vivo t1x https://www.91mobiles.com/tamil Wed, 16 Nov 2022 07:12:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 29% விலைகுறைப்பில் விவோ டி1எக்ஸ் https://www.91mobiles.com/tamil/vivo-smartphone-now-available-to-buy-for-just-rs-11050-instead-of-rs-16990-in-flipkart/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vivo-smartphone-now-available-to-buy-for-just-rs-11050-instead-of-rs-16990-in-flipkart Wed, 16 Nov 2022 07:12:42 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3648 ப்ளிப்கார்ட் இணையதளம், போன்களுக்கென ‘Flipkart Mobiles Bonanza deals’ எனும் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விவோ டி1எக்ஸ் அந்தவகையில் விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த விவோ டி1எக்ஸ் போனுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடி மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். தள்ளுபடி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 29 சதவீதம் தள்ளுபடி […]

The post 29% விலைகுறைப்பில் விவோ டி1எக்ஸ் first appeared on .

]]>

ப்ளிப்கார்ட் இணையதளம், போன்களுக்கென ‘Flipkart Mobiles Bonanza deals’ எனும் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

விவோ டி1எக்ஸ்

அந்தவகையில் விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த விவோ டி1எக்ஸ் போனுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடி மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

தள்ளுபடி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது முன்பு ரூ.16,990-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த விவோ டி1எக்ஸ் போன் தற்போது ரூ.11,999-க்கு கிடைக்கிறது. அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ் சலுகையிலும் இந்த போனை வாங்க முடியும். இதன் காரணமாக இந்த சிறப்பு விற்பனையில் விவோ டி1எக்ஸ் ஸமார்ட்போன் வெறும் ரூ.11,050-விலையில் வாங்க முடியும்.

விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போன் 6.58 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். 1,080 x 2,408 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சிப்செட்

விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கேமரா

விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான படங்களை எடுக்க முடியும்.

வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்

விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் இது இது 4G LTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS, Glonass, OTG, FM ரேடியோ மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றை ஆதரிக்கிறது. 5ஜி போன் கிடையாது இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களுமே அருமையாக இருக்கிறது. ஆனால் இது 5ஜி போன் கிடையாது. அதாவது 4ஜி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. ஒரு நல்ல 4ஜி போன் வாங்க நினைக்கும் பயனர்கள் இதை தேர்வு செய்வது நல்லது.

The post 29% விலைகுறைப்பில் விவோ டி1எக்ஸ் first appeared on .

]]>
போன் அதுதான்.. ஆனா பேரு வேற! https://www.91mobiles.com/tamil/new-upcoming-budget-phone-iqoo-z6-lite-launch-date-specifications-price/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=new-upcoming-budget-phone-iqoo-z6-lite-launch-date-specifications-price Wed, 17 Aug 2022 05:13:40 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1652 ரூ.11,000 பட்ஜெட்டில் இப்படி ஒரு ஸ்மார்ட்போனா என்று நம்மை ஆச்சரியப்படுத்தும் பேசுவது iQOO Z6 Lite ஸ்மார்ட்போனைப் பற்றித்தான் நாம் விரிவாக பார்க்க இருக்கிறோம். ஆனால் இது விவோ ஸ்மார்ட்போனின் ‘ரீபிராண்டட் வெர்ஷன்’ ஆகும். அதாவது, விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள iQOO Z6 Lite ஆனது கடந்த மாதம் அறிமுகமான Vivo T1x ஸ்மார்ட்போனின் “மறுபெயரிடப்பட்ட” மாடல் ஆக இருக்கும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. இங்கே சுவாரசியம் என்னவென்றால், iQOO Z6 Lite ஆனது விவோ டி1எக்ஸ் […]

The post போன் அதுதான்.. ஆனா பேரு வேற! first appeared on .

]]>

ரூ.11,000 பட்ஜெட்டில் இப்படி ஒரு ஸ்மார்ட்போனா என்று நம்மை ஆச்சரியப்படுத்தும் பேசுவது iQOO Z6 Lite ஸ்மார்ட்போனைப் பற்றித்தான் நாம் விரிவாக பார்க்க இருக்கிறோம். ஆனால் இது விவோ ஸ்மார்ட்போனின் ‘ரீபிராண்டட் வெர்ஷன்’ ஆகும். அதாவது, விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள iQOO Z6 Lite ஆனது கடந்த மாதம் அறிமுகமான Vivo T1x ஸ்மார்ட்போனின் “மறுபெயரிடப்பட்ட” மாடல் ஆக இருக்கும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. இங்கே சுவாரசியம் என்னவென்றால், iQOO Z6 Lite ஆனது விவோ டி1எக்ஸ் போனை விட குறைவான விலைக்கு அறிமுகமாகும் என்பது தான்!

