அனுபவங்களையும் பிரபல யூடியூப் சேனலின் பேட்டியில் ஷேர் செய்திருந்தார். ஆனால் நேற்று வெளியான வாரிசு படத்தை பார்த்த ரசிகர்கள், அதில் ஒருகாட்சியில் கூட குஷ்பு வராததை கண்டு ஏமாற்றம் அடைந்தனர். கடைசிவரை சின்ன காட்சியில் கூட குஷ்புவை பார்க்க முடியவில்லை. இதனை நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர். குஷ்புவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய்யுடன் நல்ல கம்பேக் கொடுக்கலாம் என எதிர்பார்த்திருந்தார். ஆனால், இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. வாரிசு ப்ளாக் பஸ்டர் ஹிட் வாரிசு ப்ளாக் பஸ்டர் ஹிட் வாரிசு படத்தில் இருந்து குஷ்புவின் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ரன்னிங் டைம் காரணமாக இந்த எடிட்டிங் நடந்திருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே நேற்று வெளியான வாரிசு வசூல் ரீதியாக பெரிய சக்சஸ் கொடுத்துள்ளது. ஃபேமிலி சென்டிமெண்டல், ஆக்ஷன், என கமர்சியல் ஹிட் கொடுத்துள்ள வாரிசு படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கில் பாலய்யாவின் ரசிகர்கள் செய்த அட்ராசிட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

டோலிவுட் திரையுலகின் மாஸ் நடிகரான பாலகிருஷ்ணா, தற்போது தனது 107வது படத்தில் நடித்து முடித்துள்ளார். வீர சிம்ஹா ரெட்டி என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க கோபிசந்த் மலினேனி டைரக்ட் செய்துள்ளார். இந்தப் படம் சங்கராந்தி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் ஒரு தியேட்டரில் இந்த படத்தை பார்த்த ரசிகர்களின் வெறித்தனமான கூச்சல் பக்கத்து ஸ்க்ரினில் படம் பார்த்து இருந்தவர்களையே மிரள வைத்துள்ளதாம். இதனால் கடுப்பான தியேட்டர் ஆப்ரேட்டர், போலீஸ் ஆபிஸருடன் உள்ளே சென்று ரசிகர்களை வறுத்தெடுத்துவிட்டார். இப்படி கூச்சல் போட்டால் பக்கத்து ஸ்க்ரீனில் படம் பார்ப்பவர்கள் எப்படி நிம்மதியாக பார்க்க முடியும். இதற்கு முன் தெலுங்கு ரசிகர்கள் இப்படி அடராசிட்டி செய்ததில்லை. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் நடந்ததால் காட்சி ரத்து செய்யப்படுகிறது. தயவுசெய்து வெளியே போகவும் என எச்சரிக்கை செய்துவிட்டு செல்கிறார். அவருடன் வந்த போலீஸாரும் ரசிகர்களை வெளியேற சொல்ல, ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

The post வாரிசு படத்தில் குஷ்புவின் காட்சிகள் இல்லை! ரசிகர்கள் கிண்டல்! first appeared on .

]]>
வாரிசு, துணிவு படத்துக்கு சிறப்பு காட்சிகள் கிடையாது. கட்-அவுட்டையும் தூக்கு – அரசு அதிரடி https://www.91mobiles.com/tamil/tamil-nadu-government-ordered-no-special-shows-for-varisu-and-thunivu-on-these-dates/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tamil-nadu-government-ordered-no-special-shows-for-varisu-and-thunivu-on-these-dates Tue, 10 Jan 2023 08:46:07 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4848 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தியேட்டரில் கட் அவுட் வைக்கவும், பால் அபிஷேகம் செய்யவும் தடை விதித்துள்ளது. அதிக டிக்கெட் விலை தொடர்பான புகார்கள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெஷல் ஷோ நடிகர் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் நாளை வெளியாக உள்ளன. அஜித்தின் துணிவு […]

The post வாரிசு, துணிவு படத்துக்கு சிறப்பு காட்சிகள் கிடையாது. கட்-அவுட்டையும் தூக்கு – அரசு அதிரடி first appeared on .

]]>

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தியேட்டரில் கட் அவுட் வைக்கவும், பால் அபிஷேகம் செய்யவும் தடை விதித்துள்ளது.

