zenfone9 https://www.91mobiles.com/tamil Mon, 01 Aug 2022 05:32:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 அசத்தும் ஆசஸ் ஜென்போன் 9 https://www.91mobiles.com/tamil/new-asus-zenfone-9-launched-check-price-specifications-sale-details/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=new-asus-zenfone-9-launched-check-price-specifications-sale-details Mon, 01 Aug 2022 04:38:32 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1221 ஆசஸ் ஜென்போன் 9 மொபைலின் சிறப்பம்பசங்கள் ஆசஸ் ஜென்போன் 9 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த போனை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங், வீடியோ எடிட்டிங் போன்றவைகளுக்கு இந்த சிப்செட் மிக நன்றாக ஈடுகொடுக்கும் என்றே கூறலாம். அதேபோல் இந்த போனை கேமிங் பயனர்கள் நம்பி வாங்கலாம். இது Adreno 730 GPU ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் […]

The post அசத்தும் ஆசஸ் ஜென்போன் 9 first appeared on .

]]>

ஆசஸ் ஜென்போன் 9 மொபைலின் சிறப்பம்பசங்கள்

ஆசஸ் ஜென்போன் 9 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த போனை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங், வீடியோ எடிட்டிங் போன்றவைகளுக்கு இந்த சிப்செட் மிக நன்றாக ஈடுகொடுக்கும் என்றே கூறலாம். அதேபோல் இந்த போனை கேமிங் பயனர்கள் நம்பி வாங்கலாம். இது Adreno 730 GPU ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஆசஸ் ஜென்போன் 9 போனின் விலை EUR 799 (இந்திய மதிப்பில் ரூ.64,800-ஆக உள்ளது). அதேபோல் மிட்நைட் பிளாக், மூன்லைட் ஒயிட், சன்செட் ரெட் மற்றும் ஸ்டார்ரி ப்ளூ நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிறந்த பாதுகாப்பு அம்சம் கொண்ட டிஸ்பிளே

புதிய ஆசஸ் ஜென்போன் 9 போன் ஆனது 5.9- அங்குல Full HD Plus டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. சிறிய டிஸ்பிளே என்பதால் கையில் பிடித்து பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 1,080×2,400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ரேஷியோ, 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ் போன்ற ஆதரவுகளையும் கொண்டுள்ளது இந்த புதிய போன். இதுதவிர டிஸ்பிளேவுக்கு சிறந்த பாதுகாப்பு கொடுக்கும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ஆதரவும் இதில் உள்ளது.

தரமான கேமரா வசதி

ஆசஸ் ஜென்போன் 9 போன் ஆனது 50எம்பி Sony IMX766 பிரைமரி சென்சார் + 12எம்பி Sony IMX363 அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ரியர் கேமரா six-axis gimbal stabiliser ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே நீங்கள் நினைத்த புகைப்படங்களை அப்படியே எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி Sony IMX663 கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஆசஸ் போன். இதுதவிர ஸ்லோமோஷன், லைட் டிரெயில், பனோரமா, நைட் ஃபோட்டோகிராபி மற்றும் டைம் லேப்ஸ் போட்டோகிராபி போன்ற சிறப்பான அம்சங்களை வழங்குகிறது இந்த புதிய ஆசஸ் ஜென்போன் 9 போன்.

16ஜிபி ரேம்

புதிய ஆசஸ் ஜென்போன் 9 போன் ஆனது 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. இத்துடன் IP68-சான்றளிக்கப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது. அதாவது தூசி மற்றும் நீர் எதிர்ப்புத் திறன் கொண்டது இந்த ஆசஸ் ஜென்போன் 9 மாடல்.

அருமையான பேட்டரி

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ஆசஸ் ஜென்போன் 9 போன் ஆனது 4300mAh பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. இதை சார்ஜ் செய்ய 30W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. இதன்மூலம் இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 18.5 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக் நேரத்தையும் 8 மணிநேரம் வரை கேமிங் நேரத்தையும் பெற முடியும் என மோட்டரோலா கூறுகிறது.

டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

டூயல் மைக்ரோபோன், OZO Audio Noise Reduction தொழில்நுட்பம், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த அசத்தலான ஆசஸ் ஜென்போன் 9 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சூப்பர் கனெக்டிவிட்டி

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6/6எஸ்இ, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், NavIC, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது ஆசஸ் ஜென்போன் 9 ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் எடை 169 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த புதிய ஆசஸ் ஜென்போன் 9 ஸ்மார்ட்போன் முதலில் தைவானில் விற்பனைக்கு வரும். அதன்பின்பு மற்ற நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அசத்தும் ஆசஸ் ஜென்போன் 9 first appeared on .

