6000mAh பேட்டரி, 50MP கேமராவுடன் இந்தியாவுக்கு வருகிறதா போவா 4?

இந்தியாவில் Tecno நிறுவனத்திடம் இருந்து Tecno POVA 4 என்ற பெயரில் ஒரு மொபைல் அறிமுகம் செய்யப்படுவது  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Tecno POVA 4 மொபைலின் சரியான வெளியீட்டு தேதியை டெக்னோ பிராண்ட் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், ஈ-காமர்ஸ் தளமான அமேசான் ஸ்மார்ட்போனின் பிரத்தியேக மைக்ரோசைட் ‘விரைவில் வருகிறது (coming soon)’ என்ற குறிச்சொல்லுடன் வைத்துள்ளது. சமீபத்திய அறிக்கையின்படி, Tecno POVA 4 டிசம்பர் முதல் பாதியில் அறிமுகம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 6000mAh பேட்டரி, 50MP கேமராவுடன் வெளியாக இருக்கிறது.

Tecno POVA 4 இன் Amazon வலைத்தளத்தின் microsite மூலம் முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த மொபைல் கடந்த மாதம் பங்களாதேஷில் அறிமுகமானது. தற்போது வெளியாக இருக்கும் இந்திய பதிப்பும் அதே வசதிகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கேற்றபடி மைக்ரோ சைட்டில் குறிப்பிடுவது போல், POVA 4 ஆனது அதே அம்சங்களுடன் பஞ்ச்-ஹோல் கட்அவுட் டிஸ்பிளே மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது.

அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போன் பின்பக்கத்தில் மூன்று கேமரா மற்றும் எல்இடி ஃபிளாஷ் கொண்ட கிரேடியன்ட் பேக் பேனல் உடன் வருகிறது. வரவிருக்கும் ஸ்மார்ட்போன் 6nm செயல்முறையின் அடிப்படையில் இயங்கும் MediaTek Helio G99 சிப்செட் மூலம் இயக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் டூயல் கேம் இன்ஜின் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. கூடவே இந்த மொபைலில் 8 ஜிபி ரேம் மற்றும் 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

Tecno POVA 4 ஸ்மார்ட்போன் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மேலும் இந்த மொபைல் ஆனது 18W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000mAh பேட்டரியையும் கொண்டு இருக்கும்

நிறங்கள்

Tecno POVA 4 நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும் என்று Amazon microsite வெளிப்படுத்துகிறது. Tecno POVA 4 இன் மற்ற வசதி பற்றிய விவரங்கள் தற்போது தெரியவில்லை.

விலை

இந்தியாவில் வெளியாக இருக்கும் இந்த மொபைல் பங்களாதேஷைப் போலவே இருக்கும் என்பதால், இதன் விலை ரூ.15,000 முதல் ரூ.18,000 விலைக்குள் எதிர்பார்க்கப்படுகிறது.

இயங்குதளம்

இந்த சாதனம் HD+ தெளிவு மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.82 அங்குல டிஸ்ப்ளேவுடன் வெளி வரும். இந்த மொபைல் பின்புறத்தில் 50MP முதன்மை கேமரா இரண்டாம் நிலை லென்ஸ் மற்றும் 8MP செல்ஃபி ஸ்னாப்பருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இல் இயங்கும்.