இந்த மாதம் அறிமுகமாகிறது Vivo V25 series போன்கள்


Vivo நிறுவனம் விரைவில் இந்தியாவில் அதன் vivo V25 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வரிசையில் விவோ வி25 (Vivo V25) மற்றும் விவோ வி25 ப்ரோ (Vivo V25 Pro) ஆகியவை இடம்பெறும். இவை ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

சிறிது காலத்திற்கு முன்பு, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, விவோ வி25 ப்ரோவை வைத்திருந்ததைக் காண முடிந்தது. இதனால், ஒரு புதிய எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது.

சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி, வரவிருக்கும் vivo V25 Pro ஸ்மார்ட்போன் மாடலில் மூன்று பின்புற கேமரா வழங்கப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 64MP முதன்மை கேமரா OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) ஆதரவுடன் வருகிறது. இது மிகவும் நிலையான பிக்ச்சர் மற்றும் வீடியோ கேப்ச்சர் ஆதரவை வழங்குகிறது. இந்த சாதனம் சூப்பர் நைட் மோடு அம்சத்தையும் கொண்டிருக்கும்.

இதன் பின்புற கேமராவில் வரும் செகண்டரி சென்சார் அல்ட்ரா-வைட் கேமராவில் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) அம்சம் இருக்கிறது. முன்பக்கத்தில், Eye AutoFocus உடன் இயங்கும் 32 மெகா பிக்சல் செல்ஃபி ஷூட்டரை விவோ வழங்கியுள்ளது. சார்ஜிங் வேகத்தைப் பொறுத்தவரை, இந்த போனில் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மட்டுமே இருந்தது குறிப்பித்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் மாடலானது Fluorite AG கிளாஸ் உடன் நிறத்தை மாற்றும் தொழில்நுட்பத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த Vivo V25 Pro சாதனம் சூரிய ஒளி அல்லது புற ஊதா கதிர்வீச்சுக்கு வெளிப்படும் போதெல்லாம், அது நிறத்தை மாற்றும் படி உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vivo V25 Pro ஸ்மார்ட்போனில் 120Hz ரெப்ரெஷிங் ரேட் (refresh rate) உடன் கூடிய FHD+ 3D AMOLED டிஸ்பிளே இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 1300 சிப்செட் உடன் வெளிவரும் என்று சமீபத்திய தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 8GB ரேம் மற்றும் 12GB ரேம் உடன் 128GB மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளிவரும்.

இதன் அதிகாரப்பூர்வ விலை விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், நமக்குக் கிடைத்த தகவலின் படி, இந்த ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் சுமார் ரூ. 40,000க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடவே பண்டிகை காலம் நெருங்குவதால், புதிதாக அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட்போன் மாடல்களின் மீது சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.