
விவோ நிறுவனத்தின் Vivo V25 மொபைல் சற்று நேரத்திற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது.
Vivo V25 Pro
ஃப்ளிப்கார்ட்டின் ‘பிக் பில்லியன் டேஸ்’ விற்பனை மற்றும் இந்தியாவின் பண்டிகை கொண்டாட்டத்தை குறிவைத்து Vivo V25 Pro மொபைல் வெளியாகி இருக்கிறது. எலிகண்ட் ப்ளாக் (Elegant Black), சர்ஃபிங் ப்ளூ (Surfing Blue) என இரண்டு நிறங்களில் வெளியாகி இருக்கும் இந்த மொபைல், 8GB RAM – 128GB சேமிப்புத்திறன் மற்றும் 12GB RAM – 256GB சேமிப்புத்திறன் என இரண்டு வேரியண்ட்களில் வெளிவந்து இருக்கிறது. இதில் நீல வண்ண மொபைலில் Color Changing Fluorite AG Glass Design என்ற அம்சம் இருக்கிறது. இது மொபைலின் வண்ணத்தை வெளிர் நீலத்தில் இருந்து அடர் நீலத்திற்கு மாற்றுகிறது.
டிஸ்ப்ளே
இந்த மொபைல் 6.44 அங்குல (16.66 cm) அளவில், 2376×1080 Resolutionல், FHD+ டிஸ்ப்ளேவுடன் வெளியாகி இருக்கிறது. இதன் திரை Capacitive multi-touch வசதியையும், 120Hz 3D Curved displayவை 300Hz touch sampling rate உடன் கொண்டு இருக்கிறது.
கேமரா
இதன் பின்பக்கத்தில் OIS வசதியுள்ள 64MP கேமரா முதன்மை கேமராவாக இருக்கிறது. இதில் இருக்கும் Bokeh Flare Portrait என்ற அம்சம் மூலம் புகைப்படத்தில் விதவிதமான Bokeh effectஐ கொண்டு வர முடியும்.இதன் மூலம் சிறந்த இரவு நேர புகைப்படங்களையும் எடுக்க முடியும். கூடவே இந்த மொபைல் 4K video மற்றும் HDR வீடியோவையும் ஆதரிக்கிறது. இதனையடுத்து 8MP wide angle கேமரா இருக்கிறது. கூடவே 2MP மேக்ரோ கேமராவும் இருக்கிறது. முன்பக்கத்தில் 50MP செல்ஃபி கேமரா இருக்கிறது. இதில் ‘Eye AF’ அம்சம் இருப்பதால் தெளிவான, சிறந்த செல்ஃபி புகைப்படங்களையும், வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் முடியும். பின்பக்கத்தில் LED flash ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர, போட்டோவுக்கும், வீடியோவுக்கும் Panorama, Slow Motion, Live Photo, Time-Lapse, Pro, AR Stickers போன்ற பல அம்சங்கள் இதில் இருக்கிறது.
அம்சங்கள்
5G மொபைலான Vivo V25 இரட்டை சிம் வசதியைக் கொண்டுள்ளது. இதில் MediaTek Dimensity 900 சிப்செட் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 -ஐ இயங்குதளமாக கொண்டுள்ள இந்த மொபைல் ஏற்கனவே குறிப்பிட்டது போல் 8GB RAM – 128GB சேமிப்புத்திறன் மற்றும் 12GB RAM – 256GB சேமிப்புத்திறன் என இரண்டு வேரியண்ட்களில் வெளிவந்து இருக்கிறது. கூடவே இதன் RAM அளவை 8GB வரை அதிகப்படுத்திக் கொள்ளும் வசதியும் உள்ளது. பிங்கர் ப்ரிண்ட் சென்சார் செக்யூரிட்டி வசதியுடன் வரும் இந்த மொபைலில் 4500mAh பேட்டரியும் 44W flash charge வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. சார்ஜரும் இந்த மொபைலோடு சேர்ந்து வருவது சிறப்பு.
கனெக்டிவிட்டி
Vivo V25 மொபைல், 2.4GHz, 5GHz Wi-Fi, Bluetooth – 5.2, Type-C போர்ட், GPS, OTG போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. கண்ணாடியில் தயாரான இதன் எடை 186 கிராம் இருக்கிறது.
விலை
Vivo V25 மொபைலின் 8GB RAM – 128GB சேமிப்புத்திறன் கொண்ட மொபைல் ரூ27,999 என்ற விலையிலும், 12GB RAM + 128GB Storage 31,999 என்ற விலையிலும் கிடைக்கிறது.
