மோட்டோரோலா எக்ஸ்40 போனின் அம்சங்கள் பற்றிய தகவல் வெளியானது.

மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோரோலா எக்ஸ்40 எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த போனின் வர இருக்கும் சில அம்சங்கள் பற்றி AnTuTu தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் இந்த போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட், இரண்டு 50 மெகாபிக்சல் கேமராக்கள் உட்பட மூன்று கேமராக்கள் என முக்கிய அம்சங்கள் பற்றி தெரிய வந்துள்ளது. அவற்றை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

 

ஸ்னாப்டிராகன் சிப்செட்

மோட்டோரோலா எக்ஸ்40 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த வேகம் மற்றும் மேம்பட்ட திறனைக் கொண்டு இருக்கும். குறிப்பாக ஆப்ஸ்களை தடையின்றி வேகமாக பயன்படுத்த முடியும். கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். குறிப்பாக இந்த போனின் ஸ்பெஷல் என்னவென்றால் அது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதி தான்.

 

ஒஎல்இடி டிஸ்பிளே

மோட்டோரோலா எக்ஸ்40 ஸ்மார்ட்போனில் 6.67 அங்குல ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2,400 x 1,080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இதன் வசதிகளை வைத்துப் பார்க்கும் போது இதன் டிஸ்ப்ளே மிகச் சிறப்பாக இருக்கும் எனத் தெரிகிறது.

 

ட்ரிபிள் ரியர் கேமரா

மோட்டோரோலா எக்ஸ்40 ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் 50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 12எம்பி டெலிபோட்டோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும். கூடவே செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 32எம்பி கேமராவும் வழங்கப்பட்டு இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது.

 

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்

ரேம் மற்றும் சேமிப்புத்திறனைப் பொருத்தவரை 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும். மேலும் பாதுகாப்பு வசதிக்கென இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டரோலா எக்ஸ்40.

 

பாஸ்ட் சார்ஜிங் வசதி

விரைவில் அறிமுகமாகும் மோட்டோரோலா எக்ஸ்40 ஸ்மார்ட்போனில் 4900 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய மோட்டோரோலா போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கனெக்டிவிட்டி

மோட்டோரோலா எக்ஸ்40 ஸ்மார்ட்போன் 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியான தகவலை கொண்டு பார்க்கும் போது இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகலாம்.