என்ன!!! டெக்னோ, ரோலிங் டிஸ்ப்ளே போனைத் தயாரிக்குதா?

Highlights

  • ஒரு புது வகையான போல்டப்பில் ஸ்மார்ட்போனை டெக்னோ (Tecno) நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
  • இது டெக்னோ பாண்டம் விஷன் வி (Tecno Phantom Vision V) என்ற பெயரில் தயாராக இருக்கிறது.

டெக்னோ பாண்டம் விஷன் வி

இந்தியா மற்றும் பிற உலக நாடுகளில் இப்போது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கான (Foldable smartphone) வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஆப்பிள் (Apple), கூகுள் (Google), சியோமி (Xiaomi), ஒன்பிளஸ் (Oneplus), ஒப்போ (Oppo), விவோ (Vivo), சாம்சங் (Samsung) போன்ற முன்னணி நிறுவனங்கள் அனைத்தும், அதன் வரிசையில் புது போல்டபில் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்த நிறுவனங்கள் எல்லாம் சாதாரண போல்டபில் போன்களை (foldable phones) உருவாக்க முயன்று வரும் நிலையில், யாரும் எதிர்பார்த்திடாத வகையில் ஒரு புது வகையான போல்டப்பில் ஸ்மார்ட்போனை டெக்னோ (Tecno) நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. டெக்னோ பாண்டம் விஷன் வி (Tecno Phantom Vision V) என்பது மடிக்கக்கூடிய டிஸ்பிளேயுடன் வரக் கூடிய டெக்னோ போல்டபில் கான்செப்ட் ஃபோனின் பெயர் ஆகும்.

 

வடிவமைப்பு

இப்போது உலக சந்தையில் கிடைக்கும் மற்ற அனைத்து மடிக்கக்கூடிய மொபைல் போன் களிலிருந்தும் (foldable mobile phone) இது முற்றிலும் வேறுபட்டது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், இது ரோலிங் (Rolling dispaly smartphone) மற்றும் ஸ்லைடிங் (Sliding display smartphone) செய்ய கூடிய டிஸ்பிளேவை கொண்டிருக்கின்றன. YouTube மூலம் பகிரப்பட்ட Tecno Phantom Vision V இன் வீடியோவில் இந்த மொபைலைப் பற்றிய தகவல்கள் தெளிவாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த போன் போல்டபில் நிலையில் இருந்து பெரிய டிஸ்பிளேவிற்கு மாறுவதை வீடியோ காட்டுகிறது.

வெளிப்புற டிஸ்ப்ளே மெலிதான பெசல்கள் மற்றும் வளைந்த விளிம்புடன் இருப்பதும் இதில் தெரிகிறது. Phantom Vision V இன் பின்புறம் குவாட்-எல்இடி ஃபிளாஷ் கொண்ட டிரிபிள் கேமரா யூனிட் உடன் வருகிறது. பின்புற ஷெல்லில் அமர்ந்திருக்கும் கேமரா தொகுதி, Phantom X2 தொடரால் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த போல்டபில் போனின் கேமரா அமைப்பின் கீழ், ஒரு சிறிய டிஸ்பிளே இருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது. இது நோட்டிபிகேஷன், கடிகாரம், ரீமைண்டர் போன்ற ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளேவாக செயல்படும் போல் தெரிகிறது. இந்த மொபைல் டைட்டானியம் அலாய் உறையுடன் வருகிறது.

ரோலிங் டிஸ்ப்ளே

இந்த டிவைஸை நாம் மடிந்தால், வழக்கமான, பாக்கெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்ஃபோன் போல் தோன்றும். 11 செயல்பாட்டு அடுக்குகளால் உருவாக்கப்பட்ட இன்-டிஸ்பிளே, ஏறக்குறைய ஒரு டேப்லெட் (Tablet) சாதனம் போல சுமார் 10.1 அங்குலம் வரை டிஸ்பிளே இடத்தை வழங்க கூடிய வகையில் இது விரிவடைகிறது. இப்போது வரை அறிமுகம் செய்யப்படும் போல்டபில் போன்கள் திறந்து மடக்கும் படி மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த டிவைஸ் அதன் டிஸ்பிளேவை ரோல் செய்து ஸ்லைட் செய்து விரிவடையும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் டிஸ்பிளே ஏரியா நமக்கு கிடைக்கிறது.

 

பிப்ரவரியில் அறிமுகமா?

டெக்னோ பிராண்டில் இருந்து அதிகாரப்பூர்வ வார்த்தை எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், கடந்த மாதம் புளூடூத் SIG இன் தரவுத்தளத்தில் மோனிகர் காணப்பட்டதால், Tecno Phantom V போல்டபில் போனை விரைவில் எதிர்பார்க்கலாம். பிப்ரவரி இறுதியில் நடைபெறும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) 2023 இல், பல ஸ்மார்ட்போன் பிராண்டுகள் புதிய தயாரிப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இந்த டிவைஸ் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இப்போதைக்கு இது ஒரு கான்செப்ட் டிவைஸ் மட்டுமே. இந்த மொபைல் வணிக ரீதியாகக் கிடைக்குமா என்பது விரைவில் தெரிய வரும்.