11 ஜிபி ரேம் உடன் பட்ஜெட் விலையில் ஒரு ஸ்மார்ட்போன்


ஸ்பார்க் 9 (spark 9) மாடல் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 18-ந் தேதி அறிமுகம் செய்யப்படும் என டெக்னோ (tecno) நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இது பட்ஜெட் விலை ஸ்மாட்போனாக அறிமுகமாகிறது.

இந்த மொபைலின் சிறப்பம்சமே அதன் ரேம் தான். இந்தியாவில் முதன்முறையாக 11 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனாக இது அறிமுகமாக இருக்கிறது. இதன் அம்சங்களை பொருத்தவரை 90Hz refresh rate உடன் கூடிய 6.6 அங்குல HD+ திரை, பெரிய செவ்வக வடிவிலான கேமரா மாட்யூல், இரண்டு சென்சார் மற்றும் LED Flash light போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி MediaTek Helio G37 Octocore புராசஸரும் இதில் இடம்பெற்று இருக்கிறது.

128GB சேமிப்புத்திறன் இருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்பினிட்டி பிளாக் (infinity black) மற்றும் ஸ்கை மிரர் (sky mirror) ஆகிய வண்ணங்களில் வெளியாகிறது. இதன் விலை ரூ.10,000க்கும் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது