Home News ரூ.6799 விலையில் விற்பனைக்கு வந்தது Tecno Pop 7 Pro

ரூ.6799 விலையில் விற்பனைக்கு வந்தது Tecno Pop 7 Pro

Highlights
  • டெக்னோ (Tecno) நிறுவனம், டெக்னோ பாப் 7 ப்ரோ (Tecno POP 7 Pro) என்ற புதிய ஸ்மார்ட்போனின் விற்பனையை இந்தியாவில் இன்று துவங்கி இருக்கிறது.
  • இந்த போன் வெறும் 6000 ரூபாய் விலை பிரிவில், அட்டகாசமான அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

டெக்னோவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலான Tecno POP 7 Pro மாடலை நிறுவனம் ஏற்கனவே நைஜீரியா உட்பட சில நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவிற்குள் இந்த புதிய Tecno POP 7 Pro மொபைல் மிகவும் குறைந்த விலையில், ரூ.6000 முதல் 7500 விலைக்குள் கிடைக்கிறது. மலிவு விலையில் புது மொபைல் வாங்கத் துடிக்கும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த Tecno Pop 7 Pro ஸ்மார்ட்போனில் என்னென்ன ஸ்பெஷல் அம்சங்கள் இடம்பெறுகிறது, இது வாங்க சிறந்ததா? இல்லையா? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். டெக்னோ பாப் 7 ப்ரோ இன்று முதல் முறையாக நாட்டில் விற்பனைக்கு வருகிறது. இது ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் மாடலாகும். கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

Tecno Pop 7 Pro அம்சங்கள்

Tecno Pop 7 Pro விலை

டெக்னோ பாப் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 3ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் இன்று முதல் வாங்கக் கிடைக்கும். இந்த மொபைலின் அடிப்படை வேரியண்ட் மாடலான 2ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.6799 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், 3ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை ரூ.7299 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இன்று முதல் வாங்க கிடைக்கிறது. மிகவும் மலிவு விலையில், புது போன் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் அமேசான் வழியாக இந்த Tecno Pop 7 Pro ஸ்மார்ட்போனை வாங்கலாம்.