vivo v27 series https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 07:18:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 50MP செல்ஃபி கேமராவோடு அறிமுகமானது விவோ வி27 சீரிஸ்! https://www.91mobiles.com/tamil/vivo-v27-v27-pro-launched-price-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vivo-v27-v27-pro-launched-price-in-india Wed, 01 Mar 2023 09:08:10 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6147 விவோவின் V27 சீரிஸ் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் V27 என்ற மொபைலும், அதைல் சில சிறப்பம்சங்களைச் சேர்த்து V27 Pro என்ற வேரியண்டாகவும் வெளியாகி உள்ளது. இவை ப்ரீமியம் மிட்ரேஞ்ச் போன்களாக உணர வைக்கின்றன.  இரண்டு மொபைல்களும் மீடியாடெக் டைமென்சிட்டி ப்ராசஸர், ஆண்ட்ராய்டு 13ன் மேல் ஃபன் டச் ஓஎஸ் 13ன் ஸ்கின் கொண்ட இயங்குதளம், பின்பக்கத்தில் 50MP முதன்மை கேமரா போன்றவற்றைக் கொண்டுள்ளன. இந்த மொபைல்களை ஃப்ளிப்கார்ட் மற்றும் விவோவின் இயங்குதளத்தில் வாங்க முடியும்.   […]

The post 50MP செல்ஃபி கேமராவோடு அறிமுகமானது விவோ வி27 சீரிஸ்! first appeared on .

]]>

Highlights

  • அதிக எதிர்பார்ப்பில் இருந்த விவோவின் V27 சீரிஸ் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது
  • இந்த சீரிஸில் ப்ரீமியம் மிட்-ரேஞ்ச் போன்களாக V27 மற்றும் V27 Pro வெளியாகி இருக்கிறது
  • இந்த ஸ்மார்ட்போன் 120Hz 3D AMOLED டிஸ்ப்ளேவை, இன் –டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், மீடியாடெக் டைமென்சிட்டி ப்ராசஸர் போன்ற பலவிதமான அம்சங்களைக் கொண்டுள்ளது.

விவோவின் V27 சீரிஸ் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் V27 என்ற மொபைலும், அதைல் சில சிறப்பம்சங்களைச் சேர்த்து V27 Pro என்ற வேரியண்டாகவும் வெளியாகி உள்ளது. இவை ப்ரீமியம் மிட்ரேஞ்ச் போன்களாக உணர வைக்கின்றன.  இரண்டு மொபைல்களும் மீடியாடெக் டைமென்சிட்டி ப்ராசஸர், ஆண்ட்ராய்டு 13ன் மேல் ஃபன் டச் ஓஎஸ் 13ன் ஸ்கின் கொண்ட இயங்குதளம், பின்பக்கத்தில் 50MP முதன்மை கேமரா போன்றவற்றைக் கொண்டுள்ளன. இந்த மொபைல்களை ஃப்ளிப்கார்ட் மற்றும் விவோவின் இயங்குதளத்தில் வாங்க முடியும்.

 

விவோ V27 ப்ரோ விலை

விவோ V27 மொபைலின் 8GB/128GB வேரியண்ட் 37,999 ரூபாய்க்கும் , 8GB/256GB வேரியண்ட் 39,999 ரூபாய்க்கும், 12GB/256GB சேமிப்புத்திறன் கொண்ட விவோ V27 ப்ரோ மொபைல் 42,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த மொபைலுக்கான முன்பதிவு இன்று முதலே துவங்கி இருக்கிறது.  மேலும் இந்த மொபைலை 6ஆம் தேதி முதல் வாங்க முடியும்.

 

விவோ V27 விலை

அதுபோல் விவோ V27 மொபைலின் 8GB/128GB வேரியண்ட் 32,999 ரூபாய்க்கும் , 12GB/256GB சேமிப்புத்திறன் கொண்ட விவோ V27 மொபைல் 36,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வர இருக்கிறது. மேலும் இந்த மொபைலை 23ஆம் தேதி முதல் வாங்க முடியும். இரண்டு மாடல்களும் நோபல் ப்ளாக் மற்றும் மேஜிக் ப்ளூ ஆகிய நிறங்களில் வெளியாகி இருக்கின்றன.

சலுகைகள் & கிடைக்கும் இடங்கள்

இந்த மொபைலை ICICI, Kotak மற்றும் HDB வங்கிகளின் வழியே வாங்கும் போது ரூ. 3,500 வரை கேஷ்பேக் பெற முடியும். ரிலையன்ஸ் டிஜிட்டல், ஜிஒ டிஜிட்டல் லைஃப், க்ரோமா, விஜய் சேல்ஸ், பூர்விகா, சங்கீதா, பிக் சி, Lot மற்றும் நிறைய இடங்களில் இந்த சலுகையைப் பெறலாம்.

