விரைவில் வருகிறது விவோ-வின் பட்ஜெட் போன் V25e

விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ வி25இ எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைனில் கசிந்த விவோ வி25இ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இந்த விவோ வி25இ ஸ்மார்ட்போன் ஆனது தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டும் வெளிவருகிறது.

சேமிப்புத்திறன்

இந்த புதிய விவோ வி25இ ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ளும் வசதியையும் கொண்டுள்ளது. அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டிகார்டு ஸ்லாட்டும் இதில் இருக்கிறது.

கேமரா

விவோ வி25இ ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் மூன்று கேமராக்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று 64MP முதன்மை கேமரா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் முன்பக்கத்தில் 32MP கேமராவோடு ஆதரவுடன் இந்த விவோ போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்ட் சார்ஜிங் வசதி

அதேபோல் 4500 mAh பேட்டரி மற்றும் 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி25இ ஸ்மார்ட்போன். கூடவே 3.5mm ஆடியோ ஜாக்,யுஎஸ்பி டைப்-சிபோர்ட் போன்ற பல சிறப்பான வசதிகளுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் எனத் தெரிகிறது. விவோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த விவோ Y22s ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

Y22s ஸ்மார்ட்போன் விவோ

Y22s ஸ்மார்ட்போன் ஆனது 6.55-அங்குல HD plus IPS LCD டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. இதோடு 720 x 1612 பிக்சல்ஸ், 20:1:19 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 530 நிட்ஸ் ப்ரைட்னஸ் போன்ற அசத்தலான அம்சங்கள் இதில் உள்ளன.

ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்

விவோ Y22s போனில் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர் வசதி உள்ளது. இதனால் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான விவோ ஸ்மார்ட்போன். குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்புத்திறனைக் கொண்டுள்ளது இந்த விவோ Y22s ஸ்மார்ட்போன்.
விவோ Y22s ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 8MP கேமரா இருக்கிறது.

பேட்டரி

விவோ Y22s ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 18 வாட்ஸ்பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், டூயல் சிம், 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், 3.5mm ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற தரமான வசதிகளைக் கொண்டுள்ளது. தற்போது இந்த போன் வியட்நாமில் அறிமுகம் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.