Vivo X Fold 3 Pro வெளியீட்டு தேதி & அம்சங்கள் கசிந்தன

Highlights

  • Vivo X Fold சீரிஸில் இரண்டு மாடல்கள் இருக்கலாம்.
  • இது X Fold 3 மற்றும் X Fold 3 Pro ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • Vivo Pad 3 சீரிஸ் இந்த போன்களுடன் வெளியாகலாம்.

விவோவின் பை-ஃபோல்டிங் போன் குறித்து கடந்த சில நாட்களாக பல செய்திகள் வெளியாகி வருகின்றன. பிராண்ட் அதன் X Fold தொடரை விரிவுபடுத்தி, Vivo X Fold 3 மற்றும் Vivos X Fold 3 Pro ஆகியவற்றை சந்தையில் கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், Pro மொபைலின் வெளியீட்டு தேதி கசிவில் தெரியவந்துள்ளது. இரண்டு மாடல்களும் ஒரே தேதியில் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் வெளியீட்டு தேதி மற்றும் எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகளை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

Vivo X Fold 3 Pro வெளியீட்டு தேதி (கசிந்தது)

  • டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன், மைக்ரோ பிளாக்கிங் தளமான Weibo இல் Vivo X Fold 3 Pro வெளியீட்டு தேதியைப் பகிர்ந்துள்ளது.
  • Vivo X Fold 3 Pro மார்ச் 27 அன்று அறிமுகப்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த கசிவில் வழக்கமான மாடல் Vivo X Fold 3 பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
  • முன்னதாக, Vivo X Fold 3, Vivo X Fold 3 Pro போன்களுடன் Vivo Pad 3 மற்றும் Vivo Pad 3 Pro டேப்களும் அறிமுகப்படுத்தப்படலாம் என்று ஒரு அறிக்கை வெளிப்படுத்தியது.

Vivo X Fold 3 Pro இன் விவரக்குறிப்புகள் (கசிந்தது)

டிஸ்ப்ளே : Vivo X Fold 3 Pro ஆனது 6.53 இன்ச் கவர் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம். இது 2748 x 1172 பிக்சல் அடர்த்தி பெறலாம். அதேசமயம் 8.03 இன்ச் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளே நிறுவப்படலாம். இதில் 2408 x 2200 பிக்சல் தெளிவுத்திறனை ஆதரிக்க முடியும்.

சிப்செட் : Vivo X Fold 3 Pro இல், பிராண்ட் பயனர்களுக்கு Snapdragon 8 Gen 3 சிப்செட்டை வழங்க முடியும். இதுமட்டுமின்றி இதில் V3 சிப்பும் கொடுக்கலாம்.

மெமரி : நினைவகத்தை சேமிக்க, இந்த ஃபோல்ட் ஃபோனில் 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி வரை உள் சேமிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

பேட்டரி: Vivo X Fold 3 Pro மொபைலில் 5,800mAh பேட்டரியும் அதனை சார்ஜ் செய்ய 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படலாம். இது தவிர 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இந்த மொபைலில் வழங்கலாம்.

கேமரா: Vivo X Fold 3 Pro ஆனது பின் பேனலில் டிரிபிள் கேமரா அமைப்பைப் பெறலாம். இதில் OIS உடன் 50-மெகாபிக்சல் OV50H முதன்மை, 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் மற்றும் + 64 மெகாபிக்சல் OV64B பெரிஸ்கோப், 3x ஆப்டிகல் ஜூம் சென்சார் இருக்கலாம். அதே நேரத்தில், 32 மெகாபிக்சல் முன் கேமரா மற்றும் 32 மெகாபிக்சல் உள் கேமரா செல்ஃபிக்கு கிடைக்கும்.

மற்றவை: இரண்டு டிஸ்ப்ளேகளிலும் அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர், டூயல் ஸ்பீக்கர்கள், ஐஆர் பிளாஸ்டர், எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் மற்றும் கண்ணாடி பின்புறத்துடன் கூடிய நீர்-எதிர்ப்பு சேஸ் போன்ற அம்சங்களுடன் இந்த மொபைல் வரக்கூடும்.