
Vivo தனது S17 தொடர் ஸ்மார்ட்போன்களை இந்த மே மாதம் சீனாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதில் Vivo S17e, S17 மற்றும் S17 Pro மாடல்கள் உள்ளன. Vivo S17e சமீபத்தில் 3C சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டது. இதன் மூலம் இந்த சீரிஸ் மொபைல்கள் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் செய்யும் திறனைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. வேகமான சார்ஜிங் திறனுடன் கூடுதலாக, Vivo S17e ஆனது அதன் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில், V2285A என்ற மாடல் எண்ணின் கீழ் Google ஆதரவு சாதனங்கள் பட்டியலில் இப்போது தோன்றியுள்ளது.
S17e இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட MediaTek Dimensity 7200 மூலம் இயக்கப்படும் என்று முந்தைய கசிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த சீரிஸ் மொபைல்கள் நல்ல செயல்திறனை வழங்க வாய்ப்புள்ளது. அதாவது multi-tasking, கேமிங் மற்றும் பெரிய செயலிகளை உபயோகிப்பவர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் ஒரு கவர்ச்சிகரமான விருப்பமாக இருக்கும்.
Vivo S17e அம்சங்கள் (வதந்தி)
வரவிருக்கும் Vivo S17e சில சுவாரஸ்யமான அம்சங்களுடன் வரும் என்று வதந்தி பரவுகிறது. இதில் 90Hz புதுப்பிப்பு வீத AMOLED டிஸ்ப்ளே இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த மொபைல்கள் மென்மையான மற்றும் துடிப்பான காட்சி அனுபவத்தை வழங்கும். மொபைலை இயக்குவது ஆக்டா-கோர் MediaTek Dimensity 7200 சிப்செட்டாக இருக்கும். இது பல்வேறு பணிகளை எளிதாகக் கையாளும் என்பதை உறுதி செய்கிறது. சேமிப்பு மற்றும் நினைவகத்தைப் பொறுத்தவரை, Vivo S17e குறைந்தது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் நினைவகத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மொபைல் சமீபத்திய ஆண்ட்ராய்டு 13 OS ஐ நேரடியாக இயங்கும். இதனால் இது பயனர்களுக்கு சமீபத்திய மென்பொருள் அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளை (security updates) வழங்குகிறது. Vivo S17e ஆனது 80W FlashCharge ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் கூடிய 4,500mAh பேட்டரியைக் கொண்டு இருக்கும் என வதந்தி பரவியுள்ளது. இது மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய அனுமதித்து, பயனர்களின் மதிப்புமிக்க நேரத்தை மிச்சப்படுத்துகிறது. இந்த மொபைல் 50MP பிரதான கேமரா மற்றும் 32MP முன்பக்கக் கேமராவுடன் வரலாம். இதன்மூலம் பயனர்களுக்கு உயர்தர புகைப்படம் மற்றும் வீடியோ அம்சங்கள் கிடைக்கும்.