
திரையரங்குகளுக்கு குடும்பத்துடன் சென்று ஒவ்வொரு படத்தையும் பார்ப்பது என்பது நடுத்தரக் குடும்பங்களுக்கு இயலாத நிலையில், இந்த ஓடிடி ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வாரமும் சிறப்பான பல படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன. இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்குள்ளான படங்களும் உள்ளன.
ஓடிடி தளங்கள், சினிமா காதலர்களின் கனவுக்கு ஈடுகொடுத்து வருகிறது. இதன்மூலம் தேவையான படங்களை, தேவையான நேரத்தில் பார்த்துக் கொள்ள முடியும். சில வாரங்களுக்கு முன்பு ரிலீசான படங்கள், நேரடியாக வெளியாகும் படங்கள், பழைய கிளாசிக் படங்கள் என இதன் பட்டியல் நீளுகிறது.
நமது விருப்பத்திற்குரிய ஹீரோக்களின் படங்களையும், அவரது பழைய படங்கள் முதல்கொண்டு ஓடிடி மூலம் பார்க்க முடிவது இதன் வசதி. முக்கியமான விஷயம். 4 பேர் கொண்ட குடும்பத்தினர் புதிய படத்தை திரையரங்குகளில் பார்ப்பதற்கு குறைந்த பட்சம் ஸ்நாக்ஸ் உட்பட 1500 ரூபாய் செலவாகும். ஆனால் வீட்டில் ஹோம் தியேட்டருடன் அதே படத்தை சில வாரங்களில் ஓடிடியில் பார்ப்பதன் மூலம் அதே அனுபவத்தை பெற முடியும். செலவும் குறைவுதான் என்பது இதன் மற்றொரு சிறப்பு. ஒவ்வொரு வாரமும் ஓடிடி, திரையரங்குகள் என பல படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
இந்த வார ஓடிடி ரிலீஸ்
இந்த வாரமும் சிறப்பான பல படங்கள் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. அந்த வகையில் இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 26ம் தேதி தமிழ்படங்கள் ஜோதி டெண்ட்கொட்டாவிலும், பேட்டரி சிம்ப்ளி சவுத்திலும் வெளியாகவுள்ளன.
இதேபோல தெலுங்கில் ரிபீட் ஹாட்ஸ்டாரிலும், ஒடேலா ரயில்வே ஸ்டேஷன் ஆஹா தமிழிலும் வெளியாகவுள்ளன. கன்னடப்படமான பெட்ரோமாக்ஸ் வூட்டில் வெளியாகிறது. இந்தியில் கிரிமினல் ஜஸ்டீஸ் 3 மற்றும் மகாராணி படங்கள் முறையே ஹாட்ஸ்டார் மற்றும் சோனி லைவில் வெளியாகவுள்ளது.
ஹாலிவுட் படங்கள் சமாரிட்டன் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இதனிடையே விரைவில் விருமன், சீதாராமன் ஆகிய படங்கள் அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளன. மலையாள படமான தல்லுமல்லா, டோபாரா படங்கள் நெட்பிளிக்சில் வெளியாகவுள்ளன. இதில் மலையாளத்தில் உருவாகியுள்ள தல்லுமல்லா படம் கோல்ட் மாஃபியாவை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.
ஜீ 5ல் பிம்பிசாரா, ரக்ஷா பந்தன், கார்த்திகேயா 2 ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. ஹாட்ஸ்டாரில் நான் தான் கேஸ் கொடு படமும், சோனி லைவில் ராமா ராவ் ஆன் ட்யூட்டி படமும் ரிலீசாகவுள்ளன. இதனிடையே, அமீர்கானின் லால் சிங் சத்தா படம் வூட் செலக்டில் வெளியாகவுள்ளது. அமீர்கானின் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி தற்போது கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஸ்ரீகாந்த் நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள 10வது கிளாஸ் டைரீஸ் படம் நாளை அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. அதர்வா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான குருதியாட்டம் படம் வரும் செப்டம்பர் 2ம் தேதி ஆஹா தமிழில் வெளியாக இருக்கிறது.
திரையரங்குகளில் சென்று இந்தப் படங்களை பார்க்க முடியாத ரசிகர்கள் ஓடிடியில் பார்த்துக் கொள்ள முடியும். இந்தப் படங்கள் வரும் 26ம் தேதி மற்றும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், வாரயிறுதி நாட்களை சிறப்பாக ரசிகர்கள் திட்டமிட்டுக் கொள்ளலாம்.