அதிக டிக்கெட் விலை தொடர்பான புகார்கள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்பெஷல் ஷோ

நடிகர் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் நாளை வெளியாக உள்ளன. அஜித்தின் துணிவு படம் அதிகாலை 1 மணிக்கு வெளியாகிறது. விஜய்யின் வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு வெளியாகிறது. ஜனவரி 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை சிறப்பு காட்சிகளை வெளியிட இரண்டு படக்குழுவும் முடிவு செய்திருந்தது.

அனுமதி இல்லை

இந்நிலையில், விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13, 14, 15 மற்றும் 16ம் தேதி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பேனர் கூடாது

மேலும், திரையரங்குகளில் உள்ள விஜய், அஜித் படங்களின் பேனர்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் பேனர்கள் வைத்து பாலாபிஷேகம் செய்யக் கூடாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் காட்சியில் பாலாபிஷேகம் செய்வதற்காக பால் வண்டிகளில் இருந்து பால் திருடும் நிலை உருவாகலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிக டிக்கெட் விலை

இதுமட்டுமின்றி அதிக விலையில் டிக்கெட் விற்பனை செய்வதாக புகார் எழுந்தால் வாரிசு மற்றும் துணிவு படக்குழுக்கள் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேர்கொண்ட பார்வை படத்துக்கு அதிக டிக்கெட் விற்ற நிலையில், அதற்கான அபராதம் விதிக்கப்பட்டது. அதுபோல் இப்போதும் அதிக டிக்கெட் விலை தொடர்பாக புகார் வெளியானால் தியேட்டர் நிர்வாகங்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில் குடியரசு தினத்தன்று ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி டிரெண்டிங் ஆகி வருகிறது. தீபிகா படுகோன் ஷாருக்கானுக்கு இணையாக சண்டை போடும் காட்சிகள் மற்றும் ஜான் ஆபிரகாமின் வில்லத்தனம் பார்வையாளர்க்ளை கவருகிறது.

ட்விட்டரில் பகிர்ந்த விஜய்

நடிகர் விஜய் வழக்கமாக தனது படங்களின் போஸ்டர்கள் மற்றும் டீசர், ட்ரெய்லர்களை மட்டுமே ட்விட்டரில் ட்வீட் போட்டு வந்த நிலையில், தற்போது ஷாருக்கானின் பதான் படத்தின் தமிழ் ட்ரெய்லரை விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே ஷாருக்கானின் அடுத்த ஜவான் படத்தில் விஜய்யின் கேமியோ இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் விஜய் ட்ரெயிலரை பகிர்ந்து இருக்கிறார்.

விஜயைப் போல் தெலுங்கில் ராம்சரணும் இந்த படத்தின் ட்ரெயிலரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். தென்னிந்தியாவில் ப்ரமோஷன் செய்ய ஷாருக்கான் இன்னும் வரவில்லையே என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பான் இந்தியா அளவில் பிரபலமான நடிகர்களை வைத்து பதான் ட்ரெய்லர் வெளியீட்டு இருக்கிறார் ஷாருக்கான்.

The post வாரிசு, துணிவு படத்துக்கு சிறப்பு காட்சிகள் கிடையாது. கட்-அவுட்டையும் தூக்கு – அரசு அதிரடி first appeared on .

]]>
வாரிசுடு ரிலீஸ் 14ம் தேதிக்கு தள்ளிவைப்பு! விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி! https://www.91mobiles.com/tamil/varasudu-will-arrive-in-theaters-on-january-14th/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=varasudu-will-arrive-in-theaters-on-january-14th Mon, 09 Jan 2023 13:08:36 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4824 விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வாரிசு திரைப்படம் உருவாகியுள்ளது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், குஷ்பூ, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் 11ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வாரிசு படத்தின் ரிலீஸ் தேதியில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வாரிசு விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. தில் […]

The post வாரிசுடு ரிலீஸ் 14ம் தேதிக்கு தள்ளிவைப்பு! விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி! first appeared on .

