Home News 8+8 ஜிபி ரேம், நிறம் மாறும் பேனல் உடன் விவோ Y100!

8+8 ஜிபி ரேம், நிறம் மாறும் பேனல் உடன் விவோ Y100!

Highlights
  • அறிமுகத்துக்கு முன்பே விற்பனைக்கு வந்தது விவோவின் Y100
  • இது நிறம் மாறும் பேனலுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

Vivo Y100

விவோ (Vivo) நிறுவனம், அதன் ஸ்மார்ட்போன் பட்டியலில் புதிதாக Vivo Y100 என்ற மொபைலை அறிமுகம் செய்யவிருப்பதாக, கடந்த சில வாரங்களாக டீஸ் செய்து வந்தது. இந்த ஸ்மார்ட்போனை விவோ ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். காரணம், இது ரூ.20,000 முதல் ரூ. 30,000 விலைக்குள் கிடைக்கும் மிட் ரேஞ்ச் பிரிவில் வர இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இந்த போனின் ஸ்பெஷாலிட்டி என்று நிறுவனம் இதன் கலர் சேஞ்சிங் அம்சத்தையும் டீஸ் செய்திருந்தது. கலர் மாறும் மேஜிக் போனாக Vivo Y100 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

விற்பனை துவங்கியது

இதன் அறிமுகத்திற்காகக் காத்திருந்த நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இனி நீங்கள் காத்திருக்க  வேண்டியதில்லை. விவோ நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்வதற்கு முன்னதாக, Vivo Y100 ஸ்மார்ட்போனின் விற்பனையைத்  துவங்கிவிட்டது. சமீபத்தில் வெளியான ஒரு ஆப்லைன் ஷோரூம் தகவலின் படி, புதிய Vivo Y100 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துவிட்டது. Vivo Y100 ஸ்மார்ட்போன் இப்போது இந்தியாவின் பல ஆப்லைன் ஸ்டோர்ஸ்களில் கிடைக்கிறது. மிரட்டலான தோற்றத்துடன், இரண்டு கண்கவர் வண்ணங்களில் இந்த Vivo Y100 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

Vivo Y100 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

Vivo Y100 விலை

இந்த மொபைல் இப்போது இந்தியாவில் 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் ரூ. 24,999 என்ற விலைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இப்போது ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் உள்ள ஸ்பெக்ஸ் வைத்துப் பார்க்கையில், விவோ பிராண்ட்டை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த Vivo Y100 ஸ்மார்ட்போன் ஒரு ஸ்பெஷல் போனாக தான் திகழப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. இதன் 8ஜிபி அடிஷனல் ரேம் அம்சம் மற்றும் கலர் சேஞ்சிங் அம்சம் நம்மைச் சற்று கவர்ந்திழுக்கிறது. இந்த விலையில் உங்களுக்கு 16ஜிபி (8ஜிபி + 8ஜிபி) ரேம் கிடைப்பது உண்மையில் சிறப்பான விஷயம் தான். அதிக ரேம் கொண்ட போன் மற்றும் ஸ்மூத் ஸ்மார்ட்போன் அனுபவத்தை அதிக செலவின்றி அனுபவிக்க விரும்பும் மக்களுக்கு Vivo Y100 சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும்.