இந்தியாவில் iQOO Z6 Lite ஸ்மார்ட்போன் வருகிற செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியாகலாம். அறிமுக தேதியில் கொஞ்சம் குழப்பம் இருந்தாலும் கூட, அம்சங்கள் மற்றும் விலை பற்றி எந்த குழப்பமும் இல்லை. ஏனென்றால், விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போன் தான் ஏற்கனவே அறிமுகமாகி விட்டதே!

அம்சங்கள்

ஐக்யூ Z6 லைட் ஆனது ஆனது Qualcomm Snapdragon 680 ப்ராசஸர் உடனாக 6GB வரையிலான ரேம் மற்றும் 128GB அளவிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரலாம். அதாவது இது ஒரு 4G போனாக இருக்கும். டிஸ்பிளேவை பொறுத்தவரை, iQOO Z6 Lite ஆனது 90Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் கூடிய 6.58-அங்குல அளவிலான FullHD LCD பேனலை கொண்டிருக்கலாம்.

கேமராக்கள் & பேட்டரி

கேமராக்களை பொறுத்தவரை, ட்ரிபிள் ரியர் கேமராக்களைக் கொண்டிருக்குமா அல்லது டூயல் கேமராக்கள் இருக்குமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஆனால் இது 50-மெகாபிக்சல் மெயின் கேமராவை கொண்டிருக்கலாம். முன்பக்கத்தை பொறுத்தவரை, வீடியோ அழைப்புக்கும், புகைப்படம் எடுக்கவும் இதில் 8-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இடம்பெறலாம். மேலும் இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிங் வசதியோடு கூடிய 5000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் Z6 Lite ஆனது முன்னதாக அறிமுகமான Z6 ஸ்மார்ட்போனின் டோன்-டவுன் வெர்ஷன் ஆகவும் இருக்கும் என்பது போல் தெரிகிறது.

விலை

iQOO Z6 Lite ஆனது Vivo T1x ஸ்மார்ட்போனின் விலையை விட ரூ.500 முதல் ரூ.700 வரை குறைவான விலைக்கு விற்பனைக்கு வரலாம். அதாவது iQOO Z6 Lite ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலையானது சுமார் ரூ.11,499 ஆக இருக்கும். அறிமுக சலுகை மற்றும் வங்கிச் சலுகை போன்ற சலுகைகள் கிடைக்கும் பட்சத்தில், இது ரூ.10,000க்கு கூட கிடைக்கலாம். Vivo T1x ஸ்மார்ட்போன் ஆனது 2 வெவ்வேறு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் ரூ.11,999 க்கும் மற்றும் ரூ.14,999 க்கும் விற்பனையாகிறது. மேலும் iQOO Z6 Lite ஆனது Vivo T1x ஸ்மார்ட்போனை போலவே Gravity Black மற்றும் Space Blue என 2 வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post போன் அதுதான்.. ஆனா பேரு வேற! first appeared on .

]]>
இந்தியாவில் விற்பனைக்கு வந்தது Vivo T1x ஸ்மார்ட்போன்! https://www.91mobiles.com/tamil/vivo-t1x-complete-smartphone-experience-under-rs-12000/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vivo-t1x-complete-smartphone-experience-under-rs-12000 Thu, 28 Jul 2022 12:49:16 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1148 Vivo நிறுவனம் அதன் T1x ஸ்மார்ட்போனை இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான இது தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் (refresh rate) கூடிய 6.58 அங்குல Full HD plus LCD டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது. 90.6 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோவும் (body to screen ratio) உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்நாப்டிராகன் (Qualcomm snapdragon) 680 புராசஸரை கொண்டுள்ளது. பின்பக்க […]

The post இந்தியாவில் விற்பனைக்கு வந்தது Vivo T1x ஸ்மார்ட்போன்! first appeared on .

