![]()
விலை & நிறங்கள்
கூகுள் பிக்சல் 7a மொபைலானது கூகுளின் டென்சர் G2 சிப்செட் மூலம் வேலை செய்கிறது. இது மிகவும் வேகமானது. இந்த போனின் மூலம் அற்புதமான புகைப்படங்களையும், வீடியோவையும் எடுக்க முடியும். இதன் பேட்டரி நாள் முழுவதும் வருகிறது. இதை வயர்லெஸ் முறையிலும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.1 அங்குல டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 8ஜிபி ரேம் உள்ள இந்த மொபைல் ரூ.43,999க்கு Charcoal, Sea மற்றும் Snow என்ற வண்ணங்களில் கிடைக்கிறது.
டிஸ்ப்ளே
Pixel 7a ஆனது IP67 பாதுகாப்புடன் தண்ணீர் மற்றும் தூசியைக் கையாளும். கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்ட இதன் டிஸ்ப்ளே கீறல்களில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இது மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம், கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
சிப்செட்
கூகுள் டென்சர் ஜி2 என்பது பிக்சலுக்காக கஸ்டமைஸ் செய்யப்பட்ட, பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோவில் உள்ள அதே சிப்செட் ஆகும். கூகிளின் மேம்பட்ட இயந்திர கற்றல் (Artificial intelignece), ஃபோன் அழைப்புகளில் மேம்படுத்தப்பட்ட ஆடியோ, சிறந்த பேட்டரி திறன் மற்றும் அற்புதமான புகைப்படம் மற்றும் வீடியோ தரத்தினை வழங்குகிறது. இது Pixel 7aஐ வேகமானதாகவும், அதிக திறன்மிக்கதாகவும், பாதுகாப்பானதாகவும், மேலும் உதவிகரமாகவும் ஆக்குகிறது
கேமரா
இந்த மொபைலின் ‘நைட் சைட்’ மூலம் குறைந்த வெளிச்சத்தில் அற்புதமான படங்களை எடுப்பது எளிது. உங்கள் மங்கலான புகைப்படங்கள் புதியதாக இருந்தாலும் சரி பழையதாக இருந்தாலும் சரி, Google புகைப்படங்களில் Magic eraser மற்றும் Photo unblur மூலம் கவனச்சிதறல்களை அகற்றலாம். அனைத்து skin டோன்களும் உண்மையான தொனியுடன் துல்லியமாக குறிப்பிடப்படுகின்றன. Pixel 7a போனில், தொலைதூரத்தில் இருந்துகொண்டே தெளிவான க்ளோஸ்-அப் போர்ட்ரைட் புகைப்படஙக்ள் எடுக்க ‘Super Res’ ஜூம் கொண்டுள்ளது. A-சீரிஸில் முதல் முறையாக, ‘Long Exposture’ வசதி வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரி
இந்த Pixel 7a போனின் பேட்டரி 24 மணி நேரத்துக்கு மேல் நீடிக்கிறது. அதுவே Extreme Battery saverஐ இயக்கும் பொழுது 72 மணி நேரம் வரை பேட்டரித்திறன் நீடிக்கிறது. இதை Qi- Certified சாதனம் மூலம் வயர்லெஸ் முறையிலும் சார்ஜ் செய்ய முடியும்.
பாதுகாப்பு
Google Tensor G2 மற்றும் Titan M2 பாதுகாப்பு சிப் மூலம், உங்கள் தனிப்பட்ட தகவலைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் வகையில் Pixel 7a போன் பல அடுக்கு பாதுகாப்புடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. Face unlock மற்றும் Finger print unlock ஆகியவற்றை ஒரு பார்வை அல்லது தட்டுவதன் மூலம் விரைவாகவும் எளிதாகவும் மொபைலைத் திறக்க முடியும். மேலும் Pixel ஆனது 5 வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளுடன் வருகிறது. எனவே உங்கள் போன் காலப்போக்கில் இன்னும் பாதுகாப்பானதாக இருக்கும்.
AI
Artificial intelligence மூலம் இந்த மொபைலில் புதிய வசதிகள் சில வழங்கப்பட்டுள்ளன. Clear calling மூலம் மொபைலின் அழைப்புகள் மென்மையாக இருக்கும். Voice maessage transcription மூலம், நீங்கள் ஆடியோ செய்திகளைப் படிக்கலாம். Assistant voice typing மூலம் உங்கள் குரலைக் கொண்டு தட்டச்சு செய்ய உங்களை அனுமதிக்கிறது.
சிறப்புகள்
Pixel 7a வாங்கும் போது கிடைக்கும் மூன்று மாத யூடியூப் பிரீமியம் மற்றும் புதிய பயனர்களுக்கான Google One ஆகிய பலன்களைப் பெற உதவும். 100GB சேமிப்பகம் மற்றும் Automatic Phone Backup மூலம் Google One உங்கள் ஃபைல்களையும், படங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கும். யூடியூப் பிரீமியம் மூலம், யூடியூப் வீடியோக்களையும் இசையையும் விளம்பரங்கள் இன்றி பின்னணியிலும் ஆஃப்லைனிலும் ரசிக்கலாம்.