Home News 80s நடிகர்- நடிகைகளின் சந்திப்பு நிகழ்வு

80s நடிகர்- நடிகைகளின் சந்திப்பு நிகழ்வு

1980களில் திரையுலகில் தடம் பதித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து தங்கள் நட்பை கொண்டாடி வருகின்றனர். ’80ஸ் ரீயூனியன்’ என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வின் 10-வது ஆண்டு கொண்டாட்டத்தை 2019-ல் சிரஞ்சீவி தனது ஹைதராபாத் இல்லத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார். அனைவரின் நெஞ்சங்களிலும் நீங்காத நினைவாக அந்த நிகழ்ச்சி இடம்பெற்றது. அடுத்த வருட நிகழ்ச்சிக்கு அனைவரும் காத்திருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் ’80ஸ் ரீயூனியன்’ நடைபெறவில்லை.

இந்நிலையில், மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு மும்பையில் அனைவரும் சந்தித்தனர். 80ஸ் ரீயூனியன் 80ஸ் ரீயூனியன் இதில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நான்கு தென் மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்களுக்கு விருந்தளித்து உபசரித்தனர். பாலிவுட்டை சேர்ந்த தங்கள் நண்பர்கள் சிலரையும் சனிக்கிழமை (நவம்பர் 12) மாலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் சில குறிப்பிட்ட வண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு பெண்களுக்கு வெள்ளி மற்றும் ஆரஞ்சு நிறங்களும் ஆண்களுக்கு சாம்பல் மற்றும் ஆரஞ்சு நிறங்களும் அறிவிக்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் மேற்கண்ட வண்ணங்களில் அரங்கை தயார் செய்து தங்கள் விருந்தினர்களை வரவேற்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மகாராஷ்டிர மற்றும் உள்ளூர் உணவுகளுக்கு இந்நிகழ்ச்சியில் முக்கிய இடம் இருந்தது.

80ஸ் ரீயூனியன் 80ஸ் ரீயூனியன் விடியற்காலை வரை நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்னிந்திய நடிகர்கள் இணைந்து கலைப்படைப்பு ஒன்றிலும் பங்கேற்றனர். விளையாட்டு மற்றும் வினாடி வினா உள்ளிட்டவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நட்பு, தோழமை, வேடிக்கை நிறைந்த மாலைப் பொழுதாக இந்த ரீயூனியன் அமைந்திருந்தது. இந்நிகழ்ச்சியில் ராஜ்குமார், சரத்குமார், சிரஞ்சீவி, பாக்யராஜ், வெங்கடேஷ், அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், அனில் கபூர், சன்னி தியோல், சஞ்சய் தத், நரேஷ், பானுச்சந்தர், சுஹாசினி, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், லிஸ்ஸி, பூர்ணிமா, ராதா, அம்பிகா, சரிதா, சுமலதா, ஷோபனா, ரேவதி, மேனகா, பூனம் தில்லான், நதியா, பத்மினி கே, வித்யா பாலன், டினா அம்பானி, மீனாட்சி சேஷாத்திரி, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டனர். இதில் நடிகர் மாதவன் கலந்து கொண்டு அனைவரையும் வாழ்த்தினார்.

ஷார்ஜாவில் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு சினிமா மற்றும் கலச்சார துறையில் சாதித்ததற்காக உலகளாவிய ஐகான் விருது வழங்கப்பட்டது.

காட்சி ஊடகத்தின் வழியே எழுத்து, படைப்பாற்றல் துறையில் சாதித்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்றுக் கொண்ட ஷாருக்கான் பேசிய தாவது, கதைகள், சொற்கள் அவை சேர்ந்ததுதான் சினிமா. நாங்கள் காட்சிகள் மூலமாகவும், நடனத்தின் மூலமாகவும் மனிதநேயத்தை வளர்க்க நினைக்கிறோம். புத்தகங்கள் நம் வாழ்க்கையின் அங்கங்கள். நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எந்த நிறத்தில் இருந்தாலும், எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அன்பு, அமைதி, கருணை இதில் தான் நாம் சிறந்து விளங்குகிறோம் என்று பேசினார்.

சமீபகாலமாக ஷாருக்கானுக்கு மத்திய கிழக்கு, அமெரிக்கா நாடுகளில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்று பிரபல நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.