ரூ.2,000 க்குள் இப்படியெல்லாம் மொபைல் போன்கள் கிடைக்கிறதா?” என்று நினைக்கும் படியான சில சூப்பர் பட்ஜெட் போன்களை தான் இங்கே பார்க்கப் போகிறோம். இந்த போன்கள் அனைத்தையும் அமேசான் இணையதளத்திலேயே வாங்கலாம்.
லாவா ஃப்ளிப் (Lava Flip)
ஃபிளிப் போன்களை ‘அவுட் ஆஃப் டிரெண்ட்’ என்று யார் சொன்னது? அதுவும் ரூ.2,000 க்குள் வாங்க கிடைத்தால், இதை யாருக்கு தான் பிடிக்காது? ஸ்டைல் ஆன டிசைன், 2.4-இன்ச் QVGA டிஸ்ப்ளே, VGA கேமரா என கலக்கும் இந்த சூப்பர் பட்ஜெட் போனின் விலை ரூ.1,699 மட்டுமே ஆகும். இது நியூக்ளியஸ் OS, 512 எம்பி ரேம், 1200mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் வருகிறது.
லாவா ஏ9 (Lava A9)
இந்த லாவா மொபைல் போன் – எளிமை மற்றும் நேர்த்தியின் கலவையாக இருக்கிறது. கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற அம்சங்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்ற நல்ல ஸ்பீக்கருடன் வருகிறது. மேலும் இந்த மொபைலில் பல உள்ளூர் மொழிகளுக்கான ஆதரவும் உள்ளது. இதன் விலை ரூ.1,790 ஆகும். இது பார் ஃபோன் ஓஎஸ், 1700mAh பேட்டரி, 2.8 இன்ச் டிஸ்பிளே, ஃப்ளாஷ் உடனான 2 மெகாபிக்சல் ரியர் கேமரா போன்ற அம்சங்களும் இருக்கிறது.
டிஸோ ஸ்டார் 500 (DIZO Star 500)
Realme நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன டிஸோ, மலிவு விலையில் அசாதாரணமான மற்றும் தனித்துவமான அம்சங்களை கொண்ட தயாரிப்புகளை வழங்குகிறது. அந்த பட்டியலில் Dizo Star 500 மாடலுக்கும் ஒரு இடமுண்டு. இதன் விலை ரூ.1,499 ஆகும். இது ஆண்ட்ராய்டு ஓஎஸ், 32 எம்பி ரேம், 1900mAh பேட்டரி, 2.8 இன்ச் அளவிலான டிஸ்பிளே, ஃப்ளாஷ் உடனான விஜிஏ கேமராவுடன் வருகிறது.
மைக்ரோமேக்ஸ் X818 (Micromax X818)
இந்திய பிராண்டான மைக்ரோமேக்ஸின் கீழ் வாங்க கிடைக்கும் பெஸ்ட் சூப்பர் பட்ஜெட் போனில் X818 க்கு நிச்சயம் ஒரு இடமுண்டு. இதன் விலை ரூ.1,474 ஆகும். இது Spreadtrum ஓஎஸ், 32 எம்பி ரேம், 1450mAh பேட்டரி, 2.8 இன்ச் டிஸ்பிளே, ஃப்ளாஷ் உடனான கேமரா போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கிறது.
மோட்டோரோலா ஏ70 (Motorola A70)
இது ஒரு ஸ்டைலான, நம்பகமான மற்றும் கச்சிதமான மொபைல் போன் ஆகும். சுவாரசியமாக ஒரு மீடியாடெக் ப்ராசஸர் உடன் வருகிறது மற்றும் நல்ல பெர்ஃபார்மென்ஸையும் வழங்குகிது. இதன் விலை ரூ.1,999 ஆகும். இது 32 எம்பி ரேம், 1750mAh பேட்டரி, 2.4 இன்ச் டிஸ்பிளே, 32 ஜிபி ஸ்டோரேஜ், ஃப்ளாஷ் உடனான 1.3 எம்பி பின்பக்க கேமரா போன்றவைகளைக் கொண்டிருக்கிறது.
லாவா ஜெம் (Lava Gem)
பெயருக்கு ஏற்றபடி, லாவா ஜெம் நிச்சயமாக இந்த பட்டியலில் ஒரு “ரத்தினம்” தான். ஏனெனில் இது இராணுவ தர சான்றிதழ் உடன் நல்ல ஸ்டோரேஜ் மற்றும் வலுவான பேட்டரியையும் வழங்குகிறது. இதன் விலை ரூ.1,649 ஆகும். இது நியூக்ளியஸ் OS, 32 எம்பி ரேம், 1750mAh பேட்டரி, 2.8 இன்ச் டிஸ்பிளே, 32 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளக்கூடிய சேமிப்புத்திறன், ஃப்ளாஷ் உடனான 1.3 எம்பி பின்பக்க கேமரா போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
ஐடெல் இட்5626 (itel it5626)
மெட்டாலிக் ஃபினிஷ் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்ட ஸ்டைலான மொபைல் இது. இதன் விலை ரூ.1,729 ஆகும். இது நியூக்ளியஸ் ஓஎஸ், 4 ஜிபி ரேம். 2500mAh பேட்டரி, 2.8-இன்ச் டிஸ்பிளே, 32 ஜிபி ஸ்டோரேஜ், ஃப்ளாஷ் உடனான VGA ரியர் கேமரா போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கிறது.
ஐகால் கே555 (IKALL K555)
IKALL நிறுவனம் ஆனது, மலிவு விலையில் தரமான போன்களை வழங்கும் பிராண்டுகளின் வரிசையில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிறுவனத்தின் பெஸ்ட் போன்களில் ஒன்று – K555 மாடல் ஆகும். இதன் விலை ரூ.1149 ஆகும். இது 2.8 இன்ச் அளவிலான டிஸ்பிளே, சிம்பியன் 9.1 ஓஎஸ், 64 எம்பி ரேம், 64 எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ் (16 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது), 3000mAh பேட்டரி, ஃப்ளாஷ் கொண்ட 1 எம்பி ரியர் கேமரா, ப்ளூடூத், எம்பி3 பிளேயர் மற்றும் வயர்லெஸ் எஃப்எம் போன்ற வசதிகளை வழங்குகிறது.
கெச்சோடா ஏ8 (Kechaoda A8)
பெரிய கீபோர்ட், நல்ல டிசைன், நம்பகமான பேட்டரி என ரூ.2000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் பட்ஜெட் மொபைல். இதன் விலை ரூ.1499 ஆகும். இது 3.5 இன்ச் டிஸ்பிளே, சிம்பியன் 9.1 ஓஎஸ், 16 எம்பி ரேம், 64 எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ் (32 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது), 2500mAh பேட்டரி, ஃபிளாஷுடன் கூடிய 0.3 எம்பி ரியர் கேமரா,ப்ளூடூத், எம்பி3 பிளேயர் மற்றும் வயர்லெஸ் எஃப்எம் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கிறது.