]]>

Vivo நிறுவனம் அதன் T1x ஸ்மார்ட்போனை இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான இது தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

இதில் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் (refresh rate) கூடிய 6.58 அங்குல Full HD plus LCD டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது. 90.6 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோவும் (body to screen ratio) உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்நாப்டிராகன் (Qualcomm snapdragon) 680 புராசஸரை கொண்டுள்ளது. பின்பக்க கேமராவை பொறுத்தவரை டூயல் கேமரா செட் அப் உடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவும், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் எல்.இ.டி பிளாஷ் லைட் ஆகியவை பின்பகுதியில் இடம்பெற்றுள்ளன. முன்பகுதியில் வீடியோ கால் பேசவும், செல்ஃபி எடுப்பதற்கும் ஏதுவாக 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது. மேலும், இந்த மொபைலில் Super night mode, பல போட்டோகளை ஒன்றாக்கி ஒரே போட்டோவாக மாற்றும் வசதி, RAW அளவுக்கு super noice redkuction செய்யும் வசதி, 4 வகையான night filterகள் போன்ற வசதிகளும், 4cm தூரம் வரை அருகில் சென்று போட்டு எடுக்கும் அளவிற்கான சூப்பர் மேக்ரோ கேமரா அம்சமும் இந்த போனில் இருக்கின்றன.
இந்த போனில் கேமிங் விளையாடுவதற்கு ஏதுவாக 4 லேயர் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொபைல் சூடாவது பெருமளவு தடுக்கப்படும். இதுதவிர 4D game vibration, Game Picture-in-picture mode, Do Not Disturb mode மற்றும் Esports mode ஆகியவற்றை உள்ளடக்கிய ‘Ultra Game mode’ அம்சமும் இந்த மொபைலில் இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனில் 5,000 mAh திறன் கொண்ட பேட்டரி இடம்பெற்று உள்ளது. இதுதவிர 18வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இதில் ‘Vivo Energy Gurdian’ (VEG) என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மொபைல் பேட்டரியை over charging செய்வதன் மூலம் ஏற்படும் சேதாரத்தில் இருந்து பாதுகாக்கலாம். இந்த விவோ T1x மொபைலில் LPDDR4X RAM பயன்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இதன் RAM அளவை 2GB அளவுக்கு அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.

இந்த ஸ்மார்ட்போன் கிராவிட்டி பிளாக் (Gravity Black) மற்றும் ஸ்பேஸ் ப்ளூ (Space Blue) ஆகிய இருவித கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. விலையை பொறுத்தவரை விவோ T1x ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.11 ஆயிரத்து 999 எனவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 12,999 எனவும், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ. 14,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. HDFC வங்கியின் கிரெடிட் கார்டோ அல்லது டெபிட் கார்டோ பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

The post இந்தியாவில் விற்பனைக்கு வந்தது Vivo T1x ஸ்மார்ட்போன்! first appeared on .

]]>
விவோவின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் https://www.91mobiles.com/tamil/vivo-t1x-launched-in-india-with-snapdragon-680/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vivo-t1x-launched-in-india-with-snapdragon-680 Thu, 21 Jul 2022 11:17:54 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1011 விவோ நிறுவனம் அதன் T1x ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான இதில் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு refresh rate கூடிய 6.58 அங்குல Full HD LCD டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது. 90.6 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்நாப்டிராகன் 680 புராசஸரை கொண்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை டூயல் கேமரா செட் அப் உடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவும், 2 மெகாபிக்சல் […]

The post விவோவின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் first appeared on .

]]>

விவோ நிறுவனம் அதன் T1x ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான இதில் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு refresh rate கூடிய 6.58 அங்குல Full HD LCD டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது. 90.6 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்நாப்டிராகன் 680 புராசஸரை கொண்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை டூயல் கேமரா செட் அப் உடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவும், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் LED Flash Light ஆகியவை பின்பகுதியில் இடம்பெற்றுள்ளன. முன்பகுதியில் வீடியோ கால் மற்றும் செல்ஃபி எடுப்பதற்கு ஏதுவாக 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

ஆண்ட்ராய்டு 12 மேல் கட்டப்பட்ட FunTouch OS 12 இயங்குதளத்துடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனில் 5,000mAh திறன் கொண்ட பேட்டரி இடம்பெற்று உள்ளது. இதுதவிர 18W fast charging வசதியும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் கிராவிட்டி பிளாக் (Gravity black) மற்றும் ஸ்பேஸ் ப்ளூ (Space blue) ஆகிய இருவித கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. விலையை பொறுத்தவரை விவோ T1x ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.11 ஆயிரத்து 999 எனவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 12,999 எனவும், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ. 14,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வருகிற ஜூலை 27-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர உள்ளது.

The post விவோவின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் first appeared on .

]]>