Home News 63MP முதன்மை, 32MP செல்ஃபி கேமராவோடு விவோ Y100 5ஜி மொபைல் வெளியாக இருப்பதாய் தகவல் கசிந்துள்ளது!

63MP முதன்மை, 32MP செல்ஃபி கேமராவோடு விவோ Y100 5ஜி மொபைல் வெளியாக இருப்பதாய் தகவல் கசிந்துள்ளது!

Highlights
  • விவோ நிறுவனம் விவோ Y100 எனும் ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
  • இந்த போன் 63MP முதன்மை கேமரா, 32MP செல்ஃபி கேமரா போன்ற அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 

விவோ நிறுவனம் அறிமுகம் செய்யும் போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ், ஒப்போ, மோட்டோ நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை விட விவோ நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைனில் கசிந்த விவோ Y100 போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சிப்செட்

விரைவில் அறிமுகமாகும் விவோ Y100 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு 5ஜி மொபைல் ஆகும். இது மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ARM Mali-G68 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

இயங்குதளம்

இந்த போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்கும். இந்த மொபைலின் பேனல் நிறம் மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

மெமரி

இணையதளத்தில் கசிந்த தகவலின்படி, 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இருக்கிறது. இதன் மூலம் மொபைலின் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.

டிஸ்ப்ளே

புதிய விவோ Y100 ஸ்மார்ட்போன் Full HD Plus AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் HDR 10 பிளஸ் ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.

கேமரா

63MP பிரைமரி கேமரா வசதியுடன் இந்த விவோ Y100 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32MP கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.

பேட்டரி

இந்த விவோ Y100 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய விவோ போன் அறிமுகமாக இருக்கிறது.

கனெக்டிவிட்டி

யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த விவோ போன் அறிமுகமாகும். அதேபோல் இந்த விவோ Y100 ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கருப்பு மற்றும் நீல நிறத்தில் இந்த விவோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

விலை

இந்த விவோ Y100 ஸ்மார்ட்போன் ரூ.27,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.