vijay 67 https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 16:20:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 விஜயின் புதுப்படத்தின் பெயர் வெளியானது! https://www.91mobiles.com/tamil/vijay-as-leo-singam-lokesh-s-signature-loading/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vijay-as-leo-singam-lokesh-s-signature-loading Fri, 03 Feb 2023 14:51:14 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5557 இந்த ப்ரோமோவில் சிங்கத்தை குறிக்கும் வகையில் விஜய்யின் லியோ கேரக்டர் அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.   தளபதி 67 டைட்டில் விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு லியோ என்ற டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. கமலின் விக்ரம் படத்தின் டைட்டில் ப்ரோமோ போன்றே, தளபதி 67 […]

The post விஜயின் புதுப்படத்தின் பெயர் வெளியானது! first appeared on .

]]>

Highlights

  • விஜய் நடித்து வரும் அவரது 67வது படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.
  • படத்தின் டைட்டில் ‘லியோ’ என ப்ரோமோ வீடியோவுடன் படக்குழு அறிவித்துள்ளது.  

இந்த ப்ரோமோவில் சிங்கத்தை குறிக்கும் வகையில் விஜய்யின் லியோ கேரக்டர் அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தளபதி 67 டைட்டில்

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு லியோ என்ற டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. கமலின் விக்ரம் படத்தின் டைட்டில் ப்ரோமோ போன்றே, தளபதி 67 டைட்டில் லியோ ப்ரோமோவும் வெளியாகியுள்ளது.

 

லியோ – சிங்கம் – விஜய்

பனிபடர்ந்த பகுதியில் தனியாக இருக்கும் வீட்டில் விஜய் சாக்லேட்டையும் பெரிய வாள் ஒன்றையும் தயாரிப்பதாக உருவாகியுள்ளது. மேலும் பிளடி ஸ்வீட் என விஜய் பஞ்ச் வைக்க தங்க நாணையத்தின் ஒருபக்கம் சிங்கத்தின் உருவமும், இன்னொரு பக்கம் லியோ என்ற டைட்டிலும் வருகிறது. அதன்படி இந்தப் படத்தில் விஜய்யை தனிக்காட்டு சிங்கமாக களமிறக்குகிறார் லோகேஷ். முக்கியமாக இந்த சிங்க முத்திரை விக்ரம் படத்தில் வரும் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரை நினைவுப்படுத்துவதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

 

ஸ்கார்ப்பியன் டாட்டூவுடன் ரோலக்ஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தின் இறுதியில் சூர்யாவும் கேமியோ ரோலில் என்ட்ரி கொடுத்து மிரட்டியிருந்தார். ரோலக்ஸ் என்ற கேரக்டரில் சூர்யாவின் அசுரத்தனமான வில்லத்தனம் சிலிர்க்க வைத்திருந்தது. இந்த சீனில் சூர்யா ஸ்கார்ப்பியன் டாட்டூவுடன் நடித்திருந்தார். இப்போது தளபதி 67 டைட்டில் லியோ என அறிவிக்கப்பட்டுள்ளது. லியோ என்பது சிங்கத்தை குறிப்பதால் விக்ரம் ரோலக்ஸுக்கும் விஜய்யின் லியோ கேரக்டருக்கும் தொடர்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கன்ஃபார்மா லோகேஷ் யுனிவர்ஸ் தான்

கைதி படத்தில் நெப்போலியன் என்ற போலீஸ் கேரக்டரில் நடித்திருந்த ஜார்ஜ் மரியன், விக்ரமில் ஏஜெண்ட் டினாவாக நடித்த வசந்தி இருவருமே லியோ படத்தில் இணைந்துள்ளனர். தற்போது ப்ரோமோவும் விக்ரம் பட ஸ்டைலில் வெளியாகியுள்ளது. இதனிடையே ரோலக்ஸின் ஸ்கார்ப்பியன் டாட்டூவும் விஜய்யின் லியோ கேரக்டரும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸான லீட் கொடுத்துள்ளது. இதனால் இந்தப் படம் கண்டிப்பாக லோகேஷ் யுனிவர்ஸில் கான்செப்ட்டில் இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

