ரூ.2,999க்கு இரட்டை சிம் 4ஜி போன்!

இந்தியாவைச் சேர்ந்த ஐடெல் மொபைல் நிறுவனம், ஷாவ்மி, ரெட்மி, ரியல்மி, ஒப்போ, இன்பினிக்ஸ், டெக்னோ போன்ற சீன மொபைல் தயாரிப்பாளர்களுக்கே சவால் விடும் வகையில் ஒரு குறைந்த விலை 4ஜி மொபைலை வெளிட்டு இருக்கிறது. அதுவும் வெறும் ரூ.2999 என்கிற விலைக்கு. அதென்ன போன்? இந்த ஸ்மார்ட்போனில் அப்படி என்ன ஸ்பெஷல்? பார்க்கலாம்.

இந்திய மொபைல் நிறுவனமான ஐடெல் (Itel Mobile) மேஜிக் எக்ஸ் ப்ரோ 4ஜி (Magic X Pro 4G) என்கிற புதிய மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைலின் மிக முக்கியமான சிறப்பம்சம் – இதன் கனெக்டிவிட்டி தான்.

சிறப்பம்சம்

ஏனென்றால் மேஜிக் எக்ஸ் ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனில் உள்ள ஹாட்ஸ்பாட்டை ஆன் செய்தால், அதன் கீழ் ஒரே நேரத்தில் 8 டிவைஸ்கள் வரை கனெக்ட் செய்ய முடியும்; கூடவே ஹைஸ்பீட் ஹாட்ஸ்பாட் எக்ஸ்பீரியன்ஸையும் பெற முடியும்! இது சற்றே புதுமையான ஒரு அம்சம் ஆகும். இது பட்ஜெட் விலையிலான சீன மொபைல் போன்களுக்கு மட்டுமின்றி, ஜியோ போனிற்கும் கூட சிக்கலை ஏற்படுத்தலாம்!

மொழி ஆதரவு

வெறும் ரூ.2,999 விலைக்கு கிடைக்கும் இந்த மொபைல் போனிற்கு 2 வருடங்களுக்கான சர்வீஸ் வாரண்டியும் கிடைக்கிறது. அதுமட்டுமா? இது தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, பெங்காலி, ஒடியா, அஸ்ஸாமி மற்றும் உருது ஆகிய 12 மொழிகளுக்கான ஆதரவையும் வழங்குகிறது. எல்லாவற்றை விடவும் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ஐடெல் மேஜிக் எக்ஸ் ப்ரோ 4ஜி மொபைல் ஆனது டூயல் 4ஜி VoLTE ஆதரவுடன் வருகிறது. அதாவது இதுவொரு டூயல் சிம் கார்டு மொபைல் போன் ஆகும்!

டிஸ்பிளே!

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது மிகவும் அழகான கர்வ்டு டிசைனை பெற்றுள்ளது. அதில் மிகவும் கச்சிதமான 2.4-inch (6.1 cm) அளவிலான QVGA டிஸ்பிளே பேக் செய்யப்பட்டுள்ளது. ஆக இது உங்கள் கைகளை விட்டு அவ்வளவு எளிதில் நழுவி விடாது! நீலம் மற்றும் கருப்பு என்கிற 2 நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐடெல் Magic X Pro 4ஜி மொபைல் ஆனது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டின் வழியாகவும் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிங் வாய்ஸ்

ஐடெல் (Itel) நிறுவனத்தின் இந்த மேஜிக் எக்ஸ் ப்ரோ 4ஜி போனில் கிங்வாய்ஸ் (KingVoice) என்கிற ஒரு ஆதரவும் உள்ளது. இது எழுத்துக்களை பேச்சாக மாற்றும் ஒரு டெக்ஸ்ட்-டு-ஸ்பீச் அம்சம் ஆகும். கேமராக்களை பொறுத்தவரை, இதில் ஒரு VGA ரியர் கேமரா உள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, இது டூயல் சிம் கார்டுகளுக்கான ஆதரவை வழங்கும் மற்றும் எச்டி-எனேபிள்டு VoLTE கால்களை ஆதரிக்கும். அதுமட்டுமின்றி, வைஃபை வழியாக டூயல் 4G VoLTE ஆதரவையும் வழங்கும்.

பூம் பிளே!

இந்த போனில் ஒரு பிரத்யேக ம்யூசிக் ஆப் உள்ளது. அது பூம் பிளே (Boom Play) என்று அழைக்கப்படுகிறது. இதன் வழியே திரைப்பட பாடல்கள், பக்தி போன்ற பல்வேறு வகைகளின் கீழ் உலகம் முழுவதும் இருந்து 74 மில்லியன் பாடல்களை ஸ்ட்ரீம் செய்ய முடியும். இதுமட்டுமின்றி Itel Magic X Pro 4G ஆனது 2500mAh திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டு இருக்கிறது. இந்த மொபைலோடு ஒரு சார்ஜர் மற்றும் ஒரு ஹேண்ட்ஸ்-ஃப்ரீ ஹெட்செட்டும் வருவது கூடுதல் சிறப்பு.