Virutual RAM உபயோகிப்பது எப்படி?

மொபைல் உலகில் புதிதாக வந்திருக்கும் வசதிகளில் ஒன்று ‘Virtual RAM’. RAM என்பது மொபைலினுள் இருக்கும் ஒரு நினைவகப்பகுதி. நாம் ஒரு செயலியை இயக்கும் போது அந்த செயலியானது இந்த நினைவகப் பகுதில் தற்காலிகமாக வந்து அமர்ந்து கொண்டு நாம் செய்து முடிக்க வேண்டிய வேலையை செய்கிறது.

நம் மொபைலில் குறைவான RAM இருந்தால், பெரிய செயலிகளை, விளையாட்டுகளை இயக்கும்போது அந்த செயலி முறையாக இயங்காமல் தடங்கல் ஏற்படும். இதை தவிர்க்க அதிக RAM இருக்கும் மொபைலை வாங்கலாம். ஆனால், அவற்றின் விலையும் அதிகமாக இருக்கும்.

இந்த சூழ்நிலையில் தற்போது அறிமுகபடுத்தப்பட்டு இருப்பதுதான் ‘Virtual RAM’ வசதி. இதன்மூலம் நமது சேமிப்புத்திறனில் இருந்து சிறிய அளவை எடுத்து தற்காலிக RAMஆக உபயோகிக்கலாம். இதன் மூலம் பெரிய செயலிகளையும், விளையாட்டுகளையும் கூட தடையின்றி இயக்க முடியும்.

எடுத்துக்காட்டாக, நமது மொபைல் 4GB அளவுக்கு RAM, 64GB அளவு ROM என சொல்லப்படும் சேமிப்புத்திறனும் இருக்கிறது என வைத்துக் கொண்டால், ‘Virtual RAM’ முறையைப் பயன்படுத்தி 64GB இருக்கும் சேமிப்புத்திறனில் இருந்து 4GBஐ எடுத்து RAM ஆக பயன்படுத்த முடியும். இதனால் நமது மொபைல் 8GB RAM இருக்கும் மொபைல் போல் இயங்கும்.

உபயோகிப்பது எப்படி?
எடுத்துடுக்காட்டாக Xiaomi மொபைலில் இந்த ‘Virutual RAM’ எனப்படும் RAM extensionஐ எப்படி செய்வதென பார்க்கலாம்.

Xiaomi சமீபத்தில் MIUI 12.5 இயங்குதளம் உள்ள தனது மொபைல்களில் RAM expand முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
அதற்கு Xiaomi போனில் Settingsஐ க்ளிக் செய்யவும்
அதில் ‘Additional Settings’ஐ தேர்வு செய்யவும்
தற்போது உங்களுக்கு ‘Memory extension’ என்ற optionஐ காட்டும்
அதை ‘On’ செய்து தேவையான RAM அளவை உள்ளிடவும்.

விளையாட்டு
இது பெரிய விளையாடுகளை விளையாடும்போது, அது விரைவாக ‘Load’ ஆகவும், அதிக கிராபிக்ஸ் கொண்ட விளையாடுகளை தடையில்லாமல் விளையாடவும் உதவும்
மல்டி டாஸ்கிங்
ஒரே நேரத்தில் பல செயலிகளை திறந்து உபயோகிக்கும் போது RAM போதாமை ஏற்படும். அந்த நேரத்தில் இந்த Virtual RAM கைகொடுக்கும்.
கேமரா
தொடர்ச்சியாக படங்களை எடுக்கும் போதோ, அல்லது நீண்ட வீடியோ எடுக்கும் போதோ அதிக நினைவகத்திறன் இருந்தால் தடை இன்றி எடுக்கலாம். அதற்கும் இந்த Virtual RAM’ பயன்படுகிறது.