Home News Google Play சான்றிதழைப் பெற்று பெயரை உறுதிப்படுத்தியது Vivo X Flip

Google Play சான்றிதழைப் பெற்று பெயரை உறுதிப்படுத்தியது Vivo X Flip

Highlights
  • Google Play சான்றிதழைப் பெற்று Vivo X Flip என்ற பெயரை உறுதிப்படுத்தி இருக்கிறது.
  • இது 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது.
  • Snapdragon 8+ Gen 1 SoC, 12GB RAM உடன் ஏப்ரல் மாதத்தில் சீனாவில் வெளியாக இருக்கிறது.

 

vivo நிறுவனத்தின் வரவிருக்கும் முதல் ஃபிளிப் மாடல்  ​​ஃபோல்டபிள்  போனைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்தபடி இருக்கிறது. தற்போது, Google Play சான்றிதழைப் பெற்றதன் மூலம் இந்த ஃப்ளிப் போன் Vivo X Flip என்ற பெயரில் வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இனி இந்த போனை Vivo X Flip என்றே அழைக்கலாம்.

விவோவின் பெயரிடும் முறையின்படி இது சரியான அர்த்தத்தைத் தருகிறது. ஏனெனில் X ஃபோல்ட் அதன் இன்னொரு மடிக்கக்கூடிய சீரிஸ் ஆகும். மேலும் X Flip ஆனது, Samsung’s Galaxy Z Flip4 மற்றும் Oppo’s Find N2 Flip உடன் போட்டியிடும் . அத்தகைய மொபைல்களின் பெயரில் “ஃபிளிப்” என்ற வார்த்தையிலிருந்து நீங்கள் தப்பிக்க விரும்பினால், நீங்கள் மோட்டோரோலாவை வாங்கலாம். ஏனெனில் மற்ற அனைவரது பெயரிலும் ‘ஃபிலிப்’ இருக்கிறது.

சிப்செட் & ரேம்

எப்படியிருந்தாலும், vivo X Flip ஆனது சமீபத்தில் Geekbench ஆன்லைன் தரவுத்தளத்தில் காணப்பட்டது , Snapdragon 8+ Gen 1 SoC 12GB RAM உடன் இணைக்கப்பட்டது. இது 44W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று சமீபத்திய 3C சான்றிதழ் வெளிப்படுத்தியது.

 

அம்சங்கள்

கடந்தகால வதந்தியின்படி ,  இந்த X flip போன் 6.8 அங்குல FHD+ 120 ஹெர்ட்ஸ் உள் திரை, 50 MP பிரதான கேமரா, 12 MP அல்ட்ராவைடு கேமராவோடு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மொபைல் 4,400 mAh பேட்டரியுடன் வரும். இது ஏப்ரல் மாதத்தில் சீனாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

Vivo X Fold2

இது ஒருபுறம் இருக்க Vivo நிறுவனத்தின் வரவிருக்கும் X Fold2 ஆனது AnTuTu இல் வெளிவந்துள்ளது.  இதன் மூலம் மொபைலின் முக்கிய விவரக்குறிப்புகள் தெரிய வந்துள்ளது.

புத்தகம் போன்று ​​மடிக்கக்கூடிய இந்த போன், மாடல் எண் PD2266 மற்றும் 12GB LPDDR5X RAM உடன் Snapdragon 8 Gen 2 சிப்செட் உடன் வெளியாகும் எனத் தெரிய வந்துள்ளது. மேலும் இது 512GB UFS 4.0 சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. கூடவே, 120Hz திறன் கொண்ட டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

 

மதிப்பெண்கள்

இந்த போனின் CPU மதிப்பெண் 288,246. GPU மதிப்பெண் 579,982. நினைவக மதிப்பெண் 256,004 மற்றும் UX மதிப்பெண் 193,860 உடன் இணைந்து மொத்தமாக 1,318,092 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

 

வசதிகள்

vivo X Fold2 ஆனது 120W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங், 50MP IMX866 முதன்மை கேமரா, 12MP IMX663 அல்ட்ராவைட் மற்றும் 12MP IMX663 ஜூம் கேமரா என மூன்று பின்பக்க கேமராக்களோடு வெளிவர இருக்கிறது. மேலும்  இது 4,800mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். விவோ X Fold2 மொபைலை எப்போது அறிவிக்கும் என்பது பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை, ஆனால் இது ஃபிளிப்-ஃபோல்டிங் X Flip உடன் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.