இதுதவிர HDFC வங்கி, ICICI வங்கி, மற்றும் கோடக் வங்கி மூலம் இந்த மொபைலை வாங்கும்போது ரூ. 3000 தள்ளுபடியும், எக்ஸ்சேஞ்ச் சலுகையாக 2500 ரூபாயும் பெற முடியும். முன்பதிவு செய்ய நினைப்பவர்கள்  ஃப்ளிப்கார்ட், விவோ இணையதளத்தின் வழியே ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

 

விவோ V27 & விவோ V27 ப்ரோ அம்சங்கள்

விவோ V27 ப்ரோ மொபைல் 6.78 அங்குல 3D curved edges உடன் கூடிய சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 120Hz ரிப்ரெஷ் ரேட், FHD+ அடர்த்தி, 1.07 பில்லியன் கலர்களைக் கொண்டதாக இருக்கிறது.

 

சிப்செட் & மெமரி

விவோ V27 ப்ரோ மொபைல் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 சிப்செட்டைக் கொண்டுள்ளது. அதே வேளையில் விவோ V27 மொபைல் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட்டைக் கொண்டுள்ளது. மற்றபடி இரண்டு வேரியண்டுகளும்  8GB அல்லது 12GB ரேமையும், 128GB அல்லது 256GB சேமிப்புத்திறனையும் கொண்டுள்ளது. இந்த ரேம் LPDDR5 வகையையும், சேமிப்புத்திறன் UFS 3.1 வகையையும் சேர்ந்தது.

 

கனெக்டிவிட்டி

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தின் மேல் விவோவின் ஃபன் டச் ஸ்கின் கொண்டு உருவாக்கப்பட்ட இயங்குதளத்தில் இந்த விவோ வி27 மொபைல்கள் இயங்குகின்றன. இதில் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்ட 4600mAh பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. 7.36 மிமீ தடிமனில் 182கிராமில் உருவாகி இருக்கும் இரட்டை சிம் மொபைலான இதில், ப்ளூடூத் 5.3, டூயல் பேண்ட் வை-பை, USB Type C, GPS, BEIDOU, GLONASS, GALILEO, Navic போன்ற பல அம்சங்கள் இருக்கின்றன.

 

கேமரா

கேமராவைப் பொறுத்தவரை இந்த விவோ வி27 சீரிஸில் Sony IMX766V சென்சாருடைய  50MP கேமரா முதன்மை கேமரா, 8MP வைடு ஆங்கிள் லென்ஸ், 2MP மேக்ரோ சென்சார் என ட்ரிபிள் கேமரா செட்டப் இருக்கிறது.  இந்த செட்டப்போடு Aura Light flash ஒன்றும் இணைந்துள்ளது.  இதனால் குறைந்த வெளிச்சத்தில் கூட சிறந்த போர்ட்ரேட் புகைப்படங்களை எடுக்க முடியும். இந்த மொபைலின் முன்பக்கத்தில் 50MP செஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும், சிறந்த செல்ஃபி புகைப்படங்களை எடுக்கவும் துணைபுரிகிறது.

The post 50MP செல்ஃபி கேமராவோடு அறிமுகமானது விவோ வி27 சீரிஸ்! first appeared on .

]]>
மொபைல் வேர்ல்டு காங்கிரஸின் இந்த வார நிகழ்வில் 12 புதிய போன்கள் வெளியாகின்றன! https://www.91mobiles.com/tamil/12-new-phones-launching-in-global-markets-and-india-this-week-check-upcoming-smartphones-list/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=12-new-phones-launching-in-global-markets-and-india-this-week-check-upcoming-smartphones-list Sun, 26 Feb 2023 13:11:04 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6086 பார்ஸிலோனா நாட்டில் நாளை (27-02-2023) முதல் மார்ச் 2 வரை மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (Mobile World Congress 2023) என்னும் நிகழ்வு நடக்க இருக்கிறது. இந் நிகழ்வில் மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய மொபைல்களையும். வருங்காலத்தில் தாங்கள் கொண்டு வர இருக்கும் தொழில்நுட்பங்களையும் பார்வைக்கு வைப்பார்கள். அப்படி பல நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்த் இருக்கின்றன. அவைகளில் சில போன்கள் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டதால் அவைகளின் மாடல் பெயர்கள் மற்றும் […]

The post மொபைல் வேர்ல்டு காங்கிரஸின் இந்த வார நிகழ்வில் 12 புதிய போன்கள் வெளியாகின்றன! first appeared on .

