பெரிய சைஸ் பேட்டரியை எதிர்பார்க்கும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால் இந்த Tecno Pova Neo 2 நிச்சயம் உங்களுக்கானது தான்.
புதிய Tecno Pova Neo 2 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் 7000mah பேட்டரி உடன் அறிமுகமாக இருக்கிறது.
சிறந்த ஸ்மார்ட்போன் அனுபவத்தைப் பெற வேண்டும் என்றால், அதற்கு திறன்மிக்க பேட்டரி தேவைப்படுகிறது. இதை இந்த புதிய Tecno Pova Neo 2 ஸ்மார்ட்போன் நிறைவேற்றுகிறது. Tecno விரைவில் இந்தியா உட்பட உலகளவில் புதிய Tecno Pova Neo 2 4G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இன்னும் நிறுவனம் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை உறுதிப்படுத்தவில்லை.
என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?
Tecno Pova Neo 2 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் இயங்கும் எனத் தெரிகிறது. இந்த Tecno Pova Neo 2 ஸ்மார்ட்போனின் இருக்கும் சில சிறப்பான அம்சங்களை சமீபத்தில் டிப்ஸ்டர் பராஸ் குக்லானி (@passionategeekz) என்பவர் வெளியிட்டு இருக்கிறார்.
லீக் தகவல்கள் என்ன சொல்கிறது?
இவர் வெளியிட்ட டிவிட்டர் தகவலின் படி, Tecno Pova Neo 2 ஸ்மார்ட்போன் சைபர் ப்ளூ மற்றும் யுரேனோலித் கிரே ஆகிய நிறங்களில் இந்தியாவில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் என இரண்டு தேர்வுகளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. இந்த Tecno Pova Neo 2 ஸ்மார்ட்போன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்புத்திறன்களோடு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஸ்பிளே மற்றும் கேமரா
Tecno Pova Neo 2 ஸ்மார்ட்போன் 6.82 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளேவைக் கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் வரலாம். இது 16 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் என இரட்டை பின்பக்க கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கலாம். எல்லாவற்றையும் விட இந்த போன் 7,000mAh பேட்டரியோடு வெளியாகிறது.
விலை என்ன?
Tecno Pova Neo 2 அறிமுகப்படுத்தப்படும் விலை மற்றும் வெளியீட்டு நேரம் பற்றி எதையும் குறிப்பிடவில்லை. இந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட டெக்னோ போவா நியோவின் வாரிசாக இந்த Tecno Pova Neo 2 வெளிவரும். இந்த Tecno Pova Neo ஸ்மார்ட்போன் ரூ.12,999 என்ற விலையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.