]]>

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வாரிசு திரைப்படம் உருவாகியுள்ளது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், குஷ்பூ, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் 11ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வாரிசு படத்தின் ரிலீஸ் தேதியில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வாரிசு

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. தில் ராஜூவின் பிரம்மாண்டமான தயாரிப்பில் வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. 11ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட வாரிசு படத்தின் டிக்கெட் புக்கிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில். அஜித்தின் துணிவும் 11ம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழில் வாரிசு என்ற டைட்டிலிலும் தெலுங்கில் வாரிசுடு எனவும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது

ரிலீஸ் தேதி மாற்றம்

முதன்முறையாக் தெலுங்கிலும் விஜய் நேரடியாக அறிமுகமாவதால் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதேநேரம் தெலுங்கில் சிரஞ்சீவியின் வால்டர் வீரைய்யா, பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய படங்களும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகிறது. முதலில் இந்தப் படத்தை தமிழில் வெளியாகும் அதே 11ம் தேதியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது ஆனால் ரிலீசுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், வாரிசுடு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

14ம் தேதி ரிலீஸ்

அதன்படி வாரிசுடு திரைப்படம் வரும் 14ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் தில் ராஜூ அறிவித்துள்ளார். ஆனால் அதேநேரம் தமிழில் திட்டமிட்டபடி 11ம் தேதியே வாரிசு படம் ரிலீசாகும் என்பதையும் அவர் உறுதிசெய்துள்ளார். ஹைதராபாத்தில் தற்போது நடைபெற்ற வாரிசுடு படத்தின் பிரஸ் மீட்டில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தில் ராஜு இது குறித்து அறிவித்துள்ளார். இந்த தேதி மாற்றத்திற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.

காரணம் என்ன?

ஏற்கனவே பண்டிகை காலங்களில் தெலுங்கில் உருவாகும் படங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. ஆனால், அதன்பின்னர் இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது. சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா படங்கள் பொங்கலுக்கு வெளியாவதால், போதுமான் திரையரங்குகள் வாரிசு படத்திற்கு கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே வாரிசுடு ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post வாரிசுடு ரிலீஸ் 14ம் தேதிக்கு தள்ளிவைப்பு! விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி! first appeared on .

]]>
மீண்டும் வரும் பொன்னியின் செல்வன்! https://www.91mobiles.com/tamil/ponniyin-selvan-movie-update/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ponniyin-selvan-movie-update Tue, 27 Dec 2022 11:32:41 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4587 மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘அடிவானத்தில் ஏதோ விசேஷம் இருக்கிறது. என்னவென்று […]

The post மீண்டும் வரும் பொன்னியின் செல்வன்! first appeared on .

]]>

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘அடிவானத்தில் ஏதோ விசேஷம் இருக்கிறது. என்னவென்று உங்களால் யூகிக்க முடிகிறதா..? ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் புதிய அறிவிப்பு நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய் சேதுபதியும் பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்பும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே இந்தியில் வெற்றி பெற்ற ‘அந்தாதூன்’ படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தாதூன் படம் தற்போது தமிழில் ‘ரீமேக்’ செய்யப்பட்டுள்ளது. ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை படக்குழுவினர் மறுத்தனர். பிறகு கிறிஸ்துமஸ் பண்டிகையில் தியேட்டரில் வெளியாகும் என்றும் அறிவித்தனர். ஆனால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் தொழில்நுட்ப பணிகள் இன்னும் முடியாததால் தள்ளிவைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

‘துணிவு’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் துணிவு படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. தற்போது துணிவு பட விளம்பர பேனரை விமானத்தில் இருந்து குதித்து பறக்கவிட்ட நிகழ்வு துபாயில் நடத்துள்ளது. இதுதொடர்பான வீடியோவை படக்குழு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் அஜித் வழியில்… (Going A.K. way) 31 டிசம்பர் 22 அன்று ஒரு அற்புதமான புதிய அறிவிபுடன் வருகிறோம்! என பதிவிட்டு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘வாரிசு’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சில நாட்களுக்கு முன் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்த பல ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், ரசிகர்கள் பலர் உற்சாக மிகுதியால் அதிகப்படியான இருக்கைகளை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து சேதம் குறித்த கணக்கெடுப்பு நடத்திய பின் ‘வாரிசு’ பட தயாரிப்பு நிறுவனத்திடம் உரிய அபராதம் வசூலிக்கப்படும் என்று நேரு உள் விளையாட்டரங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post மீண்டும் வரும் பொன்னியின் செல்வன்! first appeared on .

]]>
விஜய் படத்தை இயக்குவேன். விஷால் நம்பிக்கை! https://www.91mobiles.com/tamil/cinema-vishal-has-decided-to-direct-3-films/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=cinema-vishal-has-decided-to-direct-3-films Tue, 20 Dec 2022 11:14:03 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4427 ‘வீரமே வாகை சூடும்’ படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் ‘லத்தி’. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். ‘ராணா புரொடக்ஷன்’ சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர். ‘லத்தி’ திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. அதனையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடல் ‘ஊஞ்சல் மனம் ஆடுமே’ வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் பலராலும் பகிரப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள […]

The post விஜய் படத்தை இயக்குவேன். விஷால் நம்பிக்கை! first appeared on .

]]>

‘வீரமே வாகை சூடும்’ படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் ‘லத்தி’. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். ‘ராணா புரொடக்ஷன்’ சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர். ‘லத்தி’ திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. அதனையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடல் ‘ஊஞ்சல் மனம் ஆடுமே’ வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் பலராலும் பகிரப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள வீரத்துக்கோர் நிறமுண்டு பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா குரலில் மதன் கார்க்கி வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஷால் அளித்துள்ள பேட்டியில், ”மார்க் ஆண்டனி படத்தை முடித்து விட்டு துப்பறிவாளன் 2-ம் பாகத்தில் நடித்து நானே டைரக்டு செய்ய இருக்கிறேன். தொடர்ந்து விலங்குகளை வைத்து இரு படம் இயக்க உள்ளேன். இது எனது கனவு படம். அதேபோல் ஒரு ரசிகனாக விஜய்யை எப்படி பார்க்க விரும்புகிறேனோ அப்படி ஒரு கதையை எழுதுகிறேன். விஜய்யை சந்தித்து கதை சொல்வேன். அவர் நடிக்கும் படத்தை இயக்குவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து தேர்தலில் நிற்கப்போவதாக வெளியான தகவல் உண்மை இல்லை. அரசியல் என்பது மக்கள் பணி. அதை இப்போதும் செய்து வருகிறேன்.

எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன். திரைப்படங்களை திருட்டு இணையதளத்தில் வெளியிடுவதை அரசு நினைத்தால் உடனே தடுக்க முடியும். சென்னையில் அனைத்து வசதிகள் கொண்ட திரைப்பட நகரை உருவாக்க அமைச்சர் உதயநிதியிடம் கோரிக்கை வைப்பேன். நான் நடித்துள்ள லத்தி படத்தில் போலீஸ்காரர்களின் பிரச்சினைகள், தந்தை, மகன் பாசம் போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்கள் இருக்கும். சண்டை காட்சியில் எனக்கு அதிகம் அடிபட்டது. இந்த படத்தில் எனது நடிப்பு பேசப்படும்” என்றார்.

இந்நிலையில் விஜய் நடித்து வெளிவர இருக்கும் வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் வெளியாகி யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். வாரிசு படத்தின் மூன்றாவது பாடலான சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) பாடல்ல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post விஜய் படத்தை இயக்குவேன். விஷால் நம்பிக்கை! first appeared on .

]]>
லண்டனில் வாரிசு ஜன. 12ம் தேதி ரிஸீஸ்! https://www.91mobiles.com/tamil/it-is-reported-that-vijay-s-varisu-will-release-on-january-12/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=it-is-reported-that-vijay-s-varisu-will-release-on-january-12 Thu, 01 Dec 2022 06:50:45 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4018 விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகிறது. வாரிசு பொங்கல் ரிலீஸை முன்னிட்டு சென்னையில் உள்ள முக்கியமான திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் பேனர் வைக்கத் தொடங்கி விட்டனர். இந்நிலையில், விஜய் ரசிகர்களை அலர்ட் செய்யும் விதமாக லண்டனில் வாரிசு படத்தை வெளியிடும் பட நிறுவனம் ஒரு அப்டேட் கொடுத்துள்ளது. பொங்கல் ரிலீஸ் விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது. தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சில கட்டுப்பாடுகளால், வாரிசு ரிலீஸாவதில் சிக்கல்கள் […]

The post லண்டனில் வாரிசு ஜன. 12ம் தேதி ரிஸீஸ்! first appeared on .

]]>

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகிறது. வாரிசு பொங்கல் ரிலீஸை முன்னிட்டு சென்னையில் உள்ள முக்கியமான திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் பேனர் வைக்கத் தொடங்கி விட்டனர். இந்நிலையில், விஜய் ரசிகர்களை அலர்ட் செய்யும் விதமாக லண்டனில் வாரிசு படத்தை வெளியிடும் பட நிறுவனம் ஒரு அப்டேட் கொடுத்துள்ளது.

பொங்கல் ரிலீஸ்

விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது. தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சில கட்டுப்பாடுகளால், வாரிசு ரிலீஸாவதில் சிக்கல்கள் இருந்தன. ஆனால், அதன் பின்னர் வாரிசு ரிலீஸுக்கு இருந்த பிரச்சினைகள் பேசி முடிக்கப்பட்டன. இதனையடுத்து பொங்கல் ரிலீஸை கன்ஃபார்ம் செய்யும் விதமாக படக்குழு சார்பில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனால் உற்சாகமான விஜய் ரசிகர்கள், வாரிசு செலிப்ரேஷனை இப்போதே தொடங்கிவிட்டனர்.

பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு படத்துடன் அஜித்தின் துணிவும் மோதவுள்ளது. இதனால், யார் வெயிட் என்ற போட்டியை இருதரப்பு ரசிகர்களும் இப்போதே தொடங்கிவிட்டனர். குறிப்பாக சென்னையில் உள்ள முக்கியமான திரையரங்குகளில் வாரிசு படத்திற்கான பிரம்மாண்டமான பேனர்களை வைத்து தெறிக்கவிடுகின்றனர் விஜய் ரசிகர்கள். சென்னை தவிர்த்து மற்ற ஊர்களிலும் விஜய் ரசிகர்கள் வாரிசு ப்ரோமோஷன் வேலைகளை காட்டத் தொடங்கிவிட்டனர்.

FDFS

இந்நிலையில், வாரிசு, துணிவு படங்களுக்கு சமமான திரையரங்குகள் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், FDFS எனப்படும் முதல் நாள் முதல் காட்சி பார்க்கவும் ரசிகர்கள் ரெடியாகி வருகின்றனர். வழக்கமாக அதிகாலை 4 மணிக்கு FDFS காட்சிகள் திரையிடப்படும் நிலையில், வாரிசு படத்துக்கு அதற்கும் முன்னதாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது. வாரிசு திரைப்படத்தை இங்கிலாந்தில் வெளியிடும் அஹிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், ஜனவரி 12ம் தேதி வாரிசு FDFS கன்ஃபார்ம் என போஸ்டர் வெளியிட்டுள்ளது. இதனால், லண்டனில் உள்ள விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். முக்கியமான விஜய்யின் வாரிசு ஜனவரி 12ம் தேதி ரிலீஸாவதும் இப்போது உறுதியாகியுள்ளது.

தெலுங்கு வெர்ஷன்

இதனிடையே, ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலின் தெலுங்கு வெர்ஷன் நேற்று வெளியானது. இந்தப் பாடல் வெளியானது முதல் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழில் விஜய் குரலில் வெளியான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலை, தெலுங்கில் அனுராக் குல்கர்னி பாடியுள்ளார். தெலுங்கில் விஜய்யின் குரலில் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலை கேட்க நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், சாங் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அதேபோல், விரைவில் வாரிசு செகண்ட் சிங்கிள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வைரல்

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது வாரிசு பதாகையை ரசிகர் ஒருவர் கேமராவுக்கு முன்பாக காட்டிய போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி உள்ளன. இந்நிலையில், சென்னையின் பல முன்னணி தியேட்டர்களில் வாரிசு டீம் படத்தின் கட் அவுட்களை வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த டிசம்பர் மாதம் விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 24ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரிசு படம் கடைசி நேரத்தில் சந்தித்த சிக்கல்கள் குறித்தும் படம் குறித்தும் விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post லண்டனில் வாரிசு ஜன. 12ம் தேதி ரிஸீஸ்! first appeared on .

]]>