[Exclusive] இந்தியாவில் வெளியாக இருக்கும் Vivo V29e விலை, கேமரா விவரங்கள் வெளியானது

Highlights

  • இந்தியாவில் Vivo V29e இன் விலை சுமார் ரூ.30,000 ஆக இருக்கும்.
  • இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமராக்கள் மற்றும் 50MP முன்பக்க கேமராவுடன் வெளியாகலாம்.
  • Vivo V29 சீரிஸின் முதல் போன் இந்தியாவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

Vivo V29e இந்தியாவில் வெளியிடப்படும் விவோ 29 சீரிஸின் முதல் போனாக இருக்கும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த வார தொடக்கத்தில், Vivo V29e அதன் வடிவமைப்பை உறுதிப்படுத்தும் ரெண்டர்களை நாங்கள் வெளிப்படுத்தினோம். இப்போது இந்த போனின் கேமரா விவரங்கள் மற்றும் அதன் சாத்தியமான இந்தியவிலை பற்றிய பிரத்யேக தகவல்கள் எங்களிடம் உள்ளன.

Vivo V29e கேமரா விவரங்கள்

Vivo V29e ஆனது 64MP முதன்மை கேமரா மற்றும் 50MP முன்பக்க கேமராவைக் கொண்டிருக்கும் என்று 91mobiles பிரத்தியேகமாக தொழில்துறை ஆதாரங்களில் இருந்து தெரிந்துகொண்டது. பின்புற 64MP கேமரா OIS உடன் வரும். மேலும் இது Night photographyக்கு சிறந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனுடன் பின்புறத்தில் இரண்டாம் நிலை சென்சார் இருக்கும். முன்பக்க 50MP கேமரா செல்ஃபிகள் மற்றும் உருவப்படங்களுக்கான ஆட்டோஃபோகஸுடன் வருகிறது.

Vivo V29e ஆனது நிறுவனத்தின் ‘Wedding Portrait’ அம்சத்துடன் வரும். இது அடிப்படையில் “சூடான, வெளிர் நிற நிழல்கள் மற்றும் தங்கம் மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களின் கலவையுடன்” புகைப்படங்களை உருவாக்குகிறது.

இந்தியாவில் Vivo V29e  (எதிர்பார்க்கப்படும்) விலை

Vivo V29e இன் இந்திய விலை சுமார் ரூ.30,000 என கூறப்படுகிறது. 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி ஆகிய இரண்டு வகைகளில் இந்த மொபைல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், இது பெரும்பாலும் போனின் ஆரம்ப விலையாக இருக்கும். இது Moto Edge 40 மற்றும் Realme 11 Pro+ போன்ற போன்களோடு Vivo V29e போட்டியிடும். இதன் அதிகாரப்பூர்வ தேதி எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் Vivo V29e ஆகஸ்ட் இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vivo V29e: இதுவரை நாம் அறிந்தவை

நாங்கள் கண்ட கசிவுகள் மற்றும் அறிக்கைகளின் அடிப்படையில், Vivo V29e பற்றி தெரியவந்துள்ளவை:

  • Vivo V29e கசிந்த ரெண்டர் பஞ்ச்-ஹோல் செல்ஃபி கேமரா மற்றும் Curved displayவை கொண்டுள்ளது. இரட்டை பின்புற கேமராக்கள் செங்குத்தாக சீரமைக்கப்பட்ட இரட்டை தொனி பின்புற வடிவமைப்பையும் கொண்டுள்ளது. போனின் டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் நீலம் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களிலும் காணப்பட்டது.
  • Vivo V29e Qualcomm Snapdragon 480 அல்லது 480+ SoC உடன் வெளியாகலாம்.
  • Vivo V29e இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் முதல் V29 சீரிஸ் மொபைல் என்று கூறப்படுகிறது.
Vivo V21e 5G முக்கிய விவரக்குறிப்புகள்
  • சிப்செட் – மீடியாடெக் டைமன்சிட்டி 700 MT6833
  • ரேம் – 8GB
  • டிஸ்ப்ளெ – 6.44 அங்குலம் (16.36 செமீ)
  • பின் கேமரா – 64MP + 8MP
  • செல்ஃபி கேமரா – 32MP
  • பேட்டரி – 4000mAh