]]>

Highlights

  • ஒன்றல்ல, இரண்டல்ல.. மார்ச் 1-க்குள் மொத்தம் 12 புதிய போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
  • ஷாவ்மி நிறுவனம், இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கும் உலகலாவிய நிகழ்வில், அதன் ஷாவ்மி 13 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

பார்ஸிலோனா நாட்டில் நாளை (27-02-2023) முதல் மார்ச் 2 வரை மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (Mobile World Congress 2023) என்னும் நிகழ்வு நடக்க இருக்கிறது. இந் நிகழ்வில் மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய மொபைல்களையும். வருங்காலத்தில் தாங்கள் கொண்டு வர இருக்கும் தொழில்நுட்பங்களையும் பார்வைக்கு வைப்பார்கள். அப்படி பல நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்த் இருக்கின்றன. அவைகளில் சில போன்கள் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டதால் அவைகளின் மாடல் பெயர்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் ஏற்கனவே உள்ளன!

Xiaomi 13, Xiaomi 13 Pro மற்றும் Xiaomi 13 Lite

ஷாவ்மி நிறுவனம், இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கும் உலகலாவிய நிகழ்வில், அதன் ஷாவ்மி 13 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் கீழ் ஷாவ்மி 13, ஷாவ்மி 13 ப்ரோ மற்றும் ஷாவ்மி 13 லைட் என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகும்.

 

ஷாவ்மி 13 சீரிஸ்

ஷாவ்மி 13 சீரிஸில் லைக்காவால் ட்யூன் செய்யப்பட்ட கேமராக்கள் இடம்பெறலாம். மேலும் இதில் ஒன்பிளஸ் 11, ஐக்யூ 11 போன்ற போன்களில் உள்ள லேட்டஸ்ட் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் இடம்பெறலாம். இதுதவிர 12ஜிபி வரை ரேம் மற்றும் 256 இன்டர்னல் ஸ்டோரேஜ் ஒதுக்கப்படலாம். திடீர் விலைக்குறைப்பு!

Realme GT 3

ரியல்மியின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக ரியல்மி ஜிடி 3 வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ஏற்கனவே சீனாவில் அறிமுகமான ரியல்மி ஜிடி நியோ 5 (Realme GT Neo 5) என்கிற ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷனாகும். இது 150W மற்றும் 240W என்கிற 2 சார்ஜிங் ஸ்பீட் வகைகளில் கிடைக்கும். மேலும் 6.74 அங்குல 10-பிட் 144ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட், 50எம்பி சோனி IMX890 மெயின் கேமரா, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் போன்ற முக்கிய அம்சங்களையும் கொண்டு இருக்கும்.

 

Honor Magic 5 Series & Honor Magic Vs ஃபோல்டபிள் போன்

ஹானர் நிறுவனம் வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 6 மணிக்கு உலகளாவிய நிகழ்வொன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்நிகழ்வில் 4 ஸ்மார்ட்போன்களை உள்ளடக்கிய ஹானர் மேஜிக் 5 சீரிஸ் மற்றும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஹானர் மேஜிக் விஎஸ்-ஐ அறிமுகம் செய்ய இருக்கிறது. ஹானர் மேஜிக் 5 சீரீஸின் கீழ் ஹானர் மேஜிக் 5, ஹானர் மேஜிக் 5 ப்ரோ, ஹானர் மேஜிக் 5 அல்டிமேட் மற்றும் ஹானர் மேஜிக் 5 லைட் என மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம். அவைகளில் முதல் 3 போன்களில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்டும், கடைசி மாடலில் எஸ்டி 695 ப்ராசஸரும் இடம்பெறலாம்.

Vivo V27 சீரிஸ்

Vivo V27, Vivo V27 Pro மற்றும் Vivo V27e விவோவின் புதிய வி27 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் வருகிற மார்ச் 1 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் கீழ் விவோ வி27, விவோ வி27 ப்ரோ மற்றும் விவோ வி27இ என மொத்தம் 3 மாடல்கள் வெளியாகும். இந்த மூன்றுமே சீனாவில் விற்கப்படும் விவோ எஸ்16 சீரீஸின் ரீபிராண்டட் வெர்ஷன்களாகும்.

 

The post மொபைல் வேர்ல்டு காங்கிரஸின் இந்த வார நிகழ்வில் 12 புதிய போன்கள் வெளியாகின்றன! first appeared on .

]]>
விவோ வி27, விவோ வி27 ப்ரோ மற்றும் விவோ வி27இ என 3 கேமரா செண்ட்ரிக் போன்களை வெளியிடும் விவோ! https://www.91mobiles.com/tamil/3-new-camera-centric-phones-launching-in-india-on-march-1/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=3-new-camera-centric-phones-launching-in-india-on-march-1 Thu, 23 Feb 2023 05:58:52 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6023 மொபைல் கேமராவில் புதுமையான அம்சங்களை சேர்ப்பதற்கு பெயர்போன விவோ (Vivo) நிறுவனம் வருகிற மார்ச் 1 ஆம் தேதியன்று, தனது லேட்டஸ்ட் கேமரா ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அவைகளில் கேமராக்களை தவிர்த்து வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? என்ன விலைக்கு வரும்? பார்க்கலாம். விவோ, அதன் வி27 சீரீஸின் கீழ் 3 புதிய மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது. அவை விவோ வி27 (Vivo V27), விவோ வி27 ப்ரோ (Vivo V27 Pro) மற்றும் விவோ […]

The post விவோ வி27, விவோ வி27 ப்ரோ மற்றும் விவோ வி27இ என 3 கேமரா செண்ட்ரிக் போன்களை வெளியிடும் விவோ! first appeared on .

