Helio P35 சிப்செட், 5000mAh பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது Vivo Y02A .

Highlights

  • விவோ வங்காளதேசத்தில் Vivo Y02A என்ற மொபைலை வெளியிட்டு இருக்கிறது
  • Vivo Y02A ஹீலியோ P35 சிப்செட்டைக் கொண்டுள்ளது.
  • 10W சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000mAh பேட்டரியும் இதில் இருக்கிறது

 

டிசம்பர் 2022 இல், Vivo இந்தியா நிறுவனம், Vivo Y02 என்ற குறைந்த விலை ஸ்மார்ட்போனை வெளியிட்டது . இப்போது, இந்நிறுவனம், Vivo Y02A என்ற மொபைலை வங்காளதேசத்தில் வெளியிட்டு இருக்கிறது. Y02 ஐப் போலவே, Y02A ஆனது அதே விவரக்குறிப்புகள் மற்றும் ஒரே மாதிரியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. Y02A மொபைலின் விவரக்குறிப்புகள், அம்சங்கள் மற்றும் விலை பற்றி இப்போது பார்க்கலாம்.

Vivo Y02A விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்

டிஸ்ப்ளே

Vivo Y02A ஆனது 6.51அங்குல ஐபிஎஸ் எல்சிடி ஸ்கிரீன் மற்றும் டியர் டிராப் நாட்ச்-ஐக்  (tear drop notch) கொண்டுள்ளது. இது 720 x 1600 பிக்சல்கள் HD+ அடர்த்தி மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதத்தை (Refresh rate) வழங்குகிறது. முன்பக்கத்தில், இது 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது, அதேசமயம் அதன் பின் பேனலில் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

 

சிப்செட் & மெமரி

ஹூட்டின் கீழ், Vivo Y02A ஹீலியோ P35 சிப்செட்டைக் கொண்டுள்ளது. Y02 ஆனது Helio P22 சிப்செட்டைக் கொண்டுள்ளது நினைவிருக்கலாம். Y02A ஆனது 3 ஜிபி ரேம், 32 ஜிபி உள் சேமிப்பு மற்றும் கூடுதல் சேமிப்பகத்திற்கான மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பேட்டரி & கனெக்டிவிட்டி

Vivo Y02A ஆனது 10W சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கனெக்டிவிட்டியைப் பொருத்தவரி இந்த மொபைல் இரட்டை சிம், 4G VoLTE, டூயல்-பேண்ட் Wi-Fi, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 (Go பதிப்பு) அடிப்படையிலான FunTouch OS 12 உடன் வெளியாகிறது. இந்த Y02A மொபைல், 163.99 x 75.63 x 8.49 மிமீ அளவையும் 186 கிராம் எடையையும் கொண்டுள்ளது.

 

விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Vivo Y02A பங்களாதேஷில் BDT 12,499 (~$117) விலையில் உள்ளது. இது காஸ்மிக் கிரே மற்றும் ஆர்க்கிட் ப்ளூ ஆகிய நிறங்களில் வருகிறது. இந்த Y02A மொபைல் வேறு எந்தெந்த நாடுகளில் கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இது தவிர, Vivo இந்தியா நிறுவனம், Vivo T2 5G மற்றும் Vivo T2x 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கைகளின்படி, டைமென்சிட்டி 700 மற்றும் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்கள் முறையே இந்த சாதனங்களுக்கு சக்தி அளிக்கின்றன. இரண்டு சாதனங்களும் Flipkart மூலம் ரூ. 20,000 (~$243)க்கு கீழ் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.