
விவோ நிறுவனம் அதன் V25 மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. V25 சீரிஸில் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். முதலில் V25 மாடலை அறிமுகப்படுத்த இருக்கும் விவோ, அதன் பின்னர் விவோ V25 ப்ரோ மாடலை அறிமுகப்படுத்தும் என தெரிவித்துள்ளது.
சமீபத்திய தகவலின்படி விவோ நிறுவனம் வருகிற ஆகஸ்ட் மாதம் 17 அல்லது 18 தேதிகளில் இந்தியாவில் அறிமுக விழா ஒன்றை நடத்தி அதில் விவோ V25 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. விவோ V25 ப்ரோ மாடலை செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
விவோ V25 ப்ரோ ஸ்மார்ட்போனில் 120Hz refresh rate உடன் கூடிய 6.56 அங்குல Full HD+ curved AMOLED டிஸ்ப்ளே, 50 மெகாபிக்சல் மெயின் கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா ஒயிடு கேமரா, 2 மெகாபிக்சல் போர்ட்ரேட் கேமரா என பின்புறம் டிரிபிள் கேமரா செட்டப்பும், முன்பக்கம் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இருக்கிறது. MediaTek Dimensity 8100 SoC புராசஸர், 4500mAh பேட்டரி. 80W fast charging என எண்ணற்ற அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்று இருப்பதாகத் தெரிகிறது.