]]>
வெளியானது Asus Zenfone 9 விலை விபரம் https://www.91mobiles.com/tamil/asus-zenfone-9-launch-date-and-expected-price/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=asus-zenfone-9-launch-date-and-expected-price Tue, 26 Jul 2022 12:06:55 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1082 Asus நிறுவனம் அதன் புதிய ஃபிளாக்‌ஷிப் போனை வருகிற ஜுலை 28-ந் தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன்படி ஏற்கனவே அசுஸ் சென்போன் 9 என பெயரிடப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் இந்தியாவில் அசுஸ் 9z என்ற பெயரில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் (refresh rate) கூடிய 5.9 அங்குல Full HD திரையைக் கொண்டுள்ளது. இதில் சைடு மவுண்டட் கைரேகை […]

The post வெளியானது Asus Zenfone 9 விலை விபரம் first appeared on .

]]>

Asus நிறுவனம் அதன் புதிய ஃபிளாக்‌ஷிப் போனை வருகிற ஜுலை 28-ந் தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன்படி ஏற்கனவே அசுஸ் சென்போன் 9 என பெயரிடப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் இந்தியாவில் அசுஸ் 9z என்ற பெயரில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் (refresh rate) கூடிய 5.9 அங்குல Full HD திரையைக் கொண்டுள்ளது. இதில் சைடு மவுண்டட் கைரேகை சென்சாரும் இடம்பெற்று உள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட்-அப் உடன் வருகிறது. 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா இதில் உள்ளது.

புராசஸரை பொருத்தவரை Snapdragon 8+ Gen 1 புராசஸர் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி 4,300mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் ஆகியவை இதில் இடம்பெற்று உள்ளன. அசுஸ் ரோக் போன் 6 மாடலை விட அசுஸ் சென்போன் 9 ஸ்மார்ட்போனின் விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட இதன் பேஸ் மாடலின் விலை ரூ.60 ஆயிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post வெளியானது Asus Zenfone 9 விலை விபரம் first appeared on .

]]>
வெளியாகிறது Asus zenfone 9 ஸ்மார்ட்போன் https://www.91mobiles.com/tamil/asus-zenfone-9-to-launch-on-28-july/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=asus-zenfone-9-to-launch-on-28-july Thu, 14 Jul 2022 10:37:40 +0000 https://www.91mobiles.com/tamil/?p=887 ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 புராசஸரில் வெளியாகி இருக்கும் Asus zenfone 9, அசுஸ் ரோக் போன் 6 மாடலை விட விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. அசுஸ் நிறுவனம் அதன் புதிய ஃபிளாக்‌ஷிப் போனை அறிமுகப்படுத்த இருக்கிறது. அசுஸ் சென்போன் 9 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜுலை 28-ந் தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த போன் இந்தியாவில் அசுஸ் 9z என்ற பெயரில் அறிமுகமாக […]

The post வெளியாகிறது Asus zenfone 9 ஸ்மார்ட்போன் first appeared on .

]]>

ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 புராசஸரில் வெளியாகி இருக்கும் Asus zenfone 9, அசுஸ் ரோக் போன் 6 மாடலை விட விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. அசுஸ் நிறுவனம் அதன் புதிய ஃபிளாக்‌ஷிப் போனை அறிமுகப்படுத்த இருக்கிறது. அசுஸ் சென்போன் 9 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜுலை 28-ந் தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த போன் இந்தியாவில் அசுஸ் 9z என்ற பெயரில் அறிமுகமாக இருக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் (refresh rate) கூடிய 5.9 அங்குல FullHD திரையைக் கொண்டுள்ளது. இதில் சைடு மவுண்டட் கைரேகை சென்சார் இடம்பெற்று இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட் அப் உடன் வருகிறது. 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா உள்ளது.

புராசஸரை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 புராசஸர் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி 4,300 எம்.ஏ.ஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் ஆகியவை இதில் இடம்பெற்று உள்ளன.

சமீபத்தில் வெளியிடப்பட்ட அசுஸ் ரோக் போன் 6 மாடலை விட அசுஸ் சென்போன் 9 ஸ்மார்ட்போனின் விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. 8 GB RAM + 128 GB சேமிப்புத்திறன் கொண்ட மாடலின் விலை ரூ.60 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

The post வெளியாகிறது Asus zenfone 9 ஸ்மார்ட்போன் first appeared on .

]]>