Home News வால்வோ எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

வால்வோ எலெக்ட்ரிக் கார் அறிமுகம்


வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய 2022 வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலை அறிமுகம் செய்திருக்கிறது. புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 55,90,000 ஆயிரம் ஆகும்.

இந்த மாடல் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் வினியோகம் அக்டோபர் மாதத்தில் துவங்க இருக்கிறது. வெளிப்புறம் புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலில் பிளான்க்டு-அவுட் கிரில், பூட்லிட் மீது ரிசார்ஜ் பேடஜ் கொண்டு இருக்கிறது. இத்துடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், 19 அங்குல அளவில் டூயல் டோன் அலாய் வீல்கள், முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பரில் பிளாக் நிற கிளாடிங், செங்குத்தாக பொருத்தப்பட்ட எல்இடி டெயில் லைட்கள் உள்ளன.

காரின் உள்புறத்தில் 12 அங்குல அளவில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், மெமரி ஃபன்ஷன், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 13 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம், செங்குத்தாக பொருத்தப்பட்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலில் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 402 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 418 கி.மீ. வரையிலான ரேன்ஜ்-ஐ வழங்குகிறது.