7,000mAh பேட்டரியோடு அறிமுகமாகிறது Tecno Pova Neo 2

Tecno நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் Tecno Pova Neo 5G என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இப்போது, Pova சீரிஸ் வரிசையில் மற்றொரு புதிய ஸ்மார்ட்போன் மாடலைச் சேர்த்துள்ளது. இது டெக்னோ போவா நியோ 2 (Tecno Pova Neo 2) என்ற பெயரில் வெளிவர இருக்கிறது. Tecno Pova Neo 2 ஸ்மார்ட்போன் ரஷ்யாவில் அதன் உலகளாவிய அறிமுகத்தை அறிவித்துள்ளது. வெகு விரைவில் இது இந்தியாவிலும் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

சிறப்பம்சம்

Tecno Pova Neo 2 ஸ்மார்ட்போனின் முக்கியமான சிறப்பம்சம் என்றால், இது 7,000mAh பேட்டரியைக் கொண்டு இருக்கிறது. இது மீடியா டெக் ஹீலியோ G85 சிப்செட் உடன் வருகிறது. புதிய Tecno Pova Neo 2 போன் 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளேவுடன், டூயல் ரியர் கேமரா மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்குகிறது. இது 6ஜிபி வரை ரேம் உடன் வருகிறது. Tecno Pova Neo 2 போனின் விலை, மற்றும் முக்கியமான விபரங்களைப் பார்க்கலாம்.

விலை

Tecno Pova Neo 2 ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் மாடலாக வருகிறது. இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ. 17,000 ஆகும். அதேபோல், இந்த Tecno Pova Neo 2 சாதனத்தின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் மாடலிலும் வருகிறது. இதன் இந்திய மதிப்பு விலை தோராயமாக ரூ. 20,000 மட்டுமே. அக்டோபர் 3 ஆம் தேதி முதல் ரஷ்யாவில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. இந்திய அறிமுகம் அக்டோபரில் நடைபெறும்.

வசதிகள்

Tecno Pova Neo 2 ஸ்மார்ட்போன் 90Hz ரெப்ரெஷ் ரேட் உடன் கூடிய பஞ்ச் ஹோல் நாட்ச் உடன் இயங்கும் 6.82 அங்குல முழு HD+ டிஸ்பிளே பேனலைக் கொண்டுள்ளது. Tecno Pova Neo 2 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இது ஆக்டா-கோர் சிபியுவுடன் வருகிறது. சிப் ஆன் சிஸ்டம் அதனுடன் ஒருங்கிணைக்கப்பட்ட Mali G52 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் உடன் 128ஜிபி ஸ்டோரேஜ் வரை ஸ்டோரேஜை கொண்டுள்ளது.

பேட்டரி

இந்த புதிய போவா சீரிஸ் ஸ்மார்ட்போனில் 16MP பிரைமரி சென்சார், டெப்த் சென்சார் மற்றும் எல்இடி ஃபிளாஷ் போன்றவை இடம்பெறுகிறது. இது டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபிக்களுக்கு முன்பக்கத்தில் 8MP செல்ஃபி ஸ்னாப்பரைக் கொண்டுள்ளது. Tecno Pova Neo 2 மிகப் பெரிய 7000mAh பேட்டரியுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது Type-C போர்ட் வழியாக 18W பாஸ்ட் சார்ஜ் ஆதரவை ஆதரிக்கிறது.

டால்பி அட்மாஸ்

Tecno Pova Neo 2 பிளாக் (கருப்பு), கிரே (சாம்பல்) மற்றும் ப்ளூ (நீலம்)ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது. கூடவே டால்பி அட்மோஸுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கரையும் கொண்டு இருக்கிறது. ஸ்மார்ட்போனில் பிரத்தியேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையாகக் கொண்ட HiOS 8.6 உடன் இயங்குகிறது.

யாருக்கானது இந்த போன்?

பட்ஜெட் விலையில் பெரிய பேட்டரி உடன் நீண்ட நேர பயன்பாட்டை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ். காரணம், இது 7000mah பேட்டரி உடன் வருகிறது. இந்தியச் சந்தையில் தற்போது கிடைக்கும் 5000mah பேட்டரி ஸ்மார்ட்போனின் ஆயுளை விட இது கூடுதலாக இருப்பதனால், கட்டாயம் இந்திய ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இது மிகவும் பிடித்தமான ஸ்மார்ட்போன் மாடலாக மாறப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. அடிக்கடி சார்ஜ் செய்ய விரும்பாதவர்களுக்கு Tecno Pova Neo 2 ஒரு நல்ல சாய்ஸ்.