Home News விவோவின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

விவோவின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்


விவோ நிறுவனம் அதன் T1x ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான இதில் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு refresh rate கூடிய 6.58 அங்குல Full HD LCD டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது. 90.6 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்நாப்டிராகன் 680 புராசஸரை கொண்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை டூயல் கேமரா செட் அப் உடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவும், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் LED Flash Light ஆகியவை பின்பகுதியில் இடம்பெற்றுள்ளன. முன்பகுதியில் வீடியோ கால் மற்றும் செல்ஃபி எடுப்பதற்கு ஏதுவாக 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

ஆண்ட்ராய்டு 12 மேல் கட்டப்பட்ட FunTouch OS 12 இயங்குதளத்துடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனில் 5,000mAh திறன் கொண்ட பேட்டரி இடம்பெற்று உள்ளது. இதுதவிர 18W fast charging வசதியும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் கிராவிட்டி பிளாக் (Gravity black) மற்றும் ஸ்பேஸ் ப்ளூ (Space blue) ஆகிய இருவித கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. விலையை பொறுத்தவரை விவோ T1x ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.11 ஆயிரத்து 999 எனவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 12,999 எனவும், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ. 14,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வருகிற ஜூலை 27-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர உள்ளது.