
Vivo Y35 கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அகேட் பிளாக் மற்றும் டான் கோல்ட் ஆகிய இரண்டு வண்ண வகைகளில் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்நிலையில் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, இப்போது இந்த போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. Vivo Y35 இப்போது 17,499 ரூபாய்க்கு பதிலாக 16,359 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆம், இப்போது இந்த போனின் விலை ரூ.1,140 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை ஒப்பீடு 91mobiles தளத்தில் வழங்கப்பட்டுள்ளது. (குறிப்பு: இந்த விலை மாறக்கூடியது.)
ரூ.1,000 கேஷ்பேக்
தள்ளுபடி தவிர்த்து, ஐசிஐசிஐ, எஸ்பிஐ, கோடாக் கார்டுகளில் போனை வாங்கினால் ரூ.1,000 ‘கேஷ்பேக்’கும் வழங்கப்படுகிறது. இந்த மொபைலின் விவரக்குறிப்புகள் பற்றிய தகவலை இப்போது பார்க்கலாம்.
Vivo Y35 இன் விவரக்குறிப்புகள்
டிஸ்ப்ளே
இந்த போனில் 6.58-இன்ச் FHD + 90Hz புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே உள்ளது.
செயலி, ரேம் & சேமிப்பு
இந்த Vivo Y35 மொபைலானது ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்டோடு வருகிறது. இது 6nm சிப்செட் அடிப்படையிலானது. இந்த போன் 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவுடன் வருகிறது. மேலும், சேமிப்பிற்காக 128ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.
பேட்டரி
இந்த போன் 44W ஃபிளாஷ் சார்ஜிங்குடன் வருகிறது. இந்த போனில் பவர் பேக்கப்பிற்காக 5000mAh பேட்டரி உள்ளது. Vivo Y35 ஆனது மல்டி டர்போ மற்றும் அல்ட்ரா கேம் முறைகளுடன் அதிவேக கேமிங்கிற்காக வருகிறது.
OS
இந்த போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனருடன் வருகிறது. இது FunTouch OS 12 அடிப்படையிலான Android 12 இல் வேலை செய்கிறது.
கேமரா
Vivo Y35 ஆனது டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 2MP பொக்கே மற்றும் 2MP மேக்ரோ கேமராவுடன் பெரிய சென்சார் கொண்ட 50MP பிரதான கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபி எடுக்க 16MP முன்பக்க கேமரா உள்ளது.
கனெக்டிவிட்டி
இந்த ஃபோன் 5G ஆதரவு கொண்ட ஃபோன் அல்ல. இது ஒரு 4ஜி போன் ஆகும். இது 4G VoLTE, ப்ளூடூத் 5.0, GPS/ GLONASS, USB Type-C மற்றும் Wi-Fi 802.11 ac (2.4GHz + 5Ghz) ஆகிய இணைப்பு விருப்பங்களைக் கொண்டுள்ளது.