Home News 4 கேமராக்களோடு வெளியாகிறது Vivo X90 Pro+

4 கேமராக்களோடு வெளியாகிறது Vivo X90 Pro+

விவோ நிறுவனம் Vivo X90 Pro+ எனும் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. இணையத்தில் கசிந்த தகவலின்படி இந்த விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் மாடல் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

டிஸ்பிளே

ஆன்லைனில் கசிந்த விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் போனின் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம். விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் ஆனது 2கே ஆதரவு கொண்ட 6.78 அங்குல Samsung E6 AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகமாக இருக்கிறது.

சிப்செட்

இந்த விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதி உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

கேமரா

இந்த போனின் மிக முக்கியமான சிறப்பு என்றால் அது கேமரா தான். விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் போன் பின்பக்கத்தில் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் 50எம்பி பிரைமரி கேமரா + 48 megapixel ultra-wide angle shooter + 50எம்பி போர்ட்ரெயிட் சென்சார் + 64எம்பி periscope lens என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பேட்டரி

4700 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் வெளியாக இருக்கிறது. இந்திய சந்தையில் இந்த போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த விவோ Y52 5G (2022) ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

விவோ Y52 5G (2022)

இந்த விவோ Y52 5G (2022) ஸ்மார்ட்போன் 6.58 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1,080×2,408 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இயங்குதளம்

விவோ Y52 5G (2022) ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

விவோ Y52 5G (2022) ஸ்மார்ட்போன் ஆனது 48எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 8எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. விவோ Y52 5G (2022) ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இந்த விவோ Y52 5G (2022) ஸ்மார்ட்போன் தற்போது தைவானில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும்.