]]>

Highlights

  • விவோ (Vivo) நிறுவனம் வருகிற மார்ச் 1 ஆம் தேதியன்று, தனது புதிய கேமரா ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • அவை விவோ வி27 (Vivo V27), விவோ வி27 ப்ரோ (Vivo V27 Pro) மற்றும் விவோ வி27இ (Vivo V27e) என்ற பெயர்களில் வெளியாக இருக்கிறது.

மொபைல் கேமராவில் புதுமையான அம்சங்களை சேர்ப்பதற்கு பெயர்போன விவோ (Vivo) நிறுவனம் வருகிற மார்ச் 1 ஆம் தேதியன்று, தனது லேட்டஸ்ட் கேமரா ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அவைகளில் கேமராக்களை தவிர்த்து வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? என்ன விலைக்கு வரும்? பார்க்கலாம்.

விவோ, அதன் வி27 சீரீஸின் கீழ் 3 புதிய மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது. அவை விவோ வி27 (Vivo V27), விவோ வி27 ப்ரோ (Vivo V27 Pro) மற்றும் விவோ வி27இ (Vivo V27e) என்ற பெயரில் வெளியாகின்றன. விவோ நிறுவனம் அதன் வி27இ ஸ்மார்ட்போனிற்காக ஒரு பிரத்யேக மைக்ரோசைட்டையும் உருவாக்கியுள்ளது, அதன் வழியாக விவோ வி27இ-யின் வடிவமைப்பு விவரங்கள் மற்றும் சில முக்கிய அம்சங்களை அறிந்துகொள்ள முடிகிறது!

 

டிஸ்ப்ளே

விவோவின் டீஸர் பக்கத்தின் மூலம் விவோ வி27 ப்ரோவானது 3டி கர்வ்டு டிஸ்பிளேவுடன் வரும் எனத் தெரிகிறது. ஆனால் வி27இ மாடலானது செல்ஃபி கேமராவிற்கான சென்டர் பஞ்ச் ஹோல் டிசைனுடன் பிளாட் ஸ்கிரீனை கொண்டு இருக்கும். இருப்பினும் வி27இ மாடலானது வி27 ப்ரோ மாடலில் உள்ள கேமரா மாட்யூல் மற்றும் ரிங் எல்இடி ஃபிளாஷை கொண்டுள்ளது.

கேமரா

விவோ வி27 ப்ரோவில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் மெயின் கேமராவாக 64எம்பி அல்ட்ரா சென்சிங் கேமரா செயல்படும் மற்றும் அது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனிற்கான(OIS) ஆதரவையும் கொண்டிருக்கும். ஓஐஎஸ் என்பது குறைந்த தெளிவான படங்களை, வீடியோக்களை எடுக்க உதவும் ஒரு கேமரா அம்சமாகும்.

 

எதிர்பார்ப்பு

விவோ வி27 மற்றும் விவோ வி27 ப்ரோ ஆகிய இரண்டுலுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10+ மற்றும் ஃபுல்எச்டி+ ரெசல்யூஷனை வழங்கும் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த ஃபன்டச் ஓஎஸ் (அவுட் ஆஃப் பாக்ஸ்) உடன் வரலாம்.

சிப்செட்

ப்ராசஸரை பொறுத்தவரை, விவோ வி27-ல் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 எஸ்ஓசி மூலம் இயக்கப்படலாம்; ப்ரோ வேரியண்ட்டில் டைமன்சிட்டி 8200 சிப்செட்டுடன் அனுப்பப்படலாம். கடைசியாக விவோ வி27இ மாடலை பொறுத்தவரை, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5 அங்குல இ4 அமோஎல்இடி டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

 

விலை

விவோ வி27 – ரூ.35,000

விவோ வி27 ப்ரோ – ரூ.40,000

விவோ வி27இ – ரூ.25,999.

இவை எதிர்பார்க்கப்படும் விலைகளே ஆகும். சரியான விலை விவரங்கள் மார்ச் 1 ஆம் தேதியன்று தெரியவரும்.

 

The post விவோ வி27, விவோ வி27 ப்ரோ மற்றும் விவோ வி27இ என 3 கேமரா செண்ட்ரிக் போன்களை வெளியிடும் விவோ! first appeared on .

]]>