
2010-ல் வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஜய்சேதுபதி தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பீட்சா, சூது கவ்வும், நானும் ரவுடிதான், சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா, 96 உள்ளிட்ட படங்கள் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தின.
விஜய் சேதுபதியின் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்சேதுபதி மீண்டும் போலீஸ் அதிகாரியாகவும், அவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு டிஎஸ்பி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியின் உடையில் பைக்கில் அமர்ந்துக் கொண்டு வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷின் படம் ரிலீஸ் ஆவது தள்ளிப் போய் இருக்கிறது. வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் ‘டிரைவர் ஜமுனா’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ‘ஆடுகளம்’, நரேன், ஸ்ரீ ரஞ்சனி, ‘ஸ்டான்ட் அப் காமடியன்’ அபிஷேக், ‘ராஜாராணி’ பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
டிரைவர் ஜமுனா போஸ்டர் இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதைத்தொடர்ந்து ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்துள்ளது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை 11 தேதியன்று வெளியாவதாக இருந்த ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் ‘கலகத் தலைவன்’. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ‘கலகத் தலைவன்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனம் ஈர்த்தது. கலகத் தலைவன் கலகத் தலைவன் இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் இயக்குனர்கள் மிஷ்கின், மாரி செல்வராஜ் மற்றும் படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இதனிடையே இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள இத்திரைப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.