பாட்டு கேளுங்க! பரிசை வெல்லுங்க!

Vi Mobile ஆப் மூலம் அதிக நேரம் பாடல்களைக் கேட்கும் பயனர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என டெலிகாம் டாக் தளத்தில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது குறித்து வெளியான தகவலை விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக வோடபோன் ஐடியா (Vi) இருக்கிறது. முதலிடத்தில் ஜியோவும், இரண்டாவது இடத்தில் ஏர்டெல்லும் இருக்கிறது. ஜியோவும் ஏர்டெல்லும் கடுமையான போட்டியை எதிர்கொண்டு வரும் நேர்ததில், மூன்றாவது நிறுவனமாக இருக்கும் ஏர்டெல் இந்த இரண்டு நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல் கடுமையாக திணறி வருகிறது.

இந்நிலையில் ஜியோ குறைந்த விலையில் அதிக சலுகைகளுடன் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. ஏர்டெல் நிறுவனம் சிறந்த வேகத்தில் இணைய சேவை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. ஆனால் விஐ சமீபகாலமாக தொடர்ந்து வாடிக்கையாளர்களை இழந்தபடி இருக்கிறது. இதனையடுத்து விஐ வாடிக்கையாளர்களை தக்க வைக்க அவ்வப்போது சில கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படியான ஒரு அறிவிப்பை தான் இதுவும்.

Vi பயனர்களுக்கு ஐபேட் மற்றும் அமேசான் வவுச்சர்களை வெல்லும் வாய்ப்பை அறிவித்துள்ளது. Vi பயன்பாட்டில் குறைந்தபட்சம் 5 பாடல்களை பிளே லிஸ்ட்டில் உருவாக்குவதே பரிசுக்கான முதல் தகுதியாகும். அதிகம் கேட்கும் பயனர்கள் அதிக வெற்றி பெறுவார்கள் என வோடபோன் ஐடியா தெரிவித்துள்ளது. Vi மொபைல் செயலிக்குள் இசை தளத்தை அறிமுகப்படுத்த ஹங்காமாவுடன் விஐ சமீபத்தில் கூட்டு சேர்ந்தது.

Vi Mobile ஆப் மூலம் அதிக நேரம் பாடல்களைக் கேட்கும் பயனர்கள் விருதுகளை வெல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விஐ பயனர்கள் பிற பயன்பாடுகள் மூலம் இசையை ஸ்ட்ரீமிங் செய்து வந்தால் அதை கைவிட்டுவிட்டு Vi மொபைல் பயன்பாட்டிற்கு மாறிவிடுங்கள். விஐ பயன்பாட்டில் இசை மற்றும் பாட்காஸ்ட்களை கேளுங்கள். அப்படி கேட்கும்பட்சத்தில் பரிசுகளை வெல்வதற்கு தகுதியானவர்களாக நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். இதனையடுத்து எளிய கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஐபேட், அமேசான் கிஃப்ட் வவுச்சர் போன்றவை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட டாப் 26 பங்கேற்பாளர்களில் முதலில் வருபவர்களுக்கு iPadம், மற்ற 25 பேருக்கு 25 Amazon Gift Voucherகளும் பரிசாக வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த சலுகை செப்டம்பர் 16, 2022 வரை மட்டுமே செல்லுபடியாகும். வோடபோன் ஐடியா (Vi) நிறுவங்கள் இணைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இந்த போட்டி நடத்தப்படுவதாக விஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், Vi செயலியில் ஹங்காமா உடன் வோடபோன் ஐடியா இணைந்து வழங்கும் இசை பயன்பாட்டை ஊக்குவிக்க நிறுவனம் எடுக்கும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ரிலையன்ஸ் ஜியோ தனது 6-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ரீசார்ஜ் செய்யும் குறிப்பிட்ட பயனர்களுக்கு தினசரி ரூ.10 லட்சம் வரை பரிசு தொடர்ந்து 6 நாட்களுக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.