Home News லூடோ விளையாடுங்க.. லண்டன் போங்க!

லூடோ விளையாடுங்க.. லண்டன் போங்க!

இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான Vodafone Idea (Vi), இப்போது பயனர்களுக்கு லண்டனுக்கு இரண்டு பேர் பயணம் செய்யும் வாய்ப்பை வெற்றி பரிசாக வழங்குகிறது. ஆனால்.! அதற்கு நீங்கள் லூடோ விளையாட்டை விளையாடி வெல்ல வேண்டும்.

Vi நிறுவனம் நவம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி 2022 வரை, அதன் கேமிங் தளத்தில் லுடோ (Ludo) போட்டியை நடத்துகிறது. Ludo என்று சொன்னதும் பலருக்கும் இந்த கேம் எப்படி இயங்கும் என்பது தெரிந்திருக்கும். இது சின்ன பிள்ளைகள் விளையாடும் விளையாட்டாக இருந்தாலும் கூட, கடந்த சில ஆண்டுகளில் இந்த கேமை பெரியவர்கள் தான் அதிகம் டவுன்லோட் செய்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

நண்பர்களுடன் பப்ஜி, ஃப்ரீ ஃபயர் என்று ஆன்லைனில் விளையாடும் கும்பல் ஒன்று தனியாகச் சுற்றுவது போல, ஆன்லைனில் நண்பர்களுடனும், உறவினர்களுடன் லுடோ விளையாடும் கும்பல் இப்போது இந்தியாவில் பெருகிவிட்டது. இந்த சந்தர்ப்பத்தை வோடபோன் ஐடியா நிறுவனம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி இருக்கிறது.

எக்ஸ்பிரஸ் லுடோ

Vi நிறுவனம் இப்போது புதிதாக ‘எக்ஸ்பிரஸ் லுடோ டோர்னமென்ட்’ (Express Ludo Tournament) என்ற பெயரில் ஒரு ஓபன் கேமிங் போட்டியை அறிவித்துள்ளது. இது ஸ்மார்ட்போன்களுக்கான Vi ஆப்ஸில் உள்ள Vi Games இயங்குதளத்தில் மட்டுமே விளையாடக் கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது. இந்த தளத்தில் விளையாடி வெற்றி பெரும் போட்டியாளர்களுக்குப் பல பரிசுகளை Vi வழங்குகிறது.

பரிசுகள் எப்படி வழங்கப்படும்?

இந்த போட்டியில் தரவரிசையின் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த எக்ஸ்பிரஸ் லுடோ டோர்னமென்ட் போட்டியில் பங்கேற்கும் பயனர்கள் லண்டன் பயணத்தை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம். அதுவும் 2 நபர்களுக்கு இந்த இலவச லண்டன் ட்ரிப் டிக்கெட் பரிசாக வழங்கப்படும் என்று வோடபோன் கூறியுள்ளது.

தினசரி பரிசுகள் & Amazon கிஃப்ட் வசுச்சர்

இது தவிர, இந்த எக்ஸ்பிரஸ் லுடோ டோர்னமென்ட் போட்டியில் பங்குபெறும் பங்கேற்பாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் Amazon கிஃப்ட் வவுச்சர்களையும் (Amazon Gift Vouchers) வெல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த விளையாட்டுப் போட்டியில் பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் அதிக விளையாட்டுகளை விளையடுவது மற்றும் போட்டிக்கான டிக்கெட்டுகளை வெல்வது.. லண்டன் பயணத்திற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்று Vi கூறியுள்ளது.

எல்லாம் வோடபோன் செலவு

இந்த இலவச லண்டன் ட்ரிப் பரிசில், 2 நபர்களுக்கான விமான டிக்கெட்டுகள் மற்றும் இருவர் தங்குவதற்குத் தேவையான கட்டணங்கள் உட்பட அனைத்தும் அடங்கும் என்று Vi கூறியுள்ளது. வோடபோன் ஐடியா தனது சமூக ஊடகப் பக்கங்களில் வெற்றியாளர்களின் பெயர்களை அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளது. இது தவிர, Vi ஆப்ஸில் Vi கேம்களின் கீழ் தம்போலா (Tambola) நைட்ஸை இயக்குவதன் மூலம் சாதாரண ஆன்லைன் கேமர்களை Vi மகிழ்வித்து வருகிறது.

எப்போது விளையாடுவது?

இது தினமும் இரவு 8 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒருமுறை தாம்போலா விளையாட்டு நடைபெறும் என்று Vi அறிவித்துள்ளது. இலவசமாக லண்டன் சுற்றுலா செல்ல விரும்பினால் உடனே Vi Games இல் இருந்து இந்த கேமை விளையாடுங்கள். பயனர்கள் எந்த டிக்கெட் கட்டணமும் இல்லாமல் தாம்போலா விளையாடி மகிழலாம். இதன் மூலம் ஒரு புல் ஹவுஸிற்கும் அல்லது ஒரு லைன் அல்லது 5 முறை கேஷ் வவுச்சர்களையும் வெல்லலாம் என்று அறிவித்துள்ளது.