
பட்ஜெட் 5ஜி போனாக வெளியாகி இருக்கிறது Vivo T2 5G மொபைல். 6ஜிபி / 8ஜிபி என இரண்டு வேரியண்டில் வெளியாகி இருக்கும் இந்த மொபைல் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 13 மேல் Funtouch OS 13 கொண்டு கட்டமைக்கப்பட்ட இயங்குதளத்தில் இயங்குகிறது. கூடவே இது பிரபல 5ஜி சிப்செட்டான ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்டைக் கொண்டுள்ளது. 1300nits brightness கொண்ட இந்த இந்த மொபைல் 360Hz Touch sampling rateஐயும் கொண்டுள்ளது. இன்று வெளியான இந்த மொபைலை ப்ளிப்கார்ட் பிரத்யேகமாக விற்பனை செய்கிறது.
டிஸ்ப்ளே
இந்த Vivo T2 5G மொபைல் 6.38 அங்குல AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 2400 X 1080 அடர்த்தியையும், 360Hz Touch sampling rateஐயும் கொண்டுள்ளது. மொத்த மொபைலின் அளவு 158.91 x 73.53 x 7.80 ஆகும். இது 6000000:1 காண்ட்ராஸ்ட் ரேஷ்யோவையும் கொண்டுள்ளது.
கேமரா
இந்த Vivo T2 5G மொபைலின் பின்பக்கத்தில் இரண்டு கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. IOS வசதியுடன் கூடிய 64 மெகாபிக்சல் கேமரா ஒன்றும், 2MP டெப்த் சென்சார் ஒன்றும் இருக்கின்றன. இதனால் இதில் நடுக்கமற்ற தெளிவான படம் / வீடியோவை எடுக்க முடியும். கூடவே ஃப்ளாஷ் ஒன்றும் இருக்கிறது. முன்பக்கத்தில் செல்ஃபி எடுக்கவும், வீடியோ கால்கள் பேசவும் 16MP கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் குறைந்த அப்பசருடன் வெளியாகி இருப்பதால் குறைந்த வெளிச்சத்தில் கூட நல்ல படங்களை எடுக்க முடியும்.
மெமரி
இந்த Vivo T2 5G மொபைல் 6 GB / 8 GB என இரண்டு விதமான ரேம்களில் வெளியாகிறது. இரண்டு வேரியண்ட்களும் 128 GB இண்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இந்த இண்டர்னல் ஸ்டோரேஜை அதிகப்படுத்திக் கொள்ள ஒரு Micro SD slot வழங்கப்பட்டுள்ளது. இதில் மைக்ரோ SD கார்டை உபயோகித்து இந்த மொபைலின் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.
சிப்செட்
இந்த மொபைலில் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் இருக்கிறது. தற்போது வெளியாகும் பெரும்பாலான மொபைல்கள் இந்த சிப்செட்டைக் கொண்டுள்ளன. இது 6nm அளவில் கட்டமைக்கப்பட்ட ஒரு ஆக்டா கோர் சிப்செட் ஆகும். இது 6,00,000க்கும் அதிகமான அதுது ஸ்கோரைப் பெற்றுள்ளது. இதனால் இதனை தடை இன்றி இயக்க முடியும்.
பேட்டரி
Vivo T2 5G மொபைலில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு கூடிய 4500mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் Velocity Wate, Nitro Blaze என இரண்டு நிறங்களில் வெளியாகி உள்ளது. மேலும் இந்த மொபைலின் எடை 172கிராம் ஆகும்.
கனெக்டிவிட்டி
இரட்டை சிம் வசதியோடு வெளியாகி இருக்கும் இந்த மொபைலில் ப்ளூடூத் 5.1, Wi-Fi, Type – C port, OTG வசதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்கென இந்த மொபைலில் ‘இன் – டிஸ்ப்ளே ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார் இருக்கிறது. இந்த மொபைலில் 3.5mm ஆடியோ ஜாக், NFC, FM போன்ற வசதிகள் இல்லை.