Vivo X100s படங்கள் கசிந்தன. வடிவமைப்பு & அம்சங்களும் தெரிய வந்தன.

Highlights

  • Vivo X100s மே மாதத்தில் வெளியாகம்.
  • இது கடினமான பூச்சுடன் ஒரு தட்டையான சட்டத்தைக் கொண்டிருக்கலாம்.
  • MediaTek Dimenity 9300+ சிப் போனில் கொடுக்கலாம்.

தற்போது, Vivoவின் X100 சீரிஸில் இரண்டு மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் Vivo X100 Ultra, Vivo X100s Pro மற்றும் Vivo X100s ஆகியவையும் இதில் வரலாம் என்று இப்போது செய்திகள் வந்துள்ளன. பெரிய விஷயம் என்னவென்றால், அறிமுகத்திற்கு முன்பே, அடிப்படை மாடலான X100S இன் படம் கசிந்துள்ளது. இதில் அதன் வடிவமைப்பை காணலாம். இதனுடன், சில முக்கிய குறிப்புகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த புதிய போனில் என்னென்ன இருக்குமென்பதை விரிவாகப் பார்ப்போம்.

Vivo X100s வடிவமைப்பு (கசிந்தது)

  • Vivo X100s மொபைல் தொடர்பான இந்த கசிவை GSMArena பகிர்ந்துள்ளது.
  • Vivo X100S ஒரு தட்டையான சட்டகத்தில் கடினமான பூச்சுடன் இருப்பதை கீழே உள்ள படத்தில் காணலாம். பின்புற பேனல் சிறிய வளைவுடன் (2.5D) கண்ணாடியால் ஆனது போல் தெரிகிறது.
  • போனின் பின்புறத்தில் பெரிய வட்ட வடிவ கேமரா மாட்யூல் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு கேமரா லென்ஸ்கள் மற்றும் LED ப்ளாஷ் இருக்கலாம்.
  • கசிவின் படி, Vivo X100s இன் கேமரா அமைப்பு X100 ஐப் போலவே உள்ளது. அதாவது 15 மிமீ அல்ட்ராவைடு சென்சார், 70mm பெரிஸ்கோப் லென்ஸ் மற்றும் 50MP f/1.6 பிரைமரி சென்சார் மற்றும் 15-70mm ஜூம் லென்ஸ் ஆகியவற்றைப் பெறலாம்.
  • புதிய Vivo X100s ஃபோன் 7.89மிமீ அளவுள்ள மிகவும் மெல்லியதாக இருக்கும்.