விவோ நிறுவனம் புதிய விவோ வி25 ப்ரோ (Vivo V25 Pro) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தரமான சிப்செட் வசதியுடன் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது.
விவோ நிறுவனம் முன்பு போல் அதிகமான ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதில்லை என்றாலும், இந்நிறுவனம் தற்போது அறிமுகம் செய்யும் சில போன்கள் தரமான அம்சங்களுடன் வெளிவருவதை மறுப்பதற்கில்லை.
அந்தவகையில் விரைவில் வெளியாகும் விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போனும் சிறந்த அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. மேலும் இந்த புதிய விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தரமான சிப்செட்
இந்த புதிய விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது தரமான மீடியாடெக் Dimensity 1300 சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் விளையாடுபவர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதாவது கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த சிப்செட் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே விளையாட்டுச் செயலிகளை இதில் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகிறது இந்த விவோ ஸ்மார்ட்போன்.
சூப்பர் டிஸ்பிளே
Vivo V25 Pro ஸ்மார்ட்போன் 6.56-அங்குல Full HD plus 3D curved AMOLED டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் ஒரு சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்று நம்பலாம். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (refresh rate), 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (touch sampling rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது.
12GB RAM
விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் (in-display fingerprint scaner) வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.
அருமையான பேட்டரி
விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 4500mAh பேட்டரியோடு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய 80W fast charging வசதியும் இருக்கிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இதன் வடிவமைப்பில் விவோ அதிக கவனம் செலுத்தியுள்ளது.
அல்ட்ரா வைடு கேமரா
இந்த புதிய விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் 50 மெகா பிக்சல் முதன்மை கேமரா + 12 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 மெகா பிக்சல் portrait லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டு இருக்கிறது. முன்பக்கத்தில் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32 மெகா பிக்சல் கேமராவும் இருக்கிறது. குறிப்பாக இந்த போனில் 12 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு லென்ஸ் இருப்பதால் அருமையாக புகைப்படங்களை எடுக்க முடியும்.
தரமான அம்சங்கள்
இந்த புதிய விவோ போன் நீல நிறத்தில் அறிமுகமாகும் என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக சமீபத்தில் வெளியான நத்திங் போன் (1) மற்றும் ஒன்பிளஸ் nord 2T, கூகுள் பிக்சல் 6A ஸ்மார்ட்போன்கனை விட தரமான அம்சங்களுடன் இந்த விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
விலை
ஆன்லைனில் வெளியான தகவலின்படி புதிய விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.40,000-க்குள் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






