ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 இந்த வருடத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் 3 மாடல்களில் வரும் எனத் தெரிகிறது. தற்போதைய தகவலின் படி ஆப்பிள் ‘Extreme sports’ வகை ஒன்றை இவ்வருடம் வெளியிட திட்டம் தீட்டியுள்ளது.
அந்த வாட்சே ஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளியிட்ட வாட்சுகளில் மிகப்பெரிய டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது. ஏறத்தாழ இரண்டு அங்குலம் வரை குறுக்களவு கொண்ட திரை இருக்கலாம். 410×502 pixels resolutionஐ கொண்டிருக்கும். அதேபோல் பெரிய பேட்டரி, மெட்டல் கேசிங் என புதிய மாற்றங்களோடு வெளியாக இருக்கிறது.
இந்த புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 காய்ச்சலை கண்டுணறக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் காய்ச்சலைக் கண்டுபிடித்து தேவைப்படின் மருத்துவரை அழைக்கவோ அல்லது பிரத்யேக தெர்மோமீட்டரை பயன்படுத்தவோ பரிந்துரைக்கும்.