Home News விற்பனையைத் துவங்கியது Tecno Spark 9T

விற்பனையைத் துவங்கியது Tecno Spark 9T


இந்தியாவில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல், அமேசான் வழியாக இந்த புதிய Tecno Spark 9T ஸ்மார்ட்போனின் விற்பனையைத் துவங்கி இருக்கிறது. டெக்னோ நிறுவனத்தின் இந்த புதிய Tecno Spark 9T ஸ்மார்ட்போன் மாடல் கடந்த மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மலிவு விலையில் தரமான அம்சங்களைக் கொண்டுள்ளதால் இந்த மொபைலின் மேல் ஒரு எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. உதாரணமாக, Tecno Spark 9T சாதனம் 6.6 அங்குல Full HD plus டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 7ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் உடன் இயங்குகிறது. இது 50 மெகாபிக்சல் கொண்ட AI டிரிபிள் ரியர் கேமராவுடன் வருகிறது. இதில் 5000mah பேட்டரியை நிறுவனம் வழங்கியுள்ளது.

சிறப்பம்சம்

Tecno Spark 9T ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6.6 அங்குல Full HD plus உடைய 1,080 x 2,408 பிக்சல்கள் கொண்ட டாட்-நாட்ச் டிஸ்பிளேவுடன் வெளியாகி இருக்கிறது. இது 90.1 சதவிகித பாடி-டு-டிஸ்பிளே (body to display) விகிதத்தைக் கொண்டுள்ளது. 401ppi பிரைட்னஸை வழங்குகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் மூலம் ஹைப்பர் இன்ஜின் (Hyper engine) தொழில்நுட்பத்துடன் இயங்குகிறது. இந்த Tecno Spark 9T ஸ்மார்ட்போன் ஆனது 4GB LPDDR4x RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது.

7ஜிபி ரேம்?

இந்த புதிய Tecno Spark 9T ஸ்மார்ட்போன் மெமரி ஃப்யூஷன் (Memory fusion) தொழில்நுட்பத்துடன் வருகிறது. இதன்மூலம் இது 3ஜிபி சேமிப்புத்திறனைக் கடனாகப் பெற்று அதை ரேமாகப் (RAM) பயன்படுத்துகிறது. இதன் மூலம் உங்களுக்கு 7ஜிபி ரேம் வரை கிடைக்கும். இந்த Tecno Spark 9T ஸ்மார்ட்போன் டூயல் சிம் (நானோ) உடன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையாகக் கொண்டு HiOS 7.6 இயங்குதளத்தில் இயக்குகிறது.

கேமரா

கேமராவைப் பொறுத்த வரை, Tecno Spark 9T டிவைஸ் f/1.6 உடன் PDAF அம்சம் இணைக்கப்பட்ட 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மூலம் இயங்கும் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. AI சென்சாருடன் 2 மெகாபிக்சல் சென்சார் இதில் வழங்கப்பட்டுள்ளது. குறைந்த வெளிச்சத்தில் சிறப்பான புகைப்படங்களை எடுக்க சூப்பர் நைட் மோடு (super night mode) உடன் இது வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் டூயல் ஃபிரண்ட் பிளாஷ் லைட்டைக் கொண்டுள்ளது.

வசதிகள்

டெக்னோ ஸ்பார்க் 9T மொபைலில் 64GB சேமிப்புத்திறன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை ஒரு மைக்ரோ SD கார்டு மூலம் 512GB வரை நீடிக்க முடியும். இதுதவிர, Wi-Fi, ப்ளூடூத் v5.0, GPS, GNSS, Galileo, Beidou மற்றும் QZSS போன்ற வசதிகளும் இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Tecno Spark 9T அட்லாண்டிக் ப்ளூ மற்றும் டர்க்கைஸ் சியான் நிறங்களில் வருகிறது.

விலை

Tecno Spark 9T இந்தியாவில் 4 GB RAM + 64GB சேமிப்புத்திறன் கொண்ட மாடல் வெறும் ரூ. 9,299 என்ற விலையில் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் வேறு எந்த ஸ்டோரேஜ் வேரியண்ட்களும் கிடையாது. இந்த விலை, அறிமுக கால சிறப்பு விற்பனை விலை மட்டுமே.

சலுகை விபரம்

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையின் ஒரு பகுதியாக SBI கிரெடிட் கார்டு பயனர்களுக்கு, 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இதேபோல், டெக்னோ ஸ்பார்க் 9டி வினாடி வினா போட்டியில் பங்கு பெரும் பயனர்களுக்கு ரூ. 500 அமேசான் பே பேலன்ஸ் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.