- இந்தியாவில் இன்று டெக்னோ பிராண்டின் புதிய Camon 19 Pro Mondrian Edition ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆனது.
- இது இந்தியாவின் முதல் நிறம் மாறும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் எனும் பெருமையை பெற்று இருக்கிறது.
டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் கேமன் 19 ப்ரோ மாண்ட்ரியன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. இது ஒரு லிமிட்டெட் எடிஷன் போன் ஆகும். இது நிறம் மாறும் தன்மை கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். நிறம் மாறும் தன்மையை செயல்படுத்த இதில் பாலிக்ரோமேடிக் போடோஐசோமர் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த மொபைல் 120Hz Refresh rate உடன் கூடிய 6.9 அங்குல Full HD+ LCD டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இதில் MediaTek Helio G96 ப்ராஸசர் உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது. LPDDR4X வகையைச் சேர்ந்த 8GB RAM, UFS2.2 வகை 128GB Storage இதில் இருக்கிறது. இதோடு 5GB வரையிலான Virtual RAM வசதியும் இருக்கிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 12ன் மேல் XOS பதிந்த இயங்குதளத்தில் இயங்குகிறது.
கேமரா
Tecnoவின் இந்த மொபைலில் RGBW sensor மற்றும் OIS ஆதரவோடு கூடிய 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 50 மெகா பிக்சல் போர்ட்ரேட் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் என மூன்று கேமராக்களைக் கொண்டு இருக்கிறது. இதோடு ஒரு Quad-LED ப்ளாஷ் லைட்டும் இருக்கிறது. இதுதவிர, முன்பக்கத்தில் 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவும் இருக்கிறது,
பேட்டரி
இந்த Camon 19 Pro Mondrian Edition மொபைலில் 5000 mAh பேட்டரி 33W fast charging support உடன் வருகிறது. இதில் டைப்-சி போர்ட் இருக்கிறது. கூடவே இதன ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரானது மொபைலின் பக்கவாட்டில் பவர் பட்டனில் வைக்கப்பட்டு இருக்கிறது.
கனெக்டிவிட்டி
4ஜி மொபைலான இந்த இந்த Camon 19 Pro Mondrian Edition மொபைல் இரட்டை சிம் வசதியோடு வருகிறது. இது தவிர 3.5mm audio jack, Wifi 802.11ac, ப்ளூடூத் 5.1, NFC, GPS, Glonass போன்ற அம்சங்களும் இடம் பெற்று இருக்கின்றன.
விலை
இந்த Camon 19 Pro Mondrian Edition மொபைலின் 8GB + 128GB வேரியண்டின் விலை ரூ 17,999 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது அமேசான் தளத்தில் செப்டம்பர் 22ம் தேதி முதல் விறபனைக்குக் கிடைக்கும்.






