டாடாவின் புதிய குறைந்த விலை எலக்ட்ரிக் கார்

டாடா நிறுவனம் தனது ஆரம்ப நிலை காரான டியோகா காரில் புதிய எலெக்ட்ரின் வேரியன்ட் ஒன்றை அறிமுகம் செய்ய இருக்கிறது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனம் தான் டாடா. வாடிக்கையாளர்கள் தேவை மற்றும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு வாகனங்களைத் தயாரித்து வருகிறது டாடா நிறுவனம். இந்தியாவில் நம்பர் ஒன் கார் நிறுவனமாகவும் செயல்பட்டு வரும் நிலையில் அவ்வபோது புதிய கார்களை அறிமுகம் செய்து வருகிறது.

எலெக்ட்ரிக் கார்களின் மோகம் மக்களிடம் அதிகரித்து வரக்கூடிய நிலையில் அதற்கேற்றார் போல் டாடா நிறுவனம், நெக்சோன் மற்றும் டிகோர் கார்களில் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது டாடா நிறுவனம், என்ட்ரி லெவல் காரான டியோகா காரில் புதிய எலெக்ட்ரின் வேரியன்ட் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. முன்னதாக Tata Tiago EV கான்செப்ட் முதன்முதலில் 2018 ஆட்டோ எக்ஸ்போவின் போது காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் டாடா குறைந்த விலையில் Tata tiago EV காரை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இது குறித்து டாடா நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், டாடா மோட்டார்ஸின் நிலையான Tiago EV இன் புதிய வெளியீட்டின் மூலம் எங்கள் EV போர்ட்ஃபோலியோவை மேலும் விரிவுபடுத்த இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். மேலும் இப்போது சந்தையில் எலக்ட்ரிக் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், தற்போது அறிமுகம் செய்யவுள்ள கார், விரிவாக்கத்தின் அடுத்த கட்டத்திற்கு முன்னோடியாக இருக்கிறோம் என பெருமையுடன் தெரிவித்துள்ளார். இதுவரை இதற்கான விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. இருந்தப்போதும் விலை குறைவாக இருக்கும் என்பதால் இந்த டாடா Tiago EV இந்தியாவில் மின்சார வாகன சந்தையில் கேம் சேஞ்சராக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் இது குறித்து Tata Motors Passenger Vehicles Ltd. மற்றும் Tata Passenger Electric Mobility Ltd ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் ஷைலேஷ் சந்திரா கூறுகையில், 88% பங்கைக் கொண்டு, இந்தியாவில் EV சந்தையை வழிநடத்துவதில் பெருமிதம் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

டாடா Tiago EV காரின் எதிர்ப்பார்க்கப்படும் அம்சங்கள்:

Tata tiago Ev காரில், ஏற்கனவே டிகோர் எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்படும் அதே ziptron technology பயன்படுத்த இருப்பதாகத் தெரிய வருகிறது. இந்த ziptron டெக்னாலஜி அதன் xpes T technologyயை விட மேம்பட்ட டெக்னாலஜியாகும்.

இக்காரில் வெளிப்புறம் மற்றும் உட்புறம் ப்ளு அக்ஸெண்ட் உள்ளதால், signature teal blue மற்றும் Daytona gray ஆகிய இரண்டு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. கியர் லிவர்க்கு பதிலாக ரோட்டரி நாப் மாற்றப்பட இருப்பதாகவும் டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இன்டீரியர் வசதிகள் பேட்டர் அனைத்தும் மற்ற டாடா நிறுவன கார்களைப் போன்று ஒரே மாதிரி இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் என்னென்ன அம்சங்கள் இடம் பெற்றுள்ளது என்பது குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்.