இந்தியாவில் விற்பனைக்கு வந்தது Vivo T1x ஸ்மார்ட்போன்!


Vivo நிறுவனம் அதன் T1x ஸ்மார்ட்போனை இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான இது தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

இதில் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் (refresh rate) கூடிய 6.58 அங்குல Full HD plus LCD டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது. 90.6 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோவும் (body to screen ratio) உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்நாப்டிராகன் (Qualcomm snapdragon) 680 புராசஸரை கொண்டுள்ளது. பின்பக்க கேமராவை பொறுத்தவரை டூயல் கேமரா செட் அப் உடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவும், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் எல்.இ.டி பிளாஷ் லைட் ஆகியவை பின்பகுதியில் இடம்பெற்றுள்ளன. முன்பகுதியில் வீடியோ கால் பேசவும், செல்ஃபி எடுப்பதற்கும் ஏதுவாக 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது. மேலும், இந்த மொபைலில் Super night mode, பல போட்டோகளை ஒன்றாக்கி ஒரே போட்டோவாக மாற்றும் வசதி, RAW அளவுக்கு super noice redkuction செய்யும் வசதி, 4 வகையான night filterகள் போன்ற வசதிகளும், 4cm தூரம் வரை அருகில் சென்று போட்டு எடுக்கும் அளவிற்கான சூப்பர் மேக்ரோ கேமரா அம்சமும் இந்த போனில் இருக்கின்றன.
இந்த போனில் கேமிங் விளையாடுவதற்கு ஏதுவாக 4 லேயர் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொபைல் சூடாவது பெருமளவு தடுக்கப்படும். இதுதவிர 4D game vibration, Game Picture-in-picture mode, Do Not Disturb mode மற்றும் Esports mode ஆகியவற்றை உள்ளடக்கிய ‘Ultra Game mode’ அம்சமும் இந்த மொபைலில் இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனில் 5,000 mAh திறன் கொண்ட பேட்டரி இடம்பெற்று உள்ளது. இதுதவிர 18வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இதில் ‘Vivo Energy Gurdian’ (VEG) என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மொபைல் பேட்டரியை over charging செய்வதன் மூலம் ஏற்படும் சேதாரத்தில் இருந்து பாதுகாக்கலாம். இந்த விவோ T1x மொபைலில் LPDDR4X RAM பயன்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இதன் RAM அளவை 2GB அளவுக்கு அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.

இந்த ஸ்மார்ட்போன் கிராவிட்டி பிளாக் (Gravity Black) மற்றும் ஸ்பேஸ் ப்ளூ (Space Blue) ஆகிய இருவித கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. விலையை பொறுத்தவரை விவோ T1x ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.11 ஆயிரத்து 999 எனவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 12,999 எனவும், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ. 14,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. HDFC வங்கியின் கிரெடிட் கார்டோ அல்லது டெபிட் கார்டோ பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.