
டெக்னோ இந்த மாத தொடக்கத்தில் பல ஸ்பார்க் 10-சீரிஸ் போன்களை அறிவித்தது. ஆனால் ஸ்பார்க் 10 மற்றும் ஸ்பார்க் 10 சிக்கான விரிவான விவரக்குறிப்புகளை வெளியிடவில்லை. தற்போது Tecno நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த இரண்டு ஃபோன்களுக்கான விரிவான விவரக்குறிப்புகளுடன் கூடிய பட்டியல்களை வெளியிட்டு இருக்கிறது. இதன்மூலம் இந்த போன்கள் என்னென்ன வசதிகளோடு வருகின்றன என்பதைப் பார்க்கலாம்.
இரண்டு ஃபோன்களும் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.6 அங்குல HD+ IPS LCDகளை கொண்டு வெளி வருகின்றன. இரண்டிலும் உள்ள டிஸ்ப்ளே 8MP முன்பக்க செல்ஃபி கேமராவிற்கான வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் குறைந்த வெளிச்சத்தில் படம் எடுப்பதற்கான இரட்டை-எல்இடி ஃப்ளாஷ்களைக் கொண்டுள்ளது.
Tecno Spark 10 விவரக்குறிப்புகள்
கேமரா
Spark 10 மொபைலின் பின்பக்கத்தில் 50MP முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது. இதனோடு இன்னொரு கேமராவும் இருக்கிறது. இது எந்த வகையான கேமரா என்பதை நிறுவனம் தெரிவிக்கவில்லை. அதுபோல் Spark 10C மொபைலின் பின்பக்கத்தில் 16MP முதன்மை கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா மற்றும் ஃப்ளாஷ் அருகே இருக்கும் இன்னொரு கேமரா பற்றியும் விவரங்கள் இல்லை.
மெமரி
இரண்டு போன்களும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளமைக்கப்பட்ட சேமிப்பகத்துடன், பெயர் குறிப்பிடப்படாத ஆக்டா-கோர் சிப்செட்களால் இயக்கப்படுகின்றன. சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள Micro SD card slot ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் ரேம் அளவை ’மெமரி ஃப்யூஷன்’ முறையில் அதிகரித்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருப்பதாய்த் தெரிகிறது. இதன் மூலம் 8ஜிபி வரை ரேமை விர்சுவலாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சிப்செட்
Tecno Spark 10 ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான HiOS 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் Spark 10C பழைய HiOS 8.6 இயங்குதளத்தில் இயங்குகிறது.
Tecno Spark 10C விவரக்குறிப்புகள்
பேட்டரி
இந்த இரண்டு மொபைல்களிலும் 5000mAh பேட்டரி 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளியாக இருக்கிறது. இதற்கான சார்ஜர் மொபைலோடு வருமா, அல்லது நாம் தான் தனியாக வாங்க வேண்டுமா என்பது குறிப்பிடப்படவில்லை. இந்த இரண்டு மொபைல்களிலும் பாதுகாப்புக்கென சைடு மவுண்டட் ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார் வழங்கப்பட்டு இருக்கும். இது மொபைலின் வலது பக்கத்தில் வால்யூம் ராக்கருக்கு கீழே உள்ள பவர் பட்டனில் இருக்கிறது.
நிறம் & விலை
Tecno Spark 10 மெட்டா பிளாக், ப்ளூ மற்றும் ஒயிட் வண்ணங்களில் வருகிறது, Tecno Spark 10C மெட்டா பிளாக், ப்ளூ மற்றும் கிரீன் ஆகிய நிறங்களில் வெளியாக இருக்கிறது. விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் வழங்கப்படவில்லை.