 

ஆயுத பூஜைக்கு ரிலீஸாகும் லியோ

லியோ படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே சென்னையில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர். விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத் கெளதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் ஆகியோர் தளபதி 67ல் நடித்து வருகின்றனர். இந்நிலையில் லியோ டைட்டில் மட்டும் இல்லாமல், படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என அறிவித்து படக்குழு டபுள் ட்ரீட் கொடுத்துள்ளது.

The post விஜயின் புதுப்படத்தின் பெயர் வெளியானது! first appeared on .

]]>
தளபதி 67 அப்டேட்டில் அசந்து போன விஜய் ரசிகர்கள்! https://www.91mobiles.com/tamil/actors-of-thalapathy-67-movie-updated-by-the-team/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=actors-of-thalapathy-67-movie-updated-by-the-team Tue, 31 Jan 2023 15:44:32 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5417 வசூல்மழையில் வாரிசு வாரிசு படத்தையும் தாண்டி தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே காணப்பட்ட நிலையில், தற்போது அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தருணம் வந்துள்ளது. நடிகர் விஜய்யின் வாரிசு படம் ரிலீசாகி சில தினங்களே ஆகியுள்ள நிலையில், படம் சர்வதேச அளவில் 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. இன்னும் சில தினங்களில் 300 கோடி ரூபாய் வசூலை படம் தாண்டும் என்று சினிமா ட்ராக்கர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் கொண்டாட்டம் முடிவதற்கு முன்னதாகவே ரசிகர்கள் […]

The post தளபதி 67 அப்டேட்டில் அசந்து போன விஜய் ரசிகர்கள்! first appeared on .

]]>

Highlights

  • தளபதி 67 படத்தின் தயாரிப்பு தரப்பு மற்றும் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து படத்தின் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.
  • நடிகர் விஜய்யின் தளபதி 67 அறிவிப்பு வந்தது முதல் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சிக்கடலில் திளைத்து வருகின்றனர்.

வசூல்மழையில் வாரிசு

வாரிசு படத்தையும் தாண்டி தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே காணப்பட்ட நிலையில், தற்போது அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தருணம் வந்துள்ளது. நடிகர் விஜய்யின் வாரிசு படம் ரிலீசாகி சில தினங்களே ஆகியுள்ள நிலையில், படம் சர்வதேச அளவில் 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. இன்னும் சில தினங்களில் 300 கோடி ரூபாய் வசூலை படம் தாண்டும் என்று சினிமா ட்ராக்கர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் கொண்டாட்டம் முடிவதற்கு முன்னதாகவே ரசிகர்கள் அடுத்த கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டனர்.

 

தளபதி 67 படம்

வாரிசு படத்தின் சூட்டிங்கின்போதே தளபதி 67 படத்தின் தகவல்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தது. இதற்கேற்றாற்போல லோகேஷ் கனகராஜ் போகுமிடமெல்லாம் அவரை ரசிகர்கள் தொடர்ந்து தளபதி 67 அப்டேட் கேட்டு மொய்த்தவண்ணம் இருந்தனர். படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன் தான் அப்டேட் கொடுப்பதாக அவர் நழுவினாலும் அவரை ரசிகர்கள் விட்டபாடில்லை.

அடுத்தடுத்த அப்டேட்கள்

இந்நிலையில் விஜய்யின் 67வது படமான தளபதி 67ல் அவர் 50 வயது கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக த்ரிஷா பல ஆண்டுகள் கழித்து இணையவுள்ளதாகவும், விஜய்க்கு சஞ்சய் தத் உள்ளிட்ட 6 வில்லன்கள் நெருக்கடி கொடுக்கவுள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் ஆக்கிரமிப்பு செய்தன.

 

தளபதி 67 குறித்த அறிவிப்பு

இந்நிலையில் வாரிசு படம் ரிலீசாகி படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இதையடுத்து நேற்று மாலை தளபதி 67 படம் குறித்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது. தயாரிப்பாளர் லலித்குமார் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து தளபதி 67 படம் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டனர்.

 

இசை, நடனம், சண்டை

நேற்றைய தினம் படத்தின் அறிவிப்புடன் படத்தின் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், சண்டை, நடனம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவுள்ளவர்கள் குறித்த அறிவிப்புகளும் காணப்பட்டது. படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த கூட்டணி நியூக்ளியர் பாமாக ரசிகர்களை தாக்கும் என்று அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

நடிகர்கள் அப்டேட்

இந்நிலையில் இன்று மாலையிலிருந்து படத்தின் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. முதலில் படத்தில் இணையவுள்ள சஞ்சய் தத், தமிழில் தன்னுடைய முதல் படமான தளபதி 67 குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அடுத்த ஒரு மணிநேரத்தில் படத்தில் இணைந்துள்ள பிரியா ஆனந்த் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ப்ரியா ஆனந்த்

இந்த வலிமையான டீமுடன் இணைந்து பணியாற்றுவது த்ரில்லிங்காக உள்ளதாக பிரியா ஆனந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்னும் 4 மணிநேரத்திற்கு அடுத்தடுத்து நடிகர்கள், நடிகைகள் குறித்து அறிவிப்பு வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் காஷ்மீரின் ஸ்ரீநகரில் நாளைய தினம் துவங்கவுள்ளதாகவும் அதற்காக த்ரிஷா உள்ளிட்டவர்கள் தனி விமானத்தில் தங்களது பயணத்தை துவங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post தளபதி 67 அப்டேட்டில் அசந்து போன விஜய் ரசிகர்கள்! first appeared on .

]]>
விஜய் 67 படப்பிடிப்பைத் துவங்கினார் லோகேஷ் கனகராஜ்! https://www.91mobiles.com/tamil/thalapathy-67-movie-update/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=thalapathy-67-movie-update Mon, 02 Jan 2023 15:17:35 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4628 நடிகர் விஜய் நடித்திருக்கும் வாரிசு படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். விஜய் – லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், […]

The post விஜய் 67 படப்பிடிப்பைத் துவங்கினார் லோகேஷ் கனகராஜ்! first appeared on .

]]>

நடிகர் விஜய் நடித்திருக்கும் வாரிசு படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். விஜய் – லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது. இதனையடுத்து சில ரசிகர்கள் Fan-made போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. லோகேஷ் மற்றும் எங்கள் தளபதியை சந்தித்தேன்… அதே ஆற்றல் முழு வீச்சில்.. முதல் நாளே தூள்..” என்று நடிகர் மனோபாலா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

சாகுந்தலம் படம் கடந்த நவம்பர் 4-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் படத்தை 3-டியில் மாற்ற உள்ளதாகவும், இதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற பிப்ரவரி 17ம் தேதி 3டி-யில் திரையரங்குகளில் சாகுந்தலம் படம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘புஷ்பா’. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த ஆண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் ‘புஷ்பா’ படம் ரஷ்ய மொழியில் கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி வெளியானது. இப்படத்தின் சிறப்பு காட்சிகள் ரஷ்யாவின் மாஸ்கோவில் 01.12.2022 அன்று படக்குழு முன்னிலையில் திரையிடப்பட்டது. இதற்காக இயக்குனர் சுகுமார், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மாஸ்கோவிற்கு சென்றிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் புஷ்பா திரைப்படம் ரஷ்யாவில் வசூல் சாதனை நிகழ்த்திவருவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் ரஷ்யாவில் 25 நாட்களை கடந்து 774 திரைகளில் 10 மில்லியன் ரூபல்ஸ் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

The post விஜய் 67 படப்பிடிப்பைத் துவங்கினார் லோகேஷ் கனகராஜ்! first appeared on .

]]>