போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?

தரையில் விழும் போனை விட தண்ணீரில் விழும் போன்களுக்கு (water damage phones) தான் அதிக பாதிப்பு ஏற்படும்.

காரணம், கண்டிப்பாக உங்களுக்கே தெரிந்திருக்கும். உங்கள் போனில் இருக்கும் சார்ஜிங் போர்ட் (charging port), ஸ்பீக்கர் கிரில் (speaker grill), மைக் ஹோல் (mic hole) போன்ற சிறிய-சிறிய கேப் மூலம் தண்ணீர் போனிற்குள் புகுந்துவிடும். இது உள்ளே இருக்கும் பாகங்களை பாதிப்படையச் செய்கிறது. முக்கியமாக, மதர் போர்ட் (mother port) வரை பாதிப்படையச் செய்கிறது. இதனால், உங்களுடைய முழு மொபைலும் டெட் ஸ்டேஜ்ஜிற்கு (mobile dead stage) சென்றுவிடக் கூட வாய்ப்புகள் உள்ளது.

என்ன செய்ய வேண்டும்?

உங்கள் ஸ்மார்ட்போன் தண்ணீர் விழுந்தாலோ அல்லது தண்ணீர் உங்கள் போன் மீது விழுந்தாலோ – நீங்கள் உடனே செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத விஷயங்களைப் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். இந்த சூழ்நிலையை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்பதனால், இவற்றை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்வது அவசியம். சரி, வாருங்கள் விஷயத்திற்குச் செல்லலாம்.

  • உங்கள் போன் தண்ணீரில் விழுந்தால் அதை உடனடியாக நீரில் இருந்து அகற்றவும்.
  • போன் அதிக நேரம் நீரில் இருந்தால், பெரிய பாதிப்பை உருவாக்கும்.
  • எனவே அவற்றை விரைந்து வெளியில் எடுப்பது சிறப்பானது.
  • தண்ணீர் பல்வேறு நுழைவாயில்கள் வழியாக உள்ளே சென்றிருக்கக் கூடும்.
  • உங்கள் போனை உடனே ஆஃப் செய்து விட்டு விடுங்கள்.
  • உங்கள் போனின் இடையில் இருக்கும் நீரை எடுக்க ஊதிவிட வேண்டாம். இதை மட்டும் செய்யவே கூடாது!

உடனடியாக செய்ய வேண்டியவை

  • போன் கேஸை உடனே அகற்றவும்.
  • உங்கள் போனின் பின்புறம் திறக்கும் அம்சத்துடன் இருந்தால், பின் பேனலை கழட்டிவிடுங்கள்.
  • பின்புறத்தைத் திறந்து பேட்டரி, சிம் கார்டு மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டுகளை அகற்றவும்.
  • உங்கள் போனை உலர வைக்க ஒரு துணி அல்லது காகிதங்களை பயன்படுத்தவும்.
  • போனை உலர வைக்கும் போது அழுத்தமாகத் தேய்க்க வேண்டாம்.
  • பதட்டத்தில் ‘அழுத்தமாக’ இந்த செயல்களை செய்யாதீர்கள்!
  • அவ்வாறு செய்தால், எதிர்பாராமல் போனின் உள்ளே அதிக நீரை தள்ளிவிடும்.
  • போன் முழுவதுமாக நீரில் மூழ்கியிருந்தால், அதே வெளியே எடுத்தவுடன் வாக்யூம் செய்து நீரை உறிஞ்ச வேண்டும்.
  • உங்கள் போனை வெயிலில் காய வைக்க வேண்டாம்.
  • உலர்ந்த நிழலான இடத்தில் போனை வைக்கவும்.
  • உங்கள் ஃபோன் ஈரமாக இருந்தால் அதை அரிசியில் போட வேண்டும் என்ற ஐடியாவை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
  • அப்படி செய்வது மிக சரியான வழி இல்லை.
  • அதற்கு பதிலாக, சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகளை முயற்சிக்கவும்.

எவ்வளவு நேரம் கழிந்த பின் உங்கள் போனை ON செய்ய வேண்டும்?

  • உங்களுக்கு வரும் பார்சல் உள்ளே இந்த ஜெல் பாக்கெட்களை நீங்கள் காண முடியும். இவை தனியாகவும் வாங்க கிடைக்கிறது. இவை அரிசியை விட மிகவும் வேகமாக நீரை உறிஞ்சும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • ஒரு பிளாஸ்டிக் ஜிப்-டாப் பையில் சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகளை நிரப்பி, அதில் போனை புதைக்கவும்.
  • உங்கள் மொபைலை 24-48 மணிநேரம் பையில் வைக்கவும்.
  • உங்கள் மொபைலை முழுமையாக உலர அனுமதித்த பிறகு, அதை இயக்கவும்.
  • அது இப்போதே ஆன் ஆகவில்லை என்றால், அதை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டு மீண்டும் ஆன் செய்யவும்.
  • போன் ஆன் செய்யப்பட்ட அடுத்த 48 மணி நேரம் அல்லது 1 வாரம் வரை உங்கள் போனை கண்காணிக்கவும்.
  • வேறு ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், சர்வீஸ் சென்டரில் கொடுத்து பழுது பார்க